தமிழ்நாட்டில் ஆட்சியமைக்க பெரும்பான்மை கிடைக்காததால் விஜய் தவித்து வருகிறார். இதனிடையே பனையூர் அலுவலகத்துக்கு வருமாறு தவெக எம்எல்ஏக்களுக்கு பொதுச்செயலாளர் ஆனந்த் அழைப்பு விடுத்துள்ளார்.

திராவிட கட்சிகள் திருமாவளவனை முதல்வராக முன்மொழிய வேண்டும். விஜய்யின் வெற்றி ரசிக மனோநிலை, பாசிசத்தின் சதியும் சேர்ந்து உருவாக்கியது. தமிழ்நாட்டை காப்பாற்ற திருமாவை முதல்வராக்குவது காலத்தின் கட்டாயம் என விசிக பொதுச்செயலாளர் சிந்தனை செல்வன் தெரிவித்துள்ளார்.

தன்னை ஆட்சியமைக்க அழைக்குமாறு, சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிப்பேன் எனவும் விஜய் ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேக்கரிடம் தெரிவித்துள்ளார்.

பெரும்பான்மை கிடைக்காததால் விஜய் ஆட்சி அமைக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதால் சி.வி.சண்முகம் தலைமையில் 20க்கும் மேற்பட்ட அதிமுக எம்எல்ஏக்கள் புதுச்சேரியில் உள்ள ரிசார்ட்டில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்ந்துள்ளது. ஒரு கிராம் ஆபரண தங்கம் ரூ.14,150க்கும், ஒரு சவரன் ஆபரண தங்கம் ரூ.1,13,200க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

அதிமுகவில் பிளவு ஏற்பட்டுள்ளதாக பரவும் தகவல்களுக்கு அக்கட்சி மறுப்பு தெரிவித்துள்ளது. எடப்பாடி பழனிசாமி ஒப்புதலுடன் தான் எம்.எல்.ஏ.,க்கள் ரிசார்டில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேற்கு வங்கத்தின் மாநில பாஜக தலைவர் சுவேந்து அதிகாரியின் தனி உதவியாளர் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளனர். தேர்தல் முடிவு வெளியாகி இரண்டு நாட்கள் மட்டுமே ஆன நிலையில் இந்த சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஹைதராபாத் பேருந்து நிலையத்தில் இரவு நேரத்தில் மாறுவேடத்தில் சென்ற பெண் கமிஷனரிடம் அத்து மீறிய 40 பேரை போலீசார் கைது செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிரியாணி சாப்பிட்ட பின் தர்பூசணி சாப்பிட்டதால் உயிரிழந்ததாக சொல்லப்பட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேருக்கு பாக்டீரியா தொற்று எதுவும் இல்லை என மும்பை மருத்துவமனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பகல்ஹாம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்திய ராணுவம் சார்பில் நிகழ்ந்த ஆபரேஷன் சிந்தூர் தாக்குதல் நடந்து இன்றுடன் ஓராண்டு நிறைவடைந்துள்ளது. இந்தியா எதையும் மன்னிக்காது என இந்திய விமானப்படை வீடியோ வெளியிட்டுள்ளது.

மத்தியப் பிரதேசத்தில் சிறுமியை பாலியல் ரீதியாகத் துன்புறுத்திய வழக்கில் 75 வயது வழக்கறிஞர் கைது செய்யப்பட்டார்.

ஒடிசா மாநிலத்தில் தேன் சேகரிக்க சென்ற சிறுவனின் தலை பாறையின் இடுக்கில் சிக்கிக்கொண்ட நிலையில் உள்ளே பெரிய நாகம் இருந்தால் பெரும் அச்சம் ஏற்பட்டது. தீயணைப்புத்துறையினர் 8 மணி நேரம் போராடி சிறுவனை மீட்டனர்.

எங்களை விட இன்ஸ்டாகிராம் மாடல்களுக்கு அதிக முக்கியத்துவம் கிடைக்கிறது இந்தியாவின் பேட்மிண்டன் நட்சத்திரமான சத்விக்சாய்ராஜ் ரங்கிரெட்டி வருத்தத்தை பதிவு செய்துள்ளார்.