Top 10 News Headlines: நீதிபதிக்கு எதிராக திமுக, புதுச்சேரியில் விஜய், நாடாளுமன்றத்தில் SIR - 11 மணி வரை இன்று

2 days ago 2
ARTICLE AD

நீதிபதியை பதவி நீக்கம் செய்யக்கோரும் திமுக

திருப்பரங்குன்றம் வழக்கில் சர்ச்சைக்குரிய உத்தரவை பிறப்பித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனை பதவி நீக்கம் செய்யும் தீர்மான நோட்டீசை மக்களவை சபாநாயகரிடம் வழங்கவுள்ளது திமுக. இம்பீச்மென்ட் தீர்மானம் கொண்டுவர, மக்களவையில் 100 உறுப்பினர்கள், மாநிலங்களவையின் 50 உறுப்பினர்கள் கையெழுத்திட வேண்டும், அந்த அடிப்படையில் திமுக சார்பில் மக்களவையில் இந்தியா கூட்டணி கட்சி உறுப்பினர்களின் கையெழுத்துகள் பெறப்பட்டுள்ளன.

துப்பாக்கியுடன் வந்த தவெக நிர்வாகியின் பாதுகாவலர் கைது!

விஜய் கூட்டத்துக்கு கைத்துப்பாக்கியுடன் வந்தவர் சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த தவெக நிர்வாகியின் தனி பாதுகாவலர் டேவிட் என அடையாளம் காணப்பட்டுள்ளது.
புதுச்சேரி உப்பளம் மைதானத்தில் நடைபெறும் தவெக கூட்டத்துக்கு தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களுக்கு அனுமதி இல்லை என்ற நிலையில், சிவகங்கை மாவட்ட தவெக பிரமுகர் துப்பாக்கியுடன் உள்ளே நுழைய முயற்சித்ததால் போலீசாரால் கைது.

தொடரும் பாதிப்பு

நாடு முழுவதும் இண்டிகோ விமான சேவை 8வது நாளாக பாதிப்பு. சென்னையில் இன்று 23 புறப்பாடு, 18 வருகை என 41 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதால் பயணிகள் அவதி.

நாடாளுமன்றத்தில் இன்று SIR விவாதம்!

வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பாக, மக்களவையில் இன்று 10 மணி நேரம் விவாதம் நடைபெறும் என ஒன்றிய அரசு அறிவிப்பு. மக்களவையில் இன்று நடைபெற உள்ள இந்த விவாதத்தை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தொடங்க உள்ளார். இறுதியாக சட்டத்துறை அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் பதிலளிக்கிறார்.

"Pen and Paper முறைக்கு தேர்வுகளை மாற்றிடுக!''

நுழைவுத் தேர்வுகளில் ஏற்படும் குளறுபடிகளை தடுக்க எழுத்துத் தேர்வு முறையில் தேர்வுகளை நடத்த அதிக முக்கியத்துவம் வழங்க NTA-வுக்கு கல்விக்கான நாடாளுமன்ற நிலைக்குழு பரிந்துரை.  2024ம் ஆண்டில் NTA அமைப்பு நடத்திய 14 தேர்வுகளில், 5-ல் பெரிய குளறுபடிகள் ஏற்பட்டதாகவும், தேர்வர்களின் நம்பிக்கையை இது குறைப்பதாகவும் கண்டிப்பு.

கடன்கள் தள்ளுபடி

கடந்த 5 நிதியாண்டுகளில் பொதுத்துறை வங்கிகள் சுமார் ரூ.6.15 லட்சம் கோடி வாராக் கடன்களை தள்ளுபடி செய்துள்ளதாக நாடாளுமன்றத்தில் நிதி அமைச்சகம் தகவல்.

ED-யின் 11 ஆண்டுகால வழக்கு விவரங்கள்

2014ம் ஆண்டு முதல் 2025 நவ.30 வரை சுமார் 16,604 தனிநபர்கள் மற்றும் நிறுவனங்கள் மீது அமலாக்கத்துறை வழக்குகள் பதிந்துள்ளதாக நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தகவல். அவைகளில் 2,416 குற்றப்பத்திரிகைகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும், 56 வழக்குகளில் 121 பேர் மட்டுமே குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிப்பு.

புதிய வரி விதித்த ட்ரம்ப்

இந்தியாவில் இருந்து இறக்குமதியாகும் அரிசியால் அமெரிக்க விவசாயிகள் பாதிக்கப்படுவதாக அதிபர் ட்ரம்ப் குற்றச்சாட்டு. அதிகளவில் அரிசியை இறக்குமதி செய்யும் இந்தியா, சீனா, தாய்லாந்து உள்ளிட்ட நாடுகள் மீது புதிய வரிகளை விதிக்க பரிசீலிக்க அமெரிக்க அதிகாரிகளுக்கு ட்ரம்ப் உத்தரவு.

வார்னர் ப்ரோஸிற்கு கடும் போட்டி

Warner Bros. Discovery சுமார் $108.4 பில்லியன் மதிப்பிலான புதிய திட்டத்தை முன்வைத்தது Paramount நிறுவனம். ஏற்கனவே $82.7 பில்லியன் திட்டத்தை முன்வைத்த Netflix அதிலிருந்து பின்வாங்கினால், $5.8 பில்லியன் Break-Up தொகை வழங்க தயாராக இருப்பதாகவும் Paramount அறிவிப்பு.

இந்தியா - தென்னாப்ரிக்கா மோதல்:

இந்தியா - தென்னாப்ரிகா அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டி0 தொடரின் முதல் போட்டி இன்று நடைபெறுகிறது. கட்டக்கில் இரவு 7 மணிக்கு போட்டி தொடங்குகிறது.

Read Entire Article