ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள ராமேஸ்வரம் சேராங்கோட்டை பகுதியில் ஒருதலைக் காதல் விவகாரத்தில் பள்ளிக்குச் சென்ற மாணவியை இளைஞர் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக அந்த இளைஞர் கைது செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதனிடையே வங்கக்கடலில் நவம்பர் 22ம் தேதி மேலும் ஒரு காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாவதாகவும், இது மேற்கு, வடமேற்கு திசையில் தமிழ்நாடு நோக்கி நகர வாய்ப்புள்ளதாகவும் கணிக்கப்பட்டுள்ளது.

பாஜக ஆளும் மாநிலங்களில் உள்ள சிறிய இரண்டாம் நிலை மாநகரங்களுக்கு கூட மெட்ரோ ரயில் சேவை வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களை மத்திய அரசு புறக்கணிப்பது எளிதல்ல என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். கோவை, மதுரை மாவட்டங்களில் மெட்ரோ ரயில் சேவை அனுமதி நிராகரிக்கப்பட்டதற்கு அவர் கண்டனம் தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடி ஒருநாள் பயணமாக இன்று கோவை மாவட்டத்திற்கு வருகை தருவதால் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இயற்கை வேளாண் மாநாட்டில் அவர் பங்கேற்று உரையாற்றுகிறார்.

தூத்துக்குடி மாவட்டம் கடற்கரை சாலையில் அதிகாலையில் நடந்த கோர விபத்தில் காரில் பயணம் செய்த 3 மருத்துவ கல்லூரி பயிற்சி மருத்துவர்கள் உயிரிழந்தனர். இருவர் படுகாயங்களுடன் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

தங்கம் விலை சவரனுக்கு ரூ.800 கூடியுள்ளது. ஒரு கிராம் ரூ.100 உயர்ந்து ரூ.11,500க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரன் ரூ.92,000 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

சபரிமலையில் பக்தர்கள் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் காவல்துறையினர் திணறி வருகின்றனர். தமிழ்நாட்டில் இருந்து 2 தேசிய பேரிடர் மீட்பு படை சபரிமலை விரைந்துள்ளது. தரிசனம் முடித்து உடனே கீழிறங்க உத்தவிடப்பட்டுள்ளது.

பீகாரில் நிதிஷ்குமார் தலைமையில் அமையவுள்ள அமைச்சரவையில் முக்கிய துறைகளை கைப்பற்ற பாஜக, ஜேடியு ஆகிய கட்சிகள் இடையே தீவிர முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. சட்டப்பேரவை தலைவர் பதவியை கைப்பற்ற போட்டி நடந்து வருகின்றது.

சௌதி அரேபியாவில் நடைபெற்ற விபத்தில் உயிரிழந்த 42 இந்தியர்களின் உடல்களை இஸ்லாமிய முறைப்படி அங்கேயே அடக்கம் செய்ய தெலங்கானா அரசு முடிவு செய்துள்ளது. உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு ரூ.5 லட்சம் இழப்பீடு, இறுதிச்சடங்கில் பங்கேற்க வைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளது.

சீனாவின் பெய்ஜிங்கில் உள்ள பூச்சி அருங்காட்சியகத்தில் அருகில் உள்ள கடையில் புழுக்கள், கரப்பான் பூச்சியை கலந்து பிரத்யேக காஃபி விற்பனை செய்யப்படுகிறது. ரூ.530க்கு விற்பனை செய்யப்படும் இதனை இளைஞர்கள் விரும்பி வாங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

வங்கதேச அணிக்காக 100 டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்ற முதல் வீரர் என்ற சாதனையை முஸ்தபிகுர் ரஹீம் படைத்தார். அயர்லாந்து அணிக்கெதிரான 2வது டெஸ்டில் இந்த சாதனையை நிகழ்த்தினார்.