Top 10 News : அதிகனமழைக்கு வாய்ப்பு! இஸ்ரேல் தாக்குதலில் 2 ஆயிரம் பேர் உயிரிழப்பு - 11 மணி ரவுண்ட் அப்

1 year ago 7
ARTICLE AD

தமிழநாட்டில் வரும் 15ம் தேதி வரை அதி கனமழைக்கு வாய்ப்பு; சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

தமிழ்நாட்டில் பல மாவட்டங்களில் அதிகனமழைக்கான முன்னெச்சரிக்கை வாய்ப்பு இருப்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க மாவட்ட நிர்வாகத்திற்கு அரசு உத்தரவு

தமிழ்நாட்டில் பள்ளிகளுக்கான வேலை நாட்கள் திருத்தி அமைப்பு – 210 நாட்கள் வேலை நாட்களாக இருக்கும் என பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் அறிவிப்பு

தமிழ்நாடு முழுவதும் ஆயுத பூஜை கொண்டாட்டம்; காலை முதல் காய்கறிகள், பழங்கள், பூக்கள் விற்பனை படுஜோர்

ஆயுத பூஜை கொண்டாட்டம்; தொடர் மழை காரணமாக ஒரு கிலோ மல்லி ரூபாய் 1200க்கு விற்பனை, மற்ற பூக்களின் விலையும் உயர்வு

சரஸ்வதி பூஜை கொண்டாட்டம்; தமிழ்நாட்டில் உள்ள ஒரே சரஸ்வதி கோயிலான கூத்தனூரில் கொண்டாட்டம்

புரட்டாசி பிரம்மோற்சவ கொண்டாட்டம்; திருப்பதியில் கோயில் தேரோட்ட கோலாகலம் – பக்தர்கள் சாமி தரிசனம்

தமிழக மக்களுக்கு தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் ஆயுத பூஜை வாழ்த்து – விநாயகர் சதுர்த்திக்கு தெரிவிக்காத சூழலில் தற்போது வாழ்த்து கூறியது குறிப்பிடத்தக்கது

முரசொலி நாளிதழ் ஆசிரியர் முரசொலி செல்வத்தின் உடலுக்கு பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் நேரில் அஞ்சலி

தேசிய அளவில் மதுவிலக்கை அமல்படுத்த ஏதுவாக மதுவிலக்கு விசாரணை ஆணையம் அமைக்க வி.சி.க. வலியுறுத்தல்

திருத்தணியில் இருந்து சென்னை வந்த அரசுப்பேருந்தில் செல்போனை பார்த்தபடி பேருந்து ஓட்டிய தற்காலிக ஓட்டுநர் பணிநீக்கம் – சமூக வலைதளத்தில் வைரலான வீடியோவால் நடவடிக்கை

சென்னை ராஜீவ்காந்தி சாலையில் ஏற்பட்ட வாகன நெரிசலுக்கு 5 நாட்களில் தீர்வா? மின்வாரிய பணிகளை விரைந்து முடிக்க மின்வாரியத்திற்கு போக்குவரத்து வாரியம் அறிறுவுத்தல்

கொடைக்கானலில் வேட்டையன் படம் ஓடிய திரையரங்கில் காலாவதியான உணவுப் பொருட்களை விற்பனை செய்ததாக தியேட்டர் ஊழியர்களுடன் ரசிகர்கள் வாக்குவாதம்

ஈரோட்டில் தங்கும் விடுதியில் நாட்டுத்துப்பாக்கி பறிமுதல் – டெல்லியைச் சேர்ந்தவர் கைது

சிக்கன் பக்கோடாவிற்கு பணம் கேட்டதால் கொடூர தாக்குதல் – செங்கல்பட்டு அருகே அதிர்ச்சி சம்பவம்

டெல்லியில் ரூபாய் 2 ஆயிரம் கோடி மதிப்பிலான கொகைன் போதைப் பொருள் சிக்கியது – இந்தியாவிற்குள் போதைப் பொருளை கொண்டு வந்தவர் லண்டன் தப்பி ஓட்டம்

தடை செய்யப்பட்ட அமைப்பிற்கு ஆள் சேர்த்ததாக கூறி தமிழ்நாட்டில் பலரது வீடுகளிலும் என்.ஐ.ஏ. சோதனை

இந்திய ஒலிம்பிக் சங்கத் தலைவர் பிடி உஷா மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் – அதிகாரத்தை பயன்படுத்தி தன்னிச்சையாக செயல்படுவததாக உறுப்பினர்கள் புகார்

லெபனானில் ஹிஸ்புல்லா அமைப்பை குறிவைத்து இஸ்ரேல் தொடர் தாக்குதல் – 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு

அமெரிக்காவின் ப்ளோரிடாவில் பலத்த சேதத்தை ஏற்படுத்திய மில்டன் புயல் – 14 பேர் உயிரிழப்பு

Read Entire Article