Top 10 News Headlines: வட இந்தியாவில் சூரிய வெடிப்பு.. யூட்யூபர் மாரிதாஸ் கைது.. 11 மணி வரை நடந்தது என்ன?

1 hour ago 1
ARTICLE AD

அறநிலையத்துறை இணையதளம் புதுப்பிக்கப்பட்டு கோயில்களில் கர்ப்பிணிகள், வயதானவர்களுக்கு தனி டோக்கன் வழங்கப்படும் என அமைச்சர் ரமேஷ் அறிவித்துள்ளார். விரைவில் ஆன்லைன் மூலம் முன்பதிவு நடைமுறை அமலுக்கு வரும் என தெரிவித்துள்ளார்.

மூன்று மடங்கு சிலிண்டர் விலை உயர்ந்துள்ளதால் சாலையோர தள்ளுவண்டி ஹோட்டல்கள் முற்றிலும் அழிந்துவிட்டன வணிக சங்க தலைவர் விக்கிரமராஜா கடுமையாக விமர்சித்துள்ளார். மத்திய மாநில அரசுகள் போர்க்கால நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியுள்ளார்.

ஸ்மார்ட் மீட்டர் திட்டம் குறித்து அரசு இன்னும் முடிவு எடுக்கவில்லை. அது பரிசீலனையில் இருந்து வருகிறது என அமைச்சர் நிர்மல் குமார் தெரிவித்துள்ளார்.

இந்தியா கூட்டணியின் ஆலோசனை கூட்டம் இன்று நடக்கவுள்ள நிலையில் டெல்லியில் காங்கிரஸ் கட்சி மற்றும் ராகுல் காந்தியை கடுமையாக விமர்சித்து இந்தியில் பேனர்கள் வைக்கப்பட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

பலத்த காற்று வீசியதால்  டெல்லியில் விமான நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 3 ஏர் இந்தியா விமானங்கள் சேதமடைந்தது.  ஏர் ஸ்டேர் வாகனம் நகர்ந்து சென்ற வீடியோக்கள் இணையத்தில் வைரலாகியுள்ளது.

சூரிய வெடிப்பு காரணமாக பூமியில் அரோரா எனப்படும் துருவ ஒளிகள் ஏற்பட வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. வட இந்தியா பகுதிகளில் இது நடக்கலாம் என கணிக்கப்பட்டுள்ளது.

தமிழக முதலமைச்சர் விஜய் குறித்து சமுக வலைதளத்தில் தொடர்ந்து விமர்சனம் செய்து வந்ததால் சென்னை சைபர் கிரைம் போலீசாரால் யூட்யூபர் மாரிதாஸ் கைது செய்யப்பட்டார்.

சென்னை மேயர் பிரியா மற்றும் 157 கவுன்சிலர்கள் தங்களது சொத்து விவரங்களை நான்கரை ஆண்டுகளாக தாக்கல் செய்யாதது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதால் சட்ட நடவடிக்கை பாய வாய்ப்புள்ளது.

தமிழ்நாட்டில் உள்ள 181 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை பெறுவதற்கான பொது கலந்தாய்வு இன்று முதல் தொடங்குகிறது. 1.26 லட்சம் இடங்களுக்கு கலாந்தாய்வு இன்று நடைபெறுகிறது.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மேலிட செயலாளர் சூரஜ் ஹெக்டே மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். அவரது மறைவுக்கு காங்கிரஸ் மூத்த தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தை நாளை முதலமைச்சர் விஜய் தொடங்கி வைக்கிறார். இந்த நிகழ்ச்சி சென்னை ராஜரத்தினம் மைதானத்தில் நடைபெறவுள்ளது.

இந்தியா - ஆப்கானிஸ்தான் இடையேயான டெஸ்ட் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி 152 இடங்களுக்கு ஆல் அவுட்டானது. இதனைத் தொடர்ந்து அந்த அணி  412 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2வது இன்னிங்ஸ் தொடங்கியுள்ளது.

மேற்குவங்க மாநிலத்தில் உள்ள சிலிகுரியில் சுற்றுலாவுக்கு சென்று மாயமான சிக்கிமை சேர்ந்த குடும்பத்தினர் 4 பேர் சடலமாக மீட்கப்பட்டனர். பலத்த மழையால் நிலச்சரிவில் சிக்கி காரோடு ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டது தெரிய வந்துள்ளது.

Read Entire Article