மழைக்கு வாய்ப்பு

சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், மயிலாடுதுறை, கடலூர், நாகை, புதுக்கோட்டை, திருவாரூர், தஞ்சாவூர், ராமநாதபுரம், தூத்துக்குடி, கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி, கோவை ஆகிய 17 மாவட்டங்களில் இன்று மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு.

சட்டத்தை மாற்ற துடிக்கும் டிரம்ப்

அமெரிக்காவில் 1927-ஆம் ஆண்டு முதல் நடைமுறையில் இருக்கும் தபால் மூலம் கைத்துப்பாக்கிகளை அனுப்பும் தடையை நீக்க டிரம்ப் நிர்வாகம் திட்டம். ஏறத்தாழ ஒரு நூற்றாண்டு கால தடையை நீக்க அஞ்சல் துறைக்கு அறிவுறுத்தப்பட்டுள்ள நிலையில், இதற்கு லிபரேசன் கட்சியை சேர்ந்த 24 வழக்கறிஞர்கள் கடும் எதிர்ப்பு. இந்த முடிவு அமெரிக்காவில் குற்றச்சம்பவங்களை அதிகரிக்கக்கூடும் என அவர்கள் அச்சம்.

வழக்குப்பதிவு

தவெகவை ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்காத ஆளுநரை கண்டித்து சென்னையில் போராட்டம் நடத்திய காங்கிரஸ் கட்சியினர் கிரிஷ் சோடங்கர், செல்வப்பெருந்தகை மீது சிந்தாதிரிப்பேட்டை போலீசார் மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு

ஹண்டா வைரஸ் எச்சரிக்கை

ஹண்டா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்ட MV Hondius சொகுசு கப்பலில் பயணித்த சிங்கப்பூரை சேர்ந்த இருவர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்
அர்ஜென்டினாவில் இருந்து புறப்பட்ட இந்த கப்பலில் ஏற்கனவே மூவர் உயிரிழந்த நிலையில், தொற்று பரவலை தடுக்க இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது சிங்கப்பூர் சுகாதார முகமை

கேரளாவிலும் இழுபறி

கேரளம் மாநிலத்தில் காங்கிரஸ் 10 ஆண்டுகளுக்குப் பிறகு ஆட்சியை பிடித்துள்ள நிலையில், முதலமைச்சர் தேர்வு செய்வதில் தொடர்ந்து இழுபறி நீடிக்கிறது.கே.சி. வேணுகோபாலுக்கு பெரும்பாலான எம்.எல்.ஏ-க்கள் ஆதரவு தெரிவித்துள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ள நிலையில், டெல்லியில் இன்று முக்கிய ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது

போர் நிறுத்தம்

ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே இன்று முதல் மே 11-ஆம் தேதி வரை மூன்று நாட்களுக்கு போர் நிறுத்தம் அமல்படுத்தப்படுகிறது என அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்தார்.ரஷ்யாவின் 'போர் வெற்றி தினத்தை' முன்னிட்டு மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த உடன்படிக்கையின்படி இரு நாடுகளும் தலா ஆயிரம் கைதிகளைப் பரிமாறிக் கொள்ள ஒப்பக்கொண்டுள்ளன.

கட்-ஆஃப் மதிப்பெண் குறைய வாய்ப்பு

பிளஸ் 2 பொதுத்தேர்வில் 100-க்கு 100 மதிப்பெண் எடுத்தவர்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டை விட குறைந்துள்ளது. என்ஜினியரிங் படிப்புக்கான கட்-ஆஃப் மதிப்பெண் குறைய வாய்ப்புள்ளதாக கல்வியாளர்கள் கணிப்பு

ஏற்பாடுகள் நிறுத்தம்

தவெக தலைவர் விஜய்யை ஆட்சி அமைக்க இதுவரை ஆளுநர் அழைப்பு விடுக்காத நிலையில், சென்னை நேரு அரங்கில் நடைபெற்று வந்த பதவியேற்பு நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் தற்காலிகமாக நிறுத்தம்

டிடிவி புகார்

அமமுக எம்.எல்.ஏ. பெயரில் தவெக போலி ஆதரவு கடிதம் தயாரித்ததாக தவெகவுக்கு எதிராக கிண்டி காவல்நிலையத்தில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் புகார்.

பாஜகவும் சம்பந்தம் இல்லை

`தமிழகத்தில் ஆட்சியமைக்கும் விவகாரத்தில் பாஜகவுக்கு தொடர்பு இல்லை. நடக்கும் அரசியல் குழப்பங்களுக்கும் பாஜகவுக்கு எந்த சம்பந்தமும் இல்லை. ஆளுநர் விவகாரத்தில் பாஜகவை தேவையில்லாமல் இழுக்கிறார்கள் என மத்திய இணையமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.