சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வரலாறு காணாத வகையில் உயர்ந்துள்ளது. கிராமுக்கு ரூ.70 உயர்ந்து ரூ.12, 890க்கு விற்பனையாகிறது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.9 உயர்ந்ததால் மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

சுனாமி ஆழிப்பேரலை தாக்கியதன் 21ம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டது. கடலோர மாவட்டங்களில் உயிரிழந்தவர்கள் நினைவாக மக்கள் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர்.

தூத்துக்குடி அருகே சாத்தூர் இருக்கன்குடி மாரியம்மன் கோயிலுக்கு பாதயாத்திரை சென்ற பக்தர்கள் கூட்டம் மீது கார் மோதிய விபத்தில் 3 பெண்கள் உயிரிழந்தனர்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு இன்று தனது 101வது பிறந்தநாளை கொண்டாடுகிறார் - அதனை முன்னிட்டு முதலமைச்சர் ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

கட்சி விரோத செயல்பாடுகளில் ஈடுபட்டதாக கூறி பாமக கௌரவ தலைவராக இருந்த ஜி.கே.மணியை கட்சியில் இருந்து நீக்கி பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிவித்துள்ளார்.

ஆந்திராவின் நந்தியாலா மாவட்டத்தில் பேருந்து மீது கார் மோதிய விபத்தில் 4 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் மறுபுறம் சென்ற பேருந்து மீது மோதியது.

அமெரிக்கா, சீனாவுக்கு அடுத்தபடியாக இந்தியாவில் 1 லட்சம் வாகன எரிபொருள் விற்பனை நிலையங்கள் செயல்பாட்டில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் இந்த எண்ணிக்கை இரு மடங்காகியுள்ளது.

ஜனநாயகன் படத்தின் இசை வெளியீட்டு விழாவை முன்னிட்டு நடிகர் விஜய், அவரது பெற்றோர், இசையமைப்பாளர் அனிருத் ஆகியோர் தனி விமானம் மூலம் மலேசியா புறப்பட்டுச் சென்றனர்.

நைஜீரியாவில் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத குழு மீது சக்தி வாய்ந்த தாக்குதல் நடத்தியதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். கிறிஸ்தவர்கள குறிவைத்து நடத்தப்பட்ட நிலையில் தீவிரவாதிகளுக்கு முடிவு கட்டியதாக கூறி அவர் கிறிஸ்துமஸ் வாழ்த்தை தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்து - ஆஸ்திரேலியா இடையேயான பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டி இன்று தொடங்கியது. முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலியா 152 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இங்கிலாந்து அணியும் தொடர் விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது.