சென்னை எழும்பூர் கன்னிமாரா நூலகத்தில் ரூ.85 லட்சம் மதிப்பீட்டில் கார்ல் மார்க்ஸூக்கு சிலையை முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் கூட்டணி கட்சி தலைவர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.

வருமான வரித்துறை விதித்த ரூ.1.50 கோடி அபராதத்தை எதிர்த்து நடிகர் விஜய் தொடர்ந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. விஜய் மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் அபராதம் செல்லும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

திமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸ் மாறாது என காங்கிரஸ் மூத்த தலைவர் பீட்டர் அல்போன்ஸ் தெரிவித்துள்ளார்.

மதுரைக்கு பிரதமர் நரேந்திர மோடி வருகை தரும் தேதியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. பிப்ரவரி 28ம் தேதிக்கு பதில் மார்ச் 1ம் தேதி அவர் வருவார் என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.

மத்திய அரசை கண்டிக்கவேண்டிய எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி பாஜகவின் முரட்டு அடிமையாக இருந்து, பட்ஜெட்டை வரவேற்கிறார் என துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.

மேகாலாயாவில் சட்ட விரோதமாக செயல்பட்ட நிலக்கரி சுரங்கத்தில் 18 பேர் உயிரிழந்ததால் பெரும் சோகம் ஏற்பட்டுள்ளது. இன்னும் பலர் சுரங்கத்தில் சிக்கியிருக்கலாம் என கூறப்படுவதால் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

எதிர்க்கட்சிகள் தொடர் அமளி காரணமாக மக்களவை நண்பகல் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

ஊபர் மற்றும் ஓலா போன்றவற்றிற்கு மாற்றாக பாரத் டாக்ஸி என்ற புதிய செயலியை உள்துறை அமைச்சர் அமித் ஷா தொடங்கி வைத்தார். தனியார் நிறுவனங்கள் ஓட்டுநர்களிடம் இருந்து 30 முதல் 40% வரை கமிஷன் வசூலிக்கும் நிலையில், இந்தச் செயலி ஜீரோ கமிஷன் முறையில் செயல்படுத்தப்படுகிறது.

ரயில்களில் படுக்கை வசதிக்காக முழு கட்டணம் செலுத்தும் நிலையில் ஆர்.ஏ.சி. டிக்கெட் உறுதி செய்யப்பட்டால் பாதி கட்டணத்தை திருப்பி தர ரயில்வே துறைக்கு பொதுக்கணக்கு குழு அறிவுறுத்தியுள்ளது.

ராஜஸ்தானில் திருமணமான 3 மாதத்தில் கணவனை தனது காதலன் உதவியுடன் கொலை செய்த மனைவியை போலீசார் கைது செய்து சிறையிலடைத்தனர்.

மகளிர் ஐபிஎல் போட்டியில் தொடர்ச்சியாக 2 முறையாக கோப்பையைக் கைப்பற்றி பெங்களூரு அணி அசத்தியுள்ளது. இறுதி போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது

கர்நாடகாவைச் சேர்ந்த 33 வயது இளைஞருக்கு அபுதாபி லாட்டரியில் ரூ.49 கோடி பரிசுத்திகை விழுந்துள்ளது. ரூ.12,313க்கு அவர் அந்த லாட்டரி டிக்கெட்டைப் பெற்றுள்ளார்.