Top 10 News: ”நாட்டை இணைக்கும் இந்தி” Skype-க்கு மூடுவிழா நடத்துகிறது மைக்ரோசாஃப்ட்- டாப் 10 செய்திகள்

9 months ago 6
ARTICLE AD

பிறந்தநாள் உறுதிமொழி

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தனது 72வது பிறந்தநாளை ஒட்டி, சென்னை மெரினாவில் உள்ள அண்ணா, கருணாநிதி நினைவிடங்களில் மலர் தூவி மரியாதை செலுத்தினார். இந்தித் திணிப்பை எதிர்ப்போம் என உறுதிமொழியும் ஏற்றார். இதனிடையே, பிரதமர் மோடி மற்றும் ஆளுநர் ஆர்.என். ரவி உள்ளிட்ட தலைவர்கள் முதலமைச்சருக்கு வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.

சீமானிடம் ஒன்றேகால் மணி நேரம் போலீசார் விசாரணை

பாலியல் வழக்கு தொடர்பாக சென்னை வளசரவாக்கம் காவல்நிலையத்தில் சீமானிடம் நேற்றிரவு ஒன்றேகால் மணி| நேரம் விசாரணை. 100 கேள்விகளில் 53 கேள்விகளை போலீசார் கேட்டுள்ளதாக தகவல். தேவைப்பட்டால் மீண்டும் விசாரணைக்கு ஒத்துழைக்க அறிவுறுத்தல். விசாரணைக்குப் பிறகான செய்தியாளர் சந்திப்பில், புகார் அளித்த நடிகை, விரும்பி வந்தே உறவு வைத்துக்கொண்டதாக சீமான் ஆவேசமாக பதில்.

வணிக சிலிண்டர் விலை உயர்வு

வர்த்தக பயன்பாட்டுக்கான LPG விலை இன்று உயர்ந்துள்ளது. சென்னையில் ஒரு சிலிண்டரின் விலை ₹5.50 உயர்ந்து ₹1,965 ஆக விற்பனை. எனினும், வீட்டு உபயோக சிலிண்டரின் விலையில் மாற்றமில்லை

தொடர்ந்து குறையும் தங்கம் விலை

தங்கம் விலை மேலும் குறைந்து இருப்பது பொதுமக்களிடையே மேலும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதன்படி, ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 120 ரூபாய் குறைந்து, 623 ஆயிரத்து 520 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராம் விலை 15 ரூபாய் குறைந்து, 7 ஆயிரத்து 940 ரூபாய் ஆக உள்ளது.

நாட்டை இணைக்கும் இந்தி

”இந்தியாவின் தேசிய மொழியான இந்தி, நிச்சயமாக முழு நாட்டையும் ஒற்றுமையின் நூலில் இணைக்கும்” என மத்திய அமைச்சர் கஜேந்திர ஷெகாவத் தெரிவித்துள்ளார். மும்மொழிக்கொள்கை பிரச்னைக்கு மத்தியில், தேசிய மொழி என இல்லாத ஒன்றை மத்திய அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

8 பேர் உயிரிழப்பு

தெலங்கானா மாநிலம் ஸ்ரீசைலத்தில் ஏற்பட்ட சுரங்க விபத்தில் சிக்கிய 8 தொழிலாளர்களும் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.  ஒரு வாரமாக நடைபெற்ற மீட்பு பணியின் ஒரு பகுதியாக, டிரோன்களை இடிபாடுகளுக்கு மத்தியில் செலுத்தி ஆராய்ந்ததில் 8 பேரும் உயிரிழந்து கிடப்பது கண்டறியப்பட்டுள்ளது.

அதிபர் ட்ரம்ப் எச்சரிக்கை

போரில் உக்ரைனுக்கு ஆதரவாக இருப்பதாக உத்தரவாதம் அளித்தால் ஒப்பந்தத்தில் கையெழுத்திட தயார் என ஜெலன்ஸ்கி தெரிவிக்க, உத்தரவாதம் அளிக்க ட்ரம்ப் மறுப்பு. சொல்வதைக் கேட்கவில்லை என்றால் ஆதரவு இல்லை - உக்ரைன் அதிபரிடம் நேரடியாக ட்ரம்ப் எச்சரிக்கை. ஸெலன்ஸ்கி அமைதியை மீட்க தயாராக இல்லை. அவரது செயல் அவமதிப்பாக உள்ளது. மீண்டும் நான் பேச்சுவார்த்தைக்கு தயாராக உள்ளேன் என ட்ரம்ப் கருத்து

Skype-க்கு மூடுவிழா நடத்துகிறது மைக்ரோசாஃப்ட்!

Skype-க்கு மூடுவிழா நடத்துகிறது மைக்ரோசாஃப்ட். இதன் Credential-கள் மூலம் வரும் மே மாதத்திலிருந்து Microsoft Teams-ல் லாகின் செய்து அதனைப் பயன்படுத்திக் கொள்ளலாம் எனத் தெரிவித்துள்ளது. சுமார் 20 வருடங்களாக internet-based phone and video சேவைகளை வழங்கி வந்த Skype-ன் நினைவுகளை சமூகவலைத்தளங்களில் பதிவிடத் தொடங்கிய நெட்டிசன்கள்

அரையிறுதியில் ஆஸ்திரேலியா

ஐசிசி சாம்பியன்ஸ் ட்ராபியில் ஆஃப்கானிஸ்தான் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயன போட்டி சமனிம் முடிந்தது. இதையடுத்து இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி பகிர்ந்தளிக்கப்பட்டது. அதன் முடிவில் ரன்ரேட் அடிப்படையில் ஆஸ்திரேலியா அணி, அரையிறுதிப் போட்டிக்கு முன்னேறியது.

இந்தியா - நியூசிலாந்து மோதல்

ஐசிசி சாம்பியன்ஸ் ட்ராபியில் இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான லீக் போட்டி நாளை நடைபெற உள்ளது. நடப்பு தொடரில் இரு அணிகளும் இதுவரை தோல்வியையே சந்திக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Read Entire Article