தமிழ்நாட்டில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளது. இப்படியான நிலையில் வங்கக்கடலில் வரும் நவம்பர் 26ம் தேதி புயல் உருவாக உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள சுங்குவார் சத்திரத்தில் செயல்படும் தனியார் கல்லூரியில் தமிழக வெற்றிக் கழகத்தலைவர் விஜய் பொதுமக்களை சந்தித்து உரையாடுகிறார். இதனை முன்னிட்டு 2 ஆயிரம் பேர்களுக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

உடல்நலக்குறைவால் காலமான கவிஞர் ஈரோடு தமிழன்பன் உடலுக்கு காவல்துறை மரியாதையுடன் இறுதி அஞ்சலி நடைபெறும் என முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். அவரின் தமிழ் தொண்டினை கௌரவிக்கும் வகையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தென் மாவட்டங்களில் கொட்டித் தீர்க்கும் கனமழை காரணமாக திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் பல இடங்களில் மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. பல இடங்களில் அதி கனமழை அளவு பதிவாகியுள்ளது.

திருச்செந்தூருக்கு வரும் ஐயப்ப பக்தர்கள் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படாத வண்ணம் வாகனங்களை நிறுத்த வேண்டும் என திருச்செந்தூர் நகர காவல்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

கடலூர் மாவட்டத்தில் கஞ்சா வியாபாரி துப்பாக்கியால் சுட்டுப் பிடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மதுரையில் குடும்ப தகராறு காரணமாக எலக்ட்ரீசியன் ஒருவர் தனது குழந்தைகளை கொன்று தானும் தற்கொலை செய்துக் கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் பட்டின மருதூர் கடற்கரையில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.15 லட்சம் மதிப்பிலான பீடி இலைகள் பறிமுதல் செய்யப்பட்டது. 2 லோடு வாகனங்கள் பிடிபட்ட நிலையில் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

டெல்லியில் காற்று மாசுபாடு அதிகரித்து வரும் நிலையில், 5 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஆன்லைன் கல்வி, 50 சதவிகித ஊழியர்கள் வீட்டிலிருந்து பணியாற்ற அரசு உத்தரவிட்டுள்ளது.

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தொடங்கவுள்ள நிலையில் 10 மசோதாக்களை நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

எஸ்.ஐ.ஆர் மூலம் இந்தியா கூட்டணி வென்ற ஒவ்வொரு தொகுதியிலும் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்குகளை நீக்க பாஜக சதி செய்துள்ளதாக அகிலேஷ் யாதவ் பரபரப்பு குற்றம் சாட்டியுள்ளார்.

பயங்கரவாதத்திற்கு எதிரான உலகளாவிய ஒருங்கிணைந்த நடவடிக்கை தேவை என தென்னாப்பிரிக்காவில் நடைபெற்று வரும் ஜி20 மாநாட்டில் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

ஜப்பான் நாட்டில் சுனாமியால் சேதமடைந்த புகுஷிமா அணுமின் நிலையத்தை மீண்டும் சீரமைக்கும் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. விரைவில் பணிகள் தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தென்னாப்பிரிக்கா அணிக்கெதிரான ஒருநாள் தொடரின் இருந்து கழுத்து வலி காரணமாக கேப்டன் சுப்மன் கில் விலகியுள்ளார். முன்னதாக அந்த அணியுடனான இரண்டாவது டெஸ்டிலும் அவர் விளையாடவில்லை.

பெண்கள் உலகக்கோப்பை கபடி தொடரின் அரையிறுதி போட்டியில் இந்தியா - ஈரான் அணிகள் பலப்பரீட்சை நடத்துகிறது.