Top 10 News Headlines: ரயில்களில் சூப்பர் வசதி.. சாதனை படைப்பாரா விராட் கோலி.. இன்றைய முக்கிய செய்திகள்!

5 days ago 3
ARTICLE AD

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் இரு மதங்களுக்கு இடையே மோதலை உருவாக்கும் சூழலை எதிர்பார்த்தார்கள். அது நடக்கவில்லை. அதை நடக்கவிடாமல் முதலமைச்சர் ஸ்டாலின் சக்கர வியூகம் அமைத்தார் என அமைச்சர் சேகர்பாபு புகழாரம் சூட்டியுள்ளார்.

அன்று அடக்க நினைத்த அதே ஆதிக்க கூட்டம் இன்று அவரை துதிப்பது போல நடிப்பது தான் அம்பேத்கருக்கு கிடைத்த வெற்றி என அவரின் நினைவு நாளில் முதலமைச்சர் ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் பகிர்ந்து போற்றியுள்ளார்.

திருப்பரங்குன்றம் விவகாரம் தொடர்பாக தமிழ்நாடு அரசை கண்டித்து டிசம்பர் 7ம் தேதி போராட்டம் நடத்தப்படும் என இந்து முன்னணி அறிவித்துள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அருகே அதிகாலையில் இரண்டு கார்கள் மோதிய கோர விபத்தில் 5 பேர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தமிழக மகளிர் உரிமை மீட்பு பயணம் என்ற பெயரில் இன்று முதல் பொதுமக்களை பசுமை தாயகம் அமைப்பின் தலைவர் சௌமியா அன்புமணி சந்திக்கிறார். காஞ்சிபுரத்தில் தனது பரப்புரையை தொடங்குகிறார்.

தங்கம் விலை சவரனுக்கு ரூ.320 கூடியுள்ளது. ஒரு சவரன் ரூ.96,320 க்கும், ஒரு கிராம் ரூ.12,040 க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

காங்கிரஸ் கட்சியின் மேலிட பிரமுகரான பிரவீன் சக்கரவர்த்தி தவெக தலைவர் விஜய்யை சந்தித்து பேசியது எங்களுக்கு தெரியாது என தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வ பெருந்தகை கூறியுள்ளார். இதுதொடர்பாக மேலிடத்தில் பேசவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

ரயில்களில் இனி முன்பதிவு செய்யும்போது விருப்பத்தை தேர்வு செய்யாவிட்டாலும் மூத்த குடிமக்கள், 45 வயதிற்கு மேற்பட்ட பெண்களுக்கு கீழ் படுக்கை வசதி கிடைக்க ஏற்பாடு என மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறியுள்ளார்.

அமெரிக்காவின் அழுத்தங்களுக்கு மத்தியில் இந்தியாவுக்கான எரிபொருளை தடையில்லாமல் விநியோகம் செய்ய தயார் என ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் தெரிவித்துள்ளார்.

2025ம் ஆண்டு கூகுளில் அதிகம் தேடப்பட்ட விளையாட்டு அணிகளின் பட்டியலில் 4வது இடத்தில் பஞ்சாப் கிங்ஸ் இடம் பிடித்துள்ளது. 5வது இடத்தை டெல்லி கேபிடல்ஸ், குஜராத் டைட்டன்ஸ் பிடித்துள்ளது.

உலகப்புகழ் பெற்ற வார்னர் பிரதர்ஸ் ஸ்டூடியோவை ரூ.7.44 லட்சம் கோடிக்கு நெட்பிளிக்ஸ் நிறுவனம் வாங்கியுள்ளது. அடுத்த 12-18 மாதங்களில் ஓடிடி தளம், தொலைக்காட்சிக்கு போடப்பட்ட ஒப்பந்தத் தொகை கைமாற்றப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டி இன்று விசாகப்பட்டினத்தில் நடைபெறுகிறது. கடந்த 2 போட்டிகளில் சதமடித்த விராட் கோலி இந்த போட்டியிலும் சதமடிப்பாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Read Entire Article