Top 10 News: வெற்றியுடன் தொடங்குமா இந்தியா? சிவில் சர்வீஸ்  தேர்வு - நாளை வரை அவகாசம் - டாப் 10 செய்திகள்

10 months ago 6
ARTICLE AD

ரேகா குப்தா இன்று பதவியேற்பு

டெல்லியின் புதிய முதலமைச்சராக தேர்வு செய்யப்பட்டுள்ள ரேகா குப்தா இன்று பதவியேற்பு. டெல்லியில் உள்ள ராம்லீலா மைதானத்தில் பகல் 12.35 மணிக்கு பதவியேற்பு விழா நடைபெறுகிறது. முதலமைச்சருடன் சேர்த்து 6 அமைச்சர்கள் பங்கேற்க உள்ளதாக தகவல். மொத்தம் உள்ள 70 தொகுதிகளில் 48-ல்
வென்றுஆட்சியை பிடித்தது பாஜக.

”குளிக்க மட்டுமல்ல, குடிக்கவும் உகந்தது"

பிரயாக்ராஜ் ஆற்று நீர் குளிப்பதற்கு ஏற்றதுதான். ஏன் குடிக்கவும் உகந்ததுதான்"என்று உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் பேசியுள்ளார். முன்னதாக பிரயாக்ராஜில் கோடிக்கணக்கானோர் நீராடியதால் மனிதக் கழிவுகள் மூலம் பரவும் 'ஃபீக்கல் கோலிஃபார்ம்' நுண்ணுயிரிகள் அதிகரித்திருப்பதாக தேசிய பசுமை தீர்ப்பாயத்திடம் மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் அறிக்கை சமர்ப்பித்திருந்தது.

சிவில் சர்வீஸ்  தேர்வு - நாளை வரை அவகாசம்

சிவில் சர்வீஸ் முதல்நிலை தேர்வுக்கு விண்ணப்பிக்கும் அவகாசம் நாளையுடன் (பிப்.21) முடிவடைகிறது. மே 25ம் தேதி நடைபெறவுள்ள முதல்நிலை தேர்வுக்கு https//upsc.gov.in எனும் வலைதளத்தில் விண்ணப்பிக்கலாம்; பிப்.22 முதல் 28ம் தேதி வரை விண்ணப்பத்தில் திருத்தம் செய்யலாம்.

நியூசிலாந்து வெற்றி!

சாம்பியன்ஸ் டிராபி தொடரின் முதல் போட்டியில் 60 ரன்கள் வித்தியாசத்தில், நடப்பு சாம்பியன் பாகிஸ்தானை வீழ்த்தியது நியூசிலாந்து அணி. இந்த போட்டியில் சதம் விளாசிய நியூசிலாந்து கேப்டன்  லேதம் (118) ஆட்டநாயகன் விருதை வென்றார். தனது 2வது லீக் ஆட்டத்தில் வரும் 23ம் தேதி இந்தியாவை துபாயில் எதிர்கொள்கிறது பாகிஸ்தான் அணி

தொடர்ந்து உயரும் தங்க விலை:

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.280 உயர்ந்து ஒரு சவரன் ரூ.64,560-க்கும், ஒரு கிராம் ரூ.8,070-க்கும் விற்பனை

வெற்றியுடன் தொடங்குமா இந்தியா?

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் வங்கதேசத்துக்கு எதிரான போட்டியில் இன்று களமிறங்குகிறது இந்தியா. துபாயில் இன்று பிற்பகல் 2.30 மணிக்கு ஆட்டம் தொடங்குகிறது. இந்தியா - வங்கதேசம் இதுவரை மோதியுள்ள 41 ஒருநாள் போட்டிகளில், இந்தியா 32 போட்டிகளில் வெற்றிபெற்றுள்ளது. இந்த ஆதிக்கம் தொடருமா என ரசிகர்கள் எதிர்பார்ப்பு.

மீட்ட துணை முதல்வர்:

வாரணாசியில் சிக்கிய மாற்றுத்திறனாளி கிரிக்கெட் வீரர்கள் விமானத்தில் சென்னை வருகின்றனர் துணை முதல்வர் உதயநிதி உத்தரவின் பேரில், விமானம் மூலம் பெங்களூரு வழியாக வீரர்களை சென்னை அழைத்து வர மாற்றுத்திறனாளிகள் நலத்துறை ஏற்பாடு; கும்பமேளா கூட்டத்தால் 6 தமிழ்நாடு வீரர்கள் உள்ளிட்ட 11 பேர் சென்னை திரும்பமுடியாமல் தவித்தனர்.

கொசுவுக்கு காசு:

லிப்பைன்ஸ் நாட்டில் உள்ள மண்டலுயோங் கிராமத்தில் கொசுக்களை உயிருடனோ, கொன்றோ பிடித்துக்கொடுத்தால் சன்மானம் வழங்கப்படும் என அறிவிப்பு. டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த உள்ளூர் நிர்வாகம் நூதன முயற்சி! 5 கொசுவிற்கு ₹1.50 வழங்கப்படுகிறது.

கெட்டுப்போன மீன்கள்:

கும்பகோணம் மாநகராட்சி மீன் அங்காடியில் உணவு பாதுகாப்புத் துறை அலுவலர்கள் நடத்திய திடீர் சோதனையில் கெட்டுப்போன 150 கிலோ மீன்கள் பறிமுதல் செய்யப்பட்டு பினாயில் ஊற்றி அழிக்கப்பட்டன.

அரிய வகை பொருட்கள் கண்டெடுப்பு:

விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டையில் நடைபெற்று வரும் மூன்றாம் கட்ட அகழாய்வில் கல்மணி, பச்சை நிற கண்ணாடி மணி, சுடுமண் முத்திரை, சங்கு வளையல் என பல தொல்லியல் பொருட்கள் கண்டெடுக்கப்பட்டன.

Read Entire Article