Top 10 News Headlines: மருத்துவமனையில் மனைவியை கொன்ற கணவர், காஸாவில் உணவுக்கு பஞ்சம் - 11 மணி செய்திகள்

5 months ago 4
ARTICLE AD

நாங்கள் ஏமாளிகள் அல்ல - எடப்பாடி

“ஆட்சியில் பங்கு கொடுக்க நாங்கள் ஒன்னும் ஏமாளி அல்ல. கூட்டணி வேண்டும் என்றால் வேண்டும், வேண்டாம் என்றால் வேண்டாம். எதைப்பற்றியும் நாங்கள் கவலைப்படவில்லை. அதிமுக தனித்தே ஆட்சி அமைக்கும்” -திருவாரூரில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேச்சு

கனமழை - ஆரஞ்சு எச்சரிக்கை

தமிழ்நாட்டில் இன்று ஓரிரு இடங்களில் 12 செ.மீ முதல் 20 செ.மீ வரை மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளதால் ஆரஞ்சு எச்சரிக்கை விடுப்பு. இன்று முதல் ஜூலை 22ம் தேதிவரை கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் கணிப்பு.

மருத்துவமனை புகுந்து மனைவியை கொன்ற கணவர்

கரூர்: குளித்தலை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த மனைவியை கத்தியால் குத்தி கொலை செய்துவிட்டுத் தப்பியோடிய கணவர் விஷ்ருத் என்பவருக்கு போலீசார் வலைவீச்சு.
நேற்று இருவருக்கும் ஏற்பட்ட வாக்குவாதத்தில், மனைவி ஷ்ருதியை கடுமையாகத் தாக்கியதில் அவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இன்று அதிகாலை ஷ்ருதியை சரமாரியாகக் குத்திவிட்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டார்.

ரூ.22 ஆயிரத்திற்கு ஏலம் போன மீன்

புதுச்சேரி: ஏனாமில் மீனவர் வலையில் சிக்கிய 1.8 கிலோ எடையுள்ள அரிய வகை புலாசா மீனை ரத்தினம் என்ற மீன் வியாபாரி ரூ. 22,000-க்கு ஏலம் எடுத்தார். புதுச்சேரி பிராந்தியம் ஏனாம் பகுதி கோதாவரி நதி நீரில் தற்போது இந்த பிரபலமான புலாசா மீன் பருவம் அதிகமாக உள்ளது.

நாளை நாடாளுமன்றம் தொடர்

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் நாளை தொடங்குகிறது. அடுத்த ஒரு மாத காலம் நடைபெற உள்ள தொடரில், பஹல்காம் தாக்குதல், வாக்காளர் பட்டியல் சீர்திருத்தம் உள்ளிட்ட விவகாரங்களை எழுப்ப எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணி ஆயத்தம்.

15 வயது சிறுமியை தீ வைத்து கொளுத்திய மர்ம நபர்கள்

ஒடிசா: பூரி மாவட்டத்தில் மர்ம நபர்கள் சிலரால் தீ வைத்து கொளுத்தப்பட்ட 15 வயது சிறுமி, எய்ம்ஸ் மருத்துவமனையில் 70% தீ காயங்களுடன் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். இக்கொடூர செயலை செய்த நபர்களுக்கு போலீசார் வலைவீச்சு. சுயநினைவோடு உள்ள அச்சிறுமியிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது.

வேற்று மதத்தைச் சேர்ந்த 4 ஊழியர்கள் சஸ்பெண்ட்

திருப்பதி தேவஸ்தானத்தில் பணியாற்றி வந்த வேற்று மதத்தைச் சேர்ந்த 4 ஊழியர்கள் நேற்று பணியிடை நீக்கம். பல ஆண்டுகளுக்கு முன்பு வேற்று மதத்தைச் சேர்ந்த சிலர், இந்து பெயர்களை வைத்துக் கொண்டு SC/ST பிரிவினர் என போலி சான்றிதழ்களை கொடுத்து பணியில் சேர்ந்துள்ளனர்.

காஸாவில் உணவுக்கு பஞ்சம்

காஸாவில் உணவுக்காக காத்திருந்தவர்கள் மீது இஸ்ரேல் படையினர் துப்பாக்கிச்சூடு. உணவு விநியோக மையம் மீது நடத்திய தாக்குதலில் 32 பேர் சுட்டுக் கொல்லப்பட்டதாக தகவல்!
மணலில் சிதறிய கோதுமை மாவை போட்டிப்போட்டுக்கொண்டு மக்கள் சேகரிக்கும் பரிதாப காட்சி வெளியாகி மனதை உலுக்கியுள்ளது.

சவுதி இளவரசர் காலமானார்

சவுதி அரச குடும்பத்தைச் சேர்ந்த இளவரசர் அல்-வலீத் பின் காலெத் (35) காலமானார். 15 வயது சிறுவனாக இருந்தபோது விபத்தில் சிக்கி 20 ஆண்டுகளாக கோமாவில் இருந்தவரின் உயிர் பிரிந்தது.

இந்தியா - பாகிஸ்தான் போட்டி ரத்து

முன்னாள் வீரர்கள் பங்கேற்கும் உலக சாம்பியன்ஸ் ஆஃப் லெஜண்ட் கிரிக்கெட் போட்டியில், இன்று நடைபெறவிருந்த இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டி ரத்து செய்யப்பட்டுள்ளது. ஷிகர் தவான் உள்ளிட்ட பல இந்திய வீரர்கள் வெளியேறியதை அடுத்து நிர்வாகம் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.

Read Entire Article