Top 10 News: ”மத்திய அரசின் சேட்டை” சீமான் ஆவேசம், வெளிநாட்டவர் வீடு வாங்க தடை - டாப் 10 செய்திகள்

10 months ago 7
ARTICLE AD

தமிழ்நாட்டில் நாளை ஆர்பாட்டம்

தமிழ்நாட்டின் உரிமைகளை சிதைக்க முயற்சிகளை எடுக்கும் மத்திய பாஜக அரசை கண்டித்து, இந்தியா கூட்டணி கட்சிகள் சார்பில் சென்னையில் நாளை (பிப்.18) மாலை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிப்பு பட்ஜெட்டில் புறக்கணிப்பு, தமிழ்நாட்டுக்கு தேவையான கல்வி நிதியை விடுவிக்காதது, மும்மொழிக்கொள்கை திணிப்பு ஆகியவற்றை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது

மீண்டும் உயர்ந்த தங்கம் விலை

தங்கம் விலை மீண்டும் உயர்ந்து பொதுமக்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது. அதன்படி, ஒரு சவரன் ஆபரண தங்கத்தின் விலை 40 ரூபாய் உயர்ந்து, 63 ஆயிரத்து 520 ரூபாயை எட்டியுள்ளது. மேலும், ஒரு கிராம் ஆபரண தங்கத்தின் விலை 50 ரூபாய் அதிகரித்து 7 ஆயிரத்து 940 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

மத்திய அரசின் தேவையில்லாத சேட்டை - சீமான்

மும்மொழிக் கொள்கையை ஏற்றால்தான் தமிழ்நாட்டிற்கு கல்வி நிதி வழங்கப்படும் என மத்திய அரசு கூறுவது நாட்டின் இறையாண்மைக்கு ஏற்புடையதல்ல; இது தேவையில்லாத சேட்டை -நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்

90 புதிய வீடுகளுக்கு அடிக்கல்

கன்னியாகுமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரம் ஊராட்சி பகுதியில் முகாம் வாழ் இலங்கைத் தமிழர்களுக்கு ₹11.44 கோடி செலவில் கட்டப்பட்ட 172 புதிய வீடுகளை அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, நாசர் ஆகியோர் இன்று திறந்து வைக்கின்றனர் மேலும், 90 புதிய வீடுகள் கட்டவும் இன்று அடிக்கல் நாட்டப்பட உள்ளது.

தலைநகர் டெல்லியில் லேசான நில அதிர்வு

டெல்லி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இன்று அதிகாலை 5.36 மணிக்கு லேசான நில அதிர்வு உணரப்பட்டுள்ளது. ரிக்டர் அளவில் 4 ஆக பதிவாகியுள்ள இந்த நில அதிர்வு, படுக்கையில் உணரப்பட்டதாக பலரும் சமூக வலைதளத்தில் பதிவு. பொதுமக்கள் அமைதி காக்க வேண்டும் என, பிரதமர் மோடி வலியுறுத்தல்

10 நாட்களில் 322 இந்தியர்கள் நாடு கடத்தல்:

அமெரிக்காவில் சட்ட விரோதமாக நுழைந்து, அங்கிருந்து வெளியேற்றப்பட்ட 112 இந்தியர்களுடன் மூன்றாவது விமானம், பஞ்சாபின் அமிர்தசரஸ் விமான நிலையத்தில் நேற்றிரவு தரையிறங்கியது இவர்களில் 44 பேர் ஹரியானா, 33 பேர் குஜராத் மற்றும் 31 பேர் பஞ்சாபைச் சேர்ந்தவர்கள். விமான நிலையத்தில் இருந்து தங்கள் மாநிலத்தவர்களை வால்வோ பேருந்தில் ஹரியானா பாஜக அரசு, அழைத்துச் சென்றுள்ளது.

DeepSeek AI தளத்தை நிறுத்திய தென்கொரியா

சமீபத்தில் உலகின் பேசுபொருளான சீனாவைச் சேர்ந்த DeepSeek Al செயலியின் செயல்பாட்டையூ நிறுத்தி தென்கொரிய அரசு நடவடிக்கை பாதுகாப்பு விதிமுறைகள் தொடர்பாக இந்நடவடிக்கை என தகவல். அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சகத்தின் கணினி, லேப்டாப்களில் இதனை பயன்படுத்தவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

வெளிநாட்டவர் வீடு வாங்க தடை

ஆஸ்திரேலியாவில் வெளிநாட்டினர் வீடு வாங்குவதற்கு அந்நாட்டு அரசாங்கம் தற்காலிக தடை விதித்துள்ளது. உள்நாட்டு மக்களுக்கு முன்னுரிமை அளிக்கும் நோக்கத்தில் வருகிற 2027-ம் ஆண்டு வரை 2 ஆண்டுகளுக்கு இந்த தடை அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தயாராகும் இந்திய அணி

நாளை மறுநாள் தொடங்க உள்ள சாம்பியன்ஸ் ட்ராபி போட்டிக்காக, இந்திய அணி வீரர்கள் துபாயில் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். வரும் 20ம் தேதி நடைபெற உள்ளது தனது முதல் லீக் போட்டியில் இந்திய அணி, வங்கதேச அணியை எதிர்கொள்ள உள்ளது.

இறுதிகட்டத்தில் 90வது ரஞ்சி கோப்பை தொடர்

90வது ரஞ்சி கோப்பை தொடரின் அரையிறுதிப்போட்டியில் பலம் வாய்ந்த மும்பை அணியை இன்று எதிர்கொள்கிறது விதர்பா அணி. மற்றொரு அரையிறுதியில் குஜராத் மற்றும் கேரளா ஆகிய அணிகள் மோத உள்ளன. இந்த இரு ஆட்டங்களும் காலை 9.30க்கு தொடங்கி நடைபெற்று வருகின்றன.

Read Entire Article