Google Year in Search: 2025 ஆம் ஆண்டில் பயணம் முன்னெப்போதையும் விட அதிகமாகிவிட்டது. மக்கள் அதிகமாகப் பயணம் செய்கிறார்கள். அனுபவங்களைத் தேடுவது உலகளாவிய உண்மையாகிவிட்டது. சமூக ஊடகங்களைத் திறந்தால் போதும், எல்லோரும் உலகின் ஏதோ ஒரு மூலையில் ஒரு பயணத்தில் இருக்கிறார்கள். ஆண்டு முடிவடையும் நிலையில் நாம் இருக்கின்றோம். இந்த நிலையில், கூகுள் 2025 ஆம் ஆண்டின் இந்தியாவின் சிறந்த பயண தேடல் பட்டியலை வெளியிட்டுள்ளது. மேலும் இது இந்திய பயணிகளின் பட்டியல்கள் எவ்வளவு மாறுபட்டுள்ளன என்பதை வெளிப்படுத்துகிறது.

இந்த வருடாந்திர பட்டியல், ஆண்டு முழுவதும் இந்தியர்கள் எதில் அதிக ஆர்வம் கொண்டிருந்தார்கள் என்பதைப் பிரதிபலிக்கிறது. மேலும், அலைந்து திரியும் ஆர்வத்தைப் பொறுத்தவரை, இந்திய பயணிகள் ஆன்மீக சுற்றுலாவின் மீது அதிகம் நாட்டத்தை காட்டியுள்ளனர் என்பதை காட்டுகிறது.

இந்தியர்களின் மிகவும் பிரபலமான பயணத் தேடல் எது?

இந்தியாவின் மிகவும் பிரபலமான பயணத் தேடல் கடற்கரைகள், மலைகள் அல்லது அமைதியான தங்குமிடங்கள் என்று நாம் நினைத்திருப்போம். ஆனால் அதான் கிடையாது. மகா கும்பமேளாதான் பயணம் செய்ய அதிகம் விரும்பியுள்ளனர். (இது 144 ஆண்டுகளுக்கு ஒரு முறை நிகழ்கிறது).

உங்களால் யூகிக்க முடிந்ததா?

பின்னோக்கிப் பார்த்தால், 2025 ஆம் ஆண்டு மகா கும்பமேளா நாட்டிற்கு பெரிய நிகழ்வாக இருந்துள்ளது. இது இந்தியாவில் 2025 ஆம் ஆண்டுக்கான பயணத்திற்கான கூகுளின் சிறந்த பிரபலமான தேடல்களில் முதலிடத்தைப் பிடித்தது மட்டுமல்லாமல், செய்தி நிகழ்வுகள் மற்றும் ஒட்டுமொத்தமாக சிறந்த பிரபலமான தேடல்களிலும் இடம்பெற்றுள்ளது. இது ஆன்மீக சுற்றுலாவின் வளர்ச்சியை எப்படி உயர்த்தியுள்ளது. என்பதைக் காட்டுகிறது. அதுவும் தலைமுறை தலைமுறையாக.

இந்தியாவின் ஆன்மீக பாரம்பரியம் சர்வதேச கவனத்தைப் பெற்று வரும் இந்த நேரத்தில், உலக ஆன்மீக-சுற்றுலா வரைபடத்தில் இந்தியா உறுதியாக நிலைநிறுத்த மகா கும்பமேளா உதவியுள்ளதாக பல பயண நிபுணர்கள் கூறுகின்றனர்.

பல வழிகளில், வாரணாசி, ரிஷிகேஷ் மற்றும் புத்தகயா போன்ற இடங்களை பயணிகள் ஆராய்வதற்கான நுழைவாயிலாகவும் இது மாறியது. மேம்படுத்தப்பட்ட டிஜிட்டல் தளங்கள் மற்றும் வழிகாட்டப்பட்ட சுற்றுப்பயணங்கள் வெளிநாட்டு பார்வையாளர்களுக்கும் இந்த அனுபவத்தை மேலும் அணுகக்கூடியதாக மாற்றியுள்ளன. ஆன்மீக-சுற்றுலா அலையுடன் சேர்த்து, மற்றொரு முக்கிய யாத்திரை மையமான சோம்நாத், சிறந்த பிரபலமான தேடல்கள் பட்டியலில் ஒன்பதாவது இடத்தைப் பிடித்தது.ஆன்மீகத்தில் இந்தியா உச்சத்திற்குஉயர்ந்தபோதும், பயணத் திட்டங்களில் கடற்கரை மற்றும் தீவுகள் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தின.

தெற்காசியாவில் பயணம் மேற்கொள்ள ஆர்வத்தை காட்டுவதாக இந்த பட்டியல் பிரதிபலிக்கிறது . பிலிப்பைன்ஸ் (2வது இடம்), வியட்நாமில் உள்ள ஃபூ குவோக் (6வது இடம்), தாய்லாந்தில் உள்ள ஃபூகெட் (7வது இடம்) மற்றும் மாலத்தீவுகள் (8வது இடம்) போன்ற இடங்களும் பட்டியலில் இடம் பெற்றுள்ளன.

2025 தேடல் பட்டியலில் இடம்பிடித்த புதுச்சேரி

சர்வதேச சுற்றுலாப் பயணிகளுக்கு ஜார்ஜியா மற்றொரு விருப்பமான இடமாக உள்ளது. இது மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது. அதன் அழகிய பின்னணிகள், அழகான ஐரோப்பிய பாணி வீதிகள் மற்றும் பாரம்பரியத்தில் வேரூன்றிய சமையல் பாரம்பரியம் ஆகியவை அங்கு செல்ல ஆர்வத்தை அதிகரிக்கின்றன. காஷ்மீர் (5வது இடம்), மாலத்தீவுகள் (8வது இடம்) மற்றும் புதுச்சேரி (10வது இடம்) ஆகியவையும் மிகவும் பிரபலமான தேடல் பட்டியலில் இடம் பெற்றன. ஜார்ஜியா மற்றும் காஷ்மீர் 2024 ஆம் ஆண்டின் தேடல் பட்டியலில் முறையே ஆறாவது மற்றும் ஒன்பதாவது இடங்களில் இடம்பெற்றன என்பது குறிப்பிடத்தக்கது.