புதிய தலைவர்

SEBI அமைப்பின் புதிய தலைவராக நிதி மற்றும் வருவாய் செயலாளர் துஹின் காந்தா பாண்டேவை மத்திய அரசு நியமித்துள்ளது. தற்போதைய தலைவரான மாதபி புரி பூச்சின் மூன்றாண்டு பதவிக்காலம் இன்றுடன் முடிவடையும் நிலையில், புதிய தலைவர் நியமனம்.

இந்தியில் திட்டினால் தமிழில் திட்ட முடியாதா?"

“இந்தி பேசும் மாநிலத்தவர்கள் தமிழர்களை இந்தியில் திட்டினால், பதிலுக்கு நம்மவர்கள் அவர்களைத் தமிழில் திட்ட முடியாதா?"சுயமரியாதை உணர்வும் சூடும் சுரணையும் உள்ள தமிழர்கள் அப்படித்தான் செய்வார்கள்; பாஜகவினர் எப்படியோ? -முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

தேசிய கல்விக்கொளகை தேவை

தமிழகத்தில் தேசியக் கல்விக் கொள்கையை அமல்படுத்தும் பெரும் தேவை உள்ளது மாநில அரசின் இருமொழிக் கொள்கையால் தமிழக இளைஞர்கள் வேலைவாய்ப்புகளை இழக்கின்றனர் இந்தியை எதிர்க்கிறோம் என்ற பெயரில் எந்தவொரு தென்மாநில மொழிகளையும் படிக்க அனுமதி மறுப்பது நியாயமற்றது - ஆளுநர் ஆர்.என். ரவி

CUET நுழைவுத்தேர்வு அட்டவணை வெளியீடு

மத்திய பல்கலை.களில் முதுநிலை படிப்புகளில் சேர்வதற்கான CUET நுழைவுத்தேர்வு அட்டவணை வெளியீடு. முதுநிலை படிப்புகளுக்கான CUET தேர்வு கணினி வழியில் மார்ச் 13 முதல் ஏப்.1வரை நடத்தப்படுகிறது தேர்வுக்கான ஹால்டிக்கெட் உள்ளிட்ட விவரங்களை www.nta.ac.in தளத்தில் தெரிந்துகொள்ளலாம்.

அரையிறுதிக்கு முன்னேறப்போவது யார்?

ஆஸ்திரேலியா - ஆஃப்கானிஸ்தான் இன்று மோதல் சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் ஆஸ்திரேலியா - ஆஃப்கானிஸ்தான் அணிகள் இன்று மோதல்லாஹூரில் இரு அணிகளும் மோத உள்ள போட்டி இன்று மதியம் 2.30 மணிக்கு தொடங்குகிறது.

சுரங்கத்தில் சிக்கியவர்களின் நிலை என்ன?

தெலங்கானா மாநிலம் ஸ்ரீசைலம் சுரங்க விபத்தில் சிக்கிய 8 பேரை மீட்கும் பணிகள் ஒரு வாரமாக நடந்து வரும் நிலையில், அவர்களை இதுவரை தொடர்புகொள்ள முடியாததால் உள்ளே சிக்கியவர்களை உயிருடன் மீட்கும் வாய்ப்புகள் படிப்படியாக குறைந்து வருவதாகத் தகவல்.2 நாட்களில் துரிதமாக மீட்புப் பணிகள் நிறைவு செய்யப்படும் என | மாநில நீர்ப்பாசனத்துறை அமைச்சர் உத்தம ரெட்டி நேற்று கூறியிருந்தார்.

”நான்தான் கிழிக்கச் சொன்னேன்”

“அந்தம்மா (நடிகை) எத்தன நாளா பேசிட்டு இருக்கு. அவரை அசிங்கப்படுத்தத்தானே பாலியல் குற்றம், பாலியல் குற்றம்னு போடுறீங்க. அவருக்கு வாக்களித்த மக்களுக்கு நீங்க என்ன மரியாதை கொடுக்குறீங்க?"| -சீமானின் மனைவி கயல்விழி பரபரப்பு பேட்டி "பாலியல் வழக்கின் விசாரணையை விரைவு செய்ய உயர் நீதிமன்றம் கூறியுள்ளது. அதற்காக அடுத்த நாளே வீட்டுக்கு வருவீர்களா?. எங்களை அசிங்கப்படுத்த காவல்துறை திட்டமிட்டு செயல்படுகிறது.

ஹால்டிக்கெட் வெளியானது

தமிழ்நாடு மாநில தகுதித்தேர்வு (SET 2024) ஹால்டிக்கெட் வெளியானது மார்ச் 6 முதல் 9ம் தேதி வரை கனினி வழியே நடக்கும் இந்த தேர்வுக்கான ஹால்டிக்கெட்டை, ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யலாம்.

தேர்தல் ஆணையம் மீது மம்தா கடும் குற்றச்சாட்டு

தேர்தல் ஆணைய உதவியுடன் மேற்கு வங்கத்தில் போலி வாக்காளர்களை பதிவு செய்து தேர்தலை |சீர்குலைக்க பாஜக திட்டமிட்டுள்ளதாக அம்மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி பகீர் குற்றச்சாட்டு. டெல்லி, மகாராஷ்டிரா, ஹரியானாவில் போலி வாக்காளர்களை பதிவு செய்து பாஜக வென்றதாகவும், இவ்விவகாரத்தில் தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் காலவரையற்ற போராட்டம் நடக்கும் எனவும் அறிவிப்பு.

டி20 வடிவில் ஆசியக்கோப்பை

இந்தாண்டு நடைபெற உள்ள ஆசிய கோப்பை தொடர் டி20 வடிவில் நடைபெறும் என தகவல். வரும் செப்டம்பர் மாதம் நடைபெறும் தொடரில் இந்தியா, இலங்கை, பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கான் உள்ளிட்ட 8 அணிகள் பங்கேற்பு.