திருவண்ணாமலை வேளாண் துறை கண்காட்சியை முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைத்து பார்வையிட்டார்.

சென்னையில் ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.13 ஆயிரத்துக்கு விற்பனை செய்யப்படுகிறது. இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.880 உயர்ந்துள்ளது. வெள்ளி விலை வரலாற்றில் இல்லாத அளவுக்கு கிராமுக்கு ரூ.20 உயர்ந்தது.

வாக்காளர் பட்டியலில் பெயரைச் சேர்க்க ஏதுவாக டிசம்பர் 26ம் தேதி முதல் 2026, ஜனவரி 25ம் தேதி வரை இருப்பிடச் சான்றிதழை கட்டணமின்றி பெறலாம் என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

சென்னை பாரிமுனையில் இருந்து தலைமைச் செயலகத்திற்கு பேரணி செல்ல முயன்ற திருவிக நகர், ராயபுரம் மண்டலங்களைச் சேர்ந்த தூய்மைப் பணியார்கள் கைது செய்ய்யப்பட்டனர். சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் போக்குவத்து பாதிக்கப்பட்டுள்ளது.

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே கொங்கலாபுரத்தில் வீட்டின் கேட் சுவர் இடிந்து விழுந்ததில் இரு சிறுமிகள் உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சியில் பிப்ரவரி 21ம் தேதி நாம் தமிழர் கட்சியின் மாநாடு நடைபெறும் என அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

தெற்கு ரயில்வேயில் கீழ் தமிழ்நாட்டில் இயங்கும் பெரும்பாலான ரயில்களில் நேரமானது ஜனவரி 1ம் தேதி மாற்றப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ரயில்களின் வேகத்தை அதிகரித்து புறப்படும் நேரத்தில் மட்டும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

தாய்லாந்து மற்றும் கம்போடியா ஆகிய இரு நாடுகளும் தற்காலிகமாக போர் நிறுத்த உடன்பாட்டை எட்டியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இருநாட்டு எல்லையில் 20 நாட்களாக நடந்து வரும் போரில் 101 பேர் இறந்த நிலையில் 50 லட்சத்துக்கும் அதிகமானோர் இடம்பெயர்ந்துள்ளனர்.

விஜய் ஹசாரே தொடரில் குஜராத் அணிக்கெதிரான போட்டியில் 77 ரன்கள் குவித்ததற்காக டெல்லி அணி வீரர் விராட் கோலி ஆட்டநாயகன் விருது வென்றார்.

மலேசியாவில் விஜய் நடித்துள்ள ஜனநாயகன் ஆடியோ வெளியீட்டு விழா இன்று நடைபெறுகிறது. விஜய்யின் கடைசிப்படம் என்பதால் ஒட்டுமொத்த தமிழ் சினிமாவும் இந்நிகழ்ச்சியை எதிர்நோக்கி காத்திருக்கிறது.

பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற 175 ரன்களை இலக்காக நிர்ணயித்த ஆஸ்திரேலியா. முதல் இன்னிங்ஸில் 40 ரன்கள் முன்னிலையுடன் விளையாடிய ஆஸ்திரேலியா 2வது இன்னிங்ஸில் 132 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.