Top 10 News Headlines: முதல்வர் சுற்றுப்பயணத்தில் மாற்றம்.. பாகிஸ்தானுடன் மோதும் இந்தியா.. 11 மணி செய்திகள்!
2 months ago 5
ARTICLE AD
சென்னை மத்திய கைலாஷ் பகுதியில் கட்டப்பட்ட எல் வடிவ மேம்பாலத்தை முதலமைச்சர் ஸ்டாலின் பொதுமக்கள் பயன்பாட்டுக்காக திறந்து வைத்தார். இதன்மூலம் ஓ.எம்.ஆர். சாலையில் போக்குவரத்து நெருக்கடி குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னையில் அறநிலையத் துறை சார்பில் வள்ளலார் மாநாட்டில் பங்கேற்று மூலிகை கண்காட்சியை முதலமைச்சர் ஸ்டாலின் பார்வையிட்டார்.
கன்னியாகுமரி செல்லும் முதலமைச்சர் ஸ்டாலின் சுற்றுப்பயணத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. பிப்ரவரி 19, 20க்கு பதிலாக 24,25 ஆகிய தேதிகளில் வருகை தருவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை மெரினா கடற்கரையில் இன்று இந்தியா - பாகிஸ்தான் போட்டி நேரடி ஒளிபரப்பு செய்யப்படும் என சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.
தவெக தலைவர் விஜய்யுடன் நடிகை ஒருவரை நயினார் நாகேந்திரன் இணைத்து பேசிய விவகாரம் - தமிழக பெண் எம்.பி.,க்கள் கடுமையான கண்டனம் தெரிவித்துள்ளனர்.
மறைந்த தயாரிப்பாளர் ஆர்.எம்.வீரப்பனின் மகன் தமிழழகன் மறைவுக்கு நடிகர் ரஜினிகாந்த் இரங்கல் தெரிவித்துள்ளார். அன்பு தம்பி தமிழழகன் மறைவு வேதனை அளிக்கிறது; அவரது ஆன்மா சாந்தியடையட்டும் என தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் கட்சி மிகவும் ஆபத்தானது. சட்டவிரோத ஊடுருவலுக்கு முற்றுப்புள்ளி வைக்க பாஜக உறுதி பூண்டுள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் மகா சிவராத்திரி இன்று கோலாகல கொண்டாட்டம் - சிவ ஆலயங்களில் பக்தர்கள் கூட்டம் குவிந்து வரும் நிலையில் முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என நோட்டீஸ் வழங்க எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Read Entire Article