Top 10 News: அதிரடியாக உயர்ந்த தங்கம், டிக்கெட் விலை, ரூ.9 லட்சம் கோடி இழப்பு - டாப் 10 செய்திகள்

1 year ago 7
ARTICLE AD

வலுவிழக்கும் காற்றழுத்த தாழ்வு மண்டலம்

தாழ்வு மண்டலம், படிப்படியாக வலுவிழக்க வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தகவல். சென்னைக்கு 450 கி.மீ தொலைவில் உள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் மணிக்கு 7 கி.மீ வேகத்தில் கிழக்கு - வடகிழக்கு திசையில் நகர்கிறது. அடுத்த 12 மணி நேரத்திற்குப் பிறகு படிப்படியாக கடலிலேயே வலுவிழக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

தலைவலி கொடுக்க ஆளுநரா?

ஆளுநர், அமைச்சரவையின் ஆலோசனையைப் பின்பற்றியே நடக்கக் கடமைப்பட்டவரே தவிர சுய அதிகாரம் கொண்டவரல்ல. உயர்கல்வித் துறையின் நிர்வாகப் பணிகளுக்கு முட்டுக்கட்டை போடுவது சட்டப்படி தவறே. உயர் கல்வி வளர்ச்சி தடைபடாமல் பார்த்துக் கொள்ளவேண்டியது தமிழ்நாடு அரசின் அவசர, அவசியக் கடமையாகும்” -தி.க தலைவர் கி.வீரமணி கண்டனம்

தங்கம் விலை கிடுகிடுவென உயர்வு

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.480 உயர்ந்து ரூ.56,800க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதன்படி 1 கிராம் தங்கத்தின் விலை 60 ரூபாய் உயர்ந்து ரூ.7,100க்கும் விற்பனை ஆகிறது.

விமான டிக்கெட் கட்டணம் உயர்வு

கிறிஸ்துமஸ், ஆங்கில புத்தாண்டு தொடர் விடுமுறையால், சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகரிக்கத் தொடங்கியதை அடுத்து, தூத்துக்குடி, மதுரை, திருச்சி, கொச்சி, மைசூர் ஆகிய உள்நாட்டு விமான கட்டணங்கள் மற்றும் சிங்கப்பூர், கோலாலம்பூர், தாய்லாந்து, துபாய் ஆகிய சர்வதேச விமான டிக்கெட் கட்டணங்கள் பல மடங்கு உயர்ந்துள்ளது.

குவைத் செல்லும் பிரதமர் மோடி

பிரதமர் மோடி இரண்டு நாள் பயணமாக் இன்று குவைத் செல்கிறார். இதன் மூலம், 43 ஆண்டுகளில் முதன்முறையாக அந்நாட்டிற்கு செல்லும் பிரதமர் என்ற பெருமையை பெருகிறார். இந்த பயணத்தின் போது இருதரப்பு உறவை மேம்படுத்துவது தொடர்பான உயர்மட்ட ஆலோசனைகள் நடைபெற உள்ளது.

முதலீட்டாளர்களுக்கு ரூ.9 லட்சம் கோடி இழப்பு

மும்பை பங்குச்சந்தை எண் சென்செக்ஸ் 1,100 புள்ளிகளுக்கு மேல் குறைந்ததால், முதலீட்டாளர்களுக்கு நேற்று ஒரே நாளில் சுமார் ரூ.9 லட்சம் கோடி வரை இழப்பு. வெளிநாட்டு முதலீட்டாளர்கள் பங்குகளை விற்பது போன்ற காரணங்களால் வாரத்தின் 5வது நாளிலும் கடும் சரிவுடன் நிறைவடைந்த இந்திய பங்குச்சந்தை வர்த்தகம்

பார்சலில் ஆண் சடலம்

ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டம் யண்டகண்டி என்ற பகுதியில் வசிக்கும் துளசி என்பவரின் வீட்டிற்கு வந்த பார்சலில், பாதி வெட்டப்பட்ட அடையாளம் தெரியாத ஒரு ஆணின் சடலம் இருந்ததால் அதிர்ச்சி. பார்சலுடன் ஒரு கடிதம் வர, அதில் ரூ.1.30 கோடி கொடுக்க வேண்டுமெனவும், இல்லையேல் பல பிரச்னைகளை சந்திக்க நேரிடும்' எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. இச்சம்பவம் தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

விபத்தில் ஏழுமலையான் பக்தர்கள் 4 பேர் உயிரிழந்த சோகம்

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு சொந்த ஊருக்கு திரும்பியபோது, புல்லா சமுத்திரம் என்ற இடத்தில் சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லாரி மீது டெம்போ டிராவலர் மோதியதில் 4 பேர் உயிரிழப்பு. 10க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதி. ஓட்டுநர் தூக்கத்தில் இருந்திருக்கலாம் என போலீசார் சந்தேகம்

மல்யுத்த வீரர் சீனியர் ரே மிஸ்டீரியோ சீனியர் காலமானார்

பிரபல மல்யுத்த வீரர் சீனியர் ரே மிஸ்டீரியோ (66) மெக்சிகோவில் காலமானார். WWE போட்டிகள் மூலம் பிரபலமான இவர், பல்வேறு சாம்பியன் பட்டங்களை வென்றுள்ளார். பயிற்சியாளராகவும் பல இளம் வீரர்களை உருவாக்கியுள்ளார்.

கிறிஸ்துமஸ் கூட்டத்தில் கார் தாக்குதல்

ஜெர்மனியின் மக்டேபெர்க் நகரில் உள்ள சந்தைக்குள் அதிவேகமாகச் சென்ற கார் மோதியதில் 2 பேர் உயிரிழப்பு. கிறிஸ்துமஸ் பண்டிகைக்காக கேக், பரிசுப் பொருட்கள் வாங்க குவிந்திருந்த மக்கள் மீது காரை மோதிக் கொலை என தகவல். பாதிக்கப்பட்ட 60க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதி. தாக்குதல் நடத்திய சவுதியைச் சேர்ந்த மருத்துவர் கைது

Read Entire Article