Toyota Discounts: இந்தியாவின் பிரபலமான கார் விற்பனை நிறுவனம் டொயோட்டோ. ஒவ்வொரு கார் நிறுவனம் ஒவ்வொரு மாதமும் வாடிக்கையாளர்களைத் தக்கவைப்பதற்காக தள்ளுபடி தருவது வழக்கம்.

தள்ளுபடி:

அந்த வகையில், டொயோட்டோ நிறுவனம் தனது சில கார்களுக்கு மார்ச் மாத தள்ளுபடியை அறிவித்துள்ளது.

1. Toyota Glanza Petrol - அதிகபட்சமாக ரூபாய் 30 ஆயிரம் வரை தள்ளுபடி

2. Toyota Taisor Turbo Petrol - அதிகபட்சமாக ரூபாய் 20 ஆயிரம் தள்ளுபடி

3. Toyota Taisor Non-Turbo Petrol - அதிகபட்சமாக ரூபாய் 10 ஆயிரம் தள்ளுபடி

4. Toyota Hyryder Smart Hybrid - ரூபாய் 45 ஆயிரம் வரை தள்ளுபடி

Toyota Glanza Petrol:

டொயோட்டாவின் Toyota Glanza Petrol வேரியண்ட் காருக்கு மார்ச் மாத ரொக்கத் தள்ளுபடியாக ரூபாய் 15 ஆயிரமும், எக்சேஞ்ச் போனஸ் ரூபாய் 15 ஆயிரமும் தள்ளுபடியாக அதிகபட்சமாக ரூபா் 30 ஆயிரம் வரை தள்ளுபடி அளிக்கப்பட உள்ளது. டொயோட்டோ கிளான்சா காரின் விலை ரூபாய் 7.75 லட்சம் முதல் ரூபாய் 11.25 லட்சம் வரை ஆகும்.

Toyota Taisor Turbo Petro:

டொயோட்டோ நிறுவனத்தின் Toyota Taisor Turbo Petro காருக்கு ரொக்கமாக ரூபாய் 10 ஆயிரமும், எக்சேஞ்ச் போனஸ் ரூபாய் 10 ஆயிரமும் அளிக்கப்பட்டுள்ளது. அதிகபட்சமாக ரூபாய் 20 ஆயிரம் வரை தள்ளுபடி அளிக்கப்பட்டுள்ளது. இந்த காரின் விலை ரூபாய் 8.67 லட்சம் முதல் ரூபாய் 15.37 லட்சம் வரை ஆகும்.

Toyota Taisor Non-Turbo Petrol:

இந்த Toyota Taisor Non-Turbo Petrol காருக்கு எக்சேஞ்ச் ஆஃபராக ரூபாய் 10 ஆயிரம் வரை அளிக்கப்பட உள்ளது. இந்த காரின் விலை ரூபாய் 8.67 லட்சம் முதல் ரூபாய் 15.37 லட்சம் ஆகும்.

Toyota Hyryder Smart Hybrid:

இந்த Toyota Hyryder Smart Hybrid காருக்கு ரொக்கமாக ரூபாய் 25 ஆயிரம் வரை ரொக்கத் தள்ளுபடியாக அளிக்கப்பட்டுள்ளது. எக்சேஞ்ச் ஆஃபராக ரூபாய் 20 ஆயிரமும் தள்ளுபடி அளிக்கப்பட்டுள்ளது. அதிகபட்சமாக ரூபாய் 45 ஆயிரம் வரை ரொக்கத் தள்ளுபடியாக அளிக்கப்பட்டுள்ளது.

Toyota Hyryder Strong Hybrid:

டொயோட்டோ நிறுவனத்தின் Toyota Hyryder Strong Hybrid காருக்கு ரொக்கத் தள்ளுபடியாக ரூபாய் 20 ஆயிரமும், எக்சேஞ்ச் ஆஃபராக ரூபாய் 25 ஆயிரமாகவும் வழங்கப்பட்டுள்ளது. மார்ச் மாதம் ரூபாய் 45 ஆயிரம் வழங்கப்பட உள்ளது.