மசோதா நகலை எரித்த முதலமைச்சர்

“அன்று தமிழ்நாட்டில் பற்றத் தொடங்கிய தீ, டெல்லி பணிந்த பின்பே தணிந்தது. இன்று தமிழரைச் சொந்த நாட்டில் அகதிகளாக்கும் கருப்பு சட்டத்தை எரித்து மற்றுமொரு தீயைப் பற்ற வைத்திருக்கிறேன்” - தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு தெரிவித்து கறுப்புக்கொடி ஏற்றி மசோதா நகலை எரித்து தனது எதிர்ப்பை தெரிவித்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

செஸ் போட்டி - தமிழக வீராங்கனை அசத்தல்

2026-ம் ஆண்டின் FIDE Women's Candidates Tournament-ஐ வென்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த வைஷாலி ரமேஷ்பாபு. இத்தொடரில் வெற்றி பெற்றதன் மூலம் உலக மகளிர் செஸ் சாம்பியன் பட்டத்திற்காக சீனாவைச் சேர்ந்த நடப்பு சாம்பியன்|ஜூ வென்ஜூனை எதிர்த்து போட்டியிட தகுதி பெற்றுள்ளார்

தவெக தேர்தல் வாக்குறுதிகள் இன்று வெளியீடு

சட்டப்பேரவைத் தேர்தலுக்கான தவெகவின் தேர்தல் அறிக்கையை இன்று மாலை 3 மணிக்கு வெளியிடுகிறார் அக்கட்சித் தலைவர் விஜய். சென்னையில் நடைபெறும் நிகழ்ச்சிக்கு 800 பேருக்கு மட்டுமே அனுமதி பெறப்பட்டுள்ளதால், QR code பாஸ் இல்லாதவர்களுக்கு அனுமதி இல்லை என திட்டவட்டம்.

உயர்ந்த தங்கம் விலை

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.320 கூடி ஒரு லட்சத்து 14 ஆயிரத்து 880 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் 14 ஆயிரத்து 360 ரூபாயாக உள்ளது.

எதிர்ப்புகளுக்கு மத்தியில் சிறப்பு கூட்டத்தொடர்

எதிர்க்கட்சிகள் குறிப்பாக தென்மாநிலங்களின் கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில், நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடர் இன்று கூடுகிறது. மக்களவை தொகுதிகளின் எண்ணிக்கையை 850 ஆக உயர்த்த, அரசியலமைப்புச் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ள மத்திய அரசு முனைப்பு

பேச்சுவார்த்தையில் முன்னேற்றம்

ஈரான் உடனான போர் நிறுத்த பேச்சுவார்த்தை சுமூகமாக செல்வதாக, அமெரிக்காவின் வெள்ளை மாளிகை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நேரடி பேச்சுவார்த்தை தொடர்பான இறுதி முடிவு எடுக்கப்படவில்லை எனவும் விளக்கம். ஹார்மஸ் நீரிணையில் ஓமன் மார்க்கமாக கப்பல்களை அனுமதிக்க ஈரான் சம்மதம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

பெங்களூரு அணி அபாரம்

லக்னோ அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம், 4 வெற்றிகளுடன் பெங்களூரு அணி புள்ளிப்பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது. ராஜஸ்தான் அணியை காட்டிலும் வலுவான ரன் ரேட்டை கொண்டிருப்பதால் பெங்களூரு முதலிடம் பிடித்துள்ளது.

வெற்றிப்பாதைக்கு திரும்புமா மும்பை?

ஐபிஎல்லில் இன்றைய லீக் போட்டியில் நடப்பு தொடரில் இதுவரை தோல்வியே சந்திக்காத ஒரே அணியான பஞ்சாபிற்கு எதிராக மும்பை அணி களமிறங்குகிறது. கடைசியாக விளையாடிய மூன்று போட்டிகளிலும் தோல்வி கண்டுள்ள ஹர்திக் தலைமையிலான அணிக்கு, இன்றைய போட்டி முக்கியமானதாக கருதப்படுகிறது. வான்கடே மைதானத்தில் இரவு 7.30 மணிக்கு போட்டி தொடங்குகிறது.