“பாஜக அரசின் சூழ்ச்சிகளை எதிர்த்து நிற்கிறோம்"

“கலைஞர் இன்று நம்முடன் இருந்திருந்தால் எத்தகைய உணர்வெழுச்சியுடன் ஒன்றிய அரசை எதிர்த்து நிற்பாரோ, அவரிடம் அரசியல் பாடம் கற்ற கழகத்தினரான நாமும் அதே உணர்வுடன் ஒன்றிய பாஜக அரசின் தமிழர் விரோத, மனிதகுல விரோத சூழ்ச்சிகளை எதிர்த்து நிற்கிறோம்”
-திமுக தொண்டர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்

ஓபிஎஸ்-க்கு நயினார் நாகேந்திரன் பதிலடி

"6 முறை போனில் தொடர்புகொண்டும் நயினார் நாகேந்திரன் அழைப்பை எடுக்கவில்லை" என்ற முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் குற்றச்சாட்டுக்கு தமிழ்நாடு பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் மறுப்பு. அவரை பற்றி தான் குறைசொல்ல விரும்பவில்லை என்றும் விளக்கம்.

பருவமழை ஏற்பாடுகள் தீவிரம்

சென்னையில் மெட்ரோ, மேம்பால கட்டுமானம், குடிநீர் வாரியப் பணிகள் ஆகியவை நடக்கும் இடங்களில் பருவ மழைக்காக 477 நீர் இறைக்கும் ட்ராக்டர்களை நிறுத்த மாநகராட்சி ஏற்பாடு.
செப். 15 முதல் ஜனவரி 14ம் தேதி வரை வாடகைக்கு எடுக்கப்படும் இந்த ட்ராக்டர்களுக்காக டெண்டர் கோரப்பட்டுள்ளது.

சிலைகள் பறிமுதல்

தூத்துக்குடி திரேஸ்புரம் பகுதியில் இருந்து, இலங்கைக்கு கடத்துவதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ.30 லட்சம் மதிப்பிலான ஐம்பொன் விஷ்ணு சிலை பறிமுதல்.
கடத்தலில் ஈடுபட்ட ஏரல் பகுதியைச் சேர்ந்த அந்தோணி ராஜ், பாலமுருகன் ஆகியோர் கைது.

கேரள கன்னியாஸ்திரிகள் ஜாமினில் விடுவிப்பு

சத்தீஸ்கரில் ஆள்கடத்தல் புகாரில் கைதான கேரள கன்னியாஸ்திரிகள் இருவருக்கு NIA நீதிமன்றம் ஜாமின் வழங்கியதால் சிறையில் இருந்து விடுவிப்பு. கேரள பாஜக தலைவர் நேரில் சென்று வரவேற்பு.பாஜகவின் இரட்டை நிலைப்பாட்டை சி.பி.எம்., காங்கிரஸ் கட்சிகள் கடுமையாக விமர்சித்துள்ளன.

வாழ்நாள் பயணத்தடை

மும்பையில் இருந்து கொல்கத்தா செல்லும் விமானத்தில் சக பயணியை தாக்கியவருக்கு வாழ்நாள் பயணத் தடை விதிக்கப்படுவதாக இண்டிகோ விமான நிறுவனம் தெரிவிப்பு. இதற்கிடையே பாதிக்கப்பட்ட அசாமைச் சேர்ந்த நபர் இன்னும் வீடு திரும்பவில்லை என குடும்பத்தினர் புகார் அளித்துள்ளனர்

தீவிரமடையும் கட்டுப்பாடுகள்

அமெரிக்காவில் திருமண அடிப்படையில் குடியுரிமைக்கான க்ரீன் கார்ட் வழங்குவதற்கான விதிகளை தீவிரமாக்க அதிபர் ட்ரம்ப் முடிவெடுத்துள்ளார். இருவருக்கும் நேர்காணல் மற்றும் கூடுதல் ஆவணங்களை சமர்பிக்க வலியுறுத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

ஆசிய கோப்பை டி20 - அட்டவணை வெளியீடு

ஆசிய கோப்பை டி20 தொடர் ஐக்கிய அமீரகத்தில் வரும் செப். 09 தொடங்கி செப். 19 வரை நடக்கிறது செப். 14ம் தேதி துபாய் மைதானத்தில் இந்தியா - பாகிஸ்தான் மோதல். லீக் சுற்று மட்டுமின்றி மேலும் இரண்டு முறை இந்தியா - பாகிஸ்தான் இந்த போட்டியில் மோதவும் வாய்ப்புள்ளது.

தென்னாப்ரிக்கா சாம்பியன்

உலக லெஜெண்ட்ஸ் சாம்பியன்ஷிப் தொடர் இறுதிப்போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி கோப்பையை வென்றது தென்னாப்பிரிக்கா. பாகிஸ்தான் உடனான அரையிறுதியை இந்தியா புறக்கணித்ததால் இறுதிப் போட்டிக்கு பாகிஸ்தான் தகுதிபெற்றது குறிப்பிடத்தக்கது
பாக்., - 195/5 (20), தென்னாப்ரிக்க - 197/1 (16.5)

கடைசி டெஸ்டில் வெற்றி யாருக்கு?

இங்கிலாந்து அணிக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற, இந்திய அணிக்கு 9 விக்கெட்டுகள் தேவைப்படுகிறது. இன்னும் இரண்டு நாட்கள் மீதமுள்ள நிலையில், இங்கிலாந்து அணி வெற்றி பெற இன்னும் 324 ரன்கள் தேவைப்படுகிறது. மூன்றாவது நாள் முடிவில் அந்த அணி ஒரு விக்கெட்டை இழந்து 50 ரன்களை சேர்த்துள்ளது.