Top 10 News: கோப்பையை வென்ற ஆர் சி பி.. பிரதமர் தலைமையில் அமைச்சரவை கூட்டம்- டாப் 10 செய்திகள்

6 months ago 5
ARTICLE AD

அரசுப் பதவிகள் வேண்டாம்

நீதிபதிகள் ஓய்வு பெற்றவுடன் அரசுப் பதவிகளை ஏற்றுக்கொள்வது, தேர்தலில் போட்டியிடுவது போன்ற செயல்கள் நீதித்துறையின் மீதான மக்களின் நம்பிக்கையை குறைக்கிறது. நான் ஓய்வுபெற்ற பின் ஒருபோதும் அரசுப் பதவிகளை ஏற்க மாட்டேன்”-பி.ஆர்.கவாய், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி.

போலி ஐஆர்சிடிசி கணக்குகள் முடக்கம்

ஆன்லைன் ரயில் டிக்கெட்டுகள் முன்பதிவு தொடங்கிய சில வினாடிகளுக்குள் புக்கிங்-ஐ நிறைவு செய்து வந்த 2.5 கோடி போலி பயனர் கணக்குகளை முடக்கியுள்ளது IRCTC நிறுவனம்.அதிக விலைக்கு டிக்கெட்டுகள் மீண்டும் விற்கப்படும் மோசடிகளை தடுக்கும் நோக்கமாக இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது

பரந்தூர் விமான நிலையம்- முக்கிய ஆலோசனை

பரந்தூர் புதிய விமான நிலைய திட்டம் தொடர்பாக சென்னையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று முக்கிய ஆலோசனை. அடுத்தகட்ட பணிகள் தொடர்பாக அதிகாரிகளுடன் ஆலோசிக்க உள்ளதாக தகவல். பரந்தூர் விமான நிலையத்துக்கான நிலத்தை கையகப்படுத்தும் பணியில் தமிழ்நாடு அரசின் தொழில்துறை ஈடுபட்டு வருகிறது.

கேரள அங்கன்வாடியில் முட்டை பிரியாணி!

கேரள அங்கன்வாடியில் குழந்தைகளுக்கு வழங்கப்படும் உணவில் முட்டை பிரியாணி இடம் பிடித்துள்ளது. உப்புமாவிற்கு பதில் பிரியாணி வழங்குமாறு சிறுவன் ஷங்கு பேசிய வீடியோ 3 மாதங்களுக்கு முன் சமூக வலைதளங்களில் பரவிய நிலையில் புலாவ், பருப்பு பாயாசம், சோயா கறி, சத்து உருண்டையுடன் புதிய மெனு

18 ஆண்டு தவம்

ஐபிஎல் இறுதி போட்டியில் பஞ்சாப் அணியை 6 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி முதல் முறையாக கோப்பையை வென்றது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி. 18 ஆண்டு கால காத்திருப்பை கொண்டாடும் ரசிகர்கள்.

பாதி தூரம் தாண்டிவிட்டோம்

“ஆர்சிபி அணியினர் சிறப்பாக பந்துவீசினர், குறிப்பாக க்ருனாலின் பந்துவீச்சு ஆட்டத்தையே மாற்றிவிட்டது. எங்கள் அணியின் இளம் வீரர்களின் பயமற்ற குணம், அணிக்கு உதவியது. பாதி தூரம் தாண்டிவிட்டோம், அடுத்த ஆண்டு நிச்சயம் கோப்பையை வெல்வோம்”

பள்ளிகளில் தேவைப்பட்டால் முகக்கவசம்"

''தமிழ்நாட்டில் கொரோனா பரவல் அதிகமாக இருந்தாலும் அந்த அளவிற்கு வீரியம் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது”இருந்தாலும் பள்ளிக்கல்வித்துறை சார்பாக அனைத்து தடுப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன; தேவைப்பட்டால் பள்ளிகளில் முகக்கவசம் அணிவதற்கு உத்தரவிடப்படும் -பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பேட்டி

மத்திய அமைச்சரவைக் கூட்டம்!

டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெறுகிறதுஇன்று நடைபெறும் கூட்டத்தில் மத்திய இணை அமைச்சர்களும் பங்கேற்க இருப்பதாக தகவல்

காஷ் படேல் குற்றச்சாட்டு

கோதுமை, சோளம் உள்ளிட்ட பயிர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் பூஞ்சையை அமெரிக்காவிற்கு கடத்தி சென்றதாக 2 சீன ஆய்வாளர்கள் கைது.இந்த பூஞ்சை மூலம் மனிதர்கள், கால்நடைகளுக்கு பல்வேறு நோய்களை ஏற்படுத்த சதி; சீன கம்யூனிஸ்ட் கட்சி மூலம் நிதி உதவி பெற்று உயிரியியல் கிருமி கடத்தப்பட்டதாக FBI இயக்குநர் காஷ் படேல் குற்றச்சாட்டு

Read Entire Article