Top 10 News: தமிழக அமைச்சரவையில் முக்கிய முடிவுகள்? பறக்க தயாரான பிரதமர் மோடி - டாப் 10 செய்திகள்
10 months ago 7
ARTICLE AD
இன்று கூடுகிறது அமைச்சரவை
தமிழ்நாடு பட்ஜெட்டில் இடம்பெறப்போகும் முக்கிய அம்சங்கள் குறித்து முடிவெடுக்க, முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது.  இதில் முக்கிய திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்படும் என கூறப்படுகிறது. இந்த மாத இறுதியில் அல்லது மார்ச் முதல் வாரத்தில் தாக்கல் செய்யப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
அதிமுகவில் போர்க்கொடி தூக்கிய செங்கோட்டையன்
அத்திக்கடவு - அவிநாசி திட்டம் தொடர்பாக எடப்பாடி பழனிசாமிக்கு நடந்த பாராட்டு விழாவில் எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவின் புகைப்படம் இல்லாததால் 'அந்த விழாவை புறக்கணித்ததாக அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம். "நாங்கள் எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவால் அடையாளம் காணப்பட்டவர்கள். எங்களை வளர்த்து ஆளாக்கிய தலைவர்களின் படங்கள் விழாவில் இல்லை" என பேச்சு
நெஞ்சை உலுக்கும் தங்கம் விலை
தங்கம் விலை சவரனுக்கு 64 ஆயிரத்தை நெருங்கி இருப்பது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.280 உயர்ந்து ரூ.63,840க்கும், ஒரு கிராம் ஆபரண தங்கத்தின் விலை ரூ.35 அதிகரித்து, ரூ.7,980க்கும் விற்பனையாகிறது.
10 பெண்களை ஏமாற்றியதாக பாஜக நிர்வாகி கைது
10க்கும் மேற்பட்ட பெண்களை காதலிப்பதாக ஏமாற்றி தனிமையில் இருந்ததை வீடியோ எடுத்து மிரட்டி பணம் பறித்த செங்கல்பட்டு வடக்கு பாஜக இளைஞரணி செயலாளர் லியாஸ் தமிழரசன் கைது. 15 நாட்கள் நீதிமன்ற காவலில் அடைக்க தாம்பரம் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவு. தாம்பரம் சேலையூர் காவல் நிலையத்தில் பெண் ஒருவர் அளித்த புகாரில் கைது. செல்ஃபோன்கள், லேப்டாப்பை பறிமுதல் செய்த நிலையில், 10க்கும் மேற்பட்ட பெண்களை இவர் ஏமாற்றியிருக்கலாம் என போலீசார் விசாரணை
ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிரான வழக்கு இன்று மீண்டும் விசாரணை..!
ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வரவுள்ளது. மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் கிடப்பில் போடுவது தொடர்பாக நீதிபதிகள் அடுக்கடுக்கான கேள்விகளை முன்வைத்த நிலையில், மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் வெங்கட்ரமணி இன்று பதிலளிக்கிறார்.
பிரதமர் மோடி வெளிநாட்டு பயணம்:
திருப்பதி லட்டு விவகாரம் - 4 பேர் கைது
திருப்பதி ஏழுமலையான் கோயில் லட்டு நெய் கலப்பட வழக்கில் திண்டுக்கல் ஏ.ஆர்.டெய்ரி உரிமையாளர் ராஜு ராஜேந்திரன், திருப்பதி வைஷ்ணவி பால் நிறுவன தலைமை நிர்வாகி உள்ளிட்ட 4 பேரை சிபிஐ கைது செய்தது.
கெஜ்ரிவால் செய்தது மிகப்பெரிய அரசியல் பிழை -பிரசாந்த் கிஷோர்
டெல்லி மதுபான கொள்கை வழக்கில் கைதான உடனேயே முதலமைச்சர் பதவியை கெஜ்ரிவால் ராஜினாமா செய்திருக்க வேண்டும். ஜாமினில் வெளியே வந்து, தேர்தலுக்கு சில நாட்களுக்கு முன் வேறு ஒருவரை முதலமைச்சராக நியமித்தது அவர் செய்த மிகப்பெரிய அரசியவுறு பிழை” - பிரசாந்த் கிஷோர், ஜன் சுராஜ் கட்சித் தலைவர்
28 பேரின் நிலை என்ன?
சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் கடந்த 8ம் தேதி நடந்த பயங்கர நிலச்சரிவில் சிக்கிய 28 பேரை மீட்கும் பணி 3வது நாளாக தொடர்கிறது. இடிபாடுகளில் இருந்து ஒருவரின் உடல் மீட்கப்பட்டுள்ள நிலையில், 2 பேர் உயிருடன் மீட்பு. 10க்கும் மேற்பட்ட வீடுகள் மண்ணில் புதைந்துள்ளதாகத் தகவல்.
தொடரை வென்ற இந்தியா
இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடரின் இரண்டாவது போட்டியில், இந்திய அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 305 ரன்கள் என்ற இலக்கை துரத்தும்போது, கேப்டன் ரோகித் சர்மா அதிரடியாக விளாசி தனது 32வது சதத்தை பூர்த்தி செய்தார்.மேலும், தொடரை 2-0 என இந்தியா கைப்பற்றியது.
Read Entire Article