வழக்கு ஒத்திவைப்பு

திருப்பரங்குன்ற தீபம் தொடர்பான நீதிமன்ற அவமதிப்பு வழக்கின் விசாரணை டிச. 9 ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு
தமிழ்நாடு அரசின் கோரிக்கையை ஏற்று ஒத்திவைத்தது உயர்நீதிமன்றக் மதுரைக் கிளை

ரெப்போ விகிதம் குறைப்பு

வங்கிகளின் குறுகிய கால கடனுக்கான ரெப்போ வட்டி விகிதம் 0.25% குறைக்கப்படுவதாக ரிசர்வ் வங்கி ஆளுநர் அறிவிப்பு. இந்த குறைப்பை அடுத்து ரெப்போ விகிதம் 5.25%-ஆக நிர்ணயம். ரெப்போ வட்டி விகிதம் குறைக்கப்படுவதன் மூலம் வீடு, வாகன கடன்களுக்கான வட்டி குறையும் என எதிர்பார்ப்பு!

முதல்வர் பதிவு

"மாமதுரைக்குத் தேவை வளர்ச்சி அரசியலா அல்லது ..... அரசியலா? என்பதை மக்கள் முடிவு செய்வார்கள்.
மெட்ரோ இரயில், AIIMS, புதிய தொழிற்சாலைகள், வேலைவாய்ப்புகள் இவைதான் மாமதுரையின் - வளர்ச்சிக்காக அங்கு வாழும் மக்கள் கேட்பது!”

நாடு கடத்தல்

2025 ஜனவரி முதல் தற்போது வரை அமெரிக்காவில் இருந்து 3258 இந்தியர்கள் நாடு கடத்தப்பட்டுள்ளனர் - மாநிலங்களவையில் அமைச்சர் ஜெய்சங்கர் பதில் கடந்த ஆண்டு 1368 பேர் நாடு கடத்தப்பட்ட நிலையில், சட்டவிரோத குடியேறிகளை நாடு கடத்தும் நடவடிக்கைகளை ட்ரம்ப் தீவிரப்படுத்தியதால் இந்தாண்டு எண்ணிக்கை இரட்டிப்பு. 2009ல் இருந்து மொத்தம் 18,822 இந்தியர்கள் நாடு கடத்தப்பட்டுள்ளனர்

இண்டிகோ பயணிகளை அனுமதிக்க வேண்டாம்!

நாடு முழுவதும் இண்டிகோ ஏர்லைன்ஸ் விமான சேவை 3ம் நாளாக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், ஒரு இண்டிகோ பயணியை கூட சென்னை விமான நிலையத்திற்குள் அனுமதிக்க வேண்டாம் என இண்டிகோ ஏர்லைன்ஸ் நிறுவனம் சென்னை விமான நிலைய CISF-க்கு கடிதம்.

மழைக்காலத்தில் மட்டுமே பாகிஸ்தானுக்கு நதி நீர்

சட்லஜ், பியாஸ் நதிகளில் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் அதிக மழைப் பொழிவால் வெள்ளம் ஏற்படும் பருவமழைக் காலத்தைத் தவிர வேறு எப்போதும் அந்த நதிகளில் உபரிநீர் பாகிஸ்தானுக்குத் திறந்துவிடப்படாது மக்களவையில் ஒன்றிய இணையமைச்சர் பதில்
பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடியாக சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை இந்தியா நிறுத்திவைத்துள்ள நிலையில், அணைகளின் நீர்மட்டம் வெகுவாக உயரும்போது பாதுகாப்புக்காக மட்டுமே உபரி நீர் வெளியேற்றப்படும் என குறிப்பிட்டுள்ளார்

திமுக நோட்டீஸ்

திருப்பரங்குன்றம் விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்தக் கோரி திமுக, காங்கிரஸ் எம்.பி.க்கள் நோட்டீஸ்
திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவர் கனிமொழி மற்றும் காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் மக்களவையில் நோட்டீஸ் கொடுத்துள்ளனர்.

113 பேர் மீது வழக்கு

திருப்பரங்குன்றத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் உள்ளிட்ட 113 பேர் மீது வழக்குப்பதிவு.சட்டவிரோதமாக கூடுதல், பொது அமைதிக்கு பங்கம் விளைவித்தல் உள்ளிட்ட 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு; திருப்பரங்குன்றம் உச்சியில் உள்ள தூணில் நீதிமன்ற உத்தரவை அடுத்து தீபம் ஏற்றச் சென்ற நயினார் நாகேந்திரன்; தீர்ப்பை எதிர்த்து தமிழ்நாடு அரசு மேல்முறையீடு செய்ய உள்ளதாகக் கூறி மலையேற அனுமதி மறுத்த காவல்துறையினர்.

ரூட்டுக்கு நன்றி

“எங்கள் கண்களை காப்பாற்றியதற்கு நன்றி ரூட்" ஆஷஸ் டெஸ்டில் சதமடித்த ஜோ ரூட்டுக்கு நன்றி சொன்ன ஹைடனின் மகள் கிரேஸ் ஹைடன். ஆஷஸ் தொடரில் ஜோ ரூட் சதமடிக்கவில்லை எனில், மைதானத்தில் நிர்வாணமாக ஓடுவேன் என கூறியிருந்தார் ஹைடன்.

ஒரே காரில் பயணம்

இந்தியா வந்துள்ள ரஷ்ய அதிபர் புதின், வழக்கமாக பாதுகாப்பு அம்சங்கள் நிறைந்த தனது Aurus Senat காரை பயன்படுத்துவதற்கு பதில், பிரதமர் மோடியுடன் ஃபார்ச்சூனர் காரில் பயணம் செய்தது கவனம் பெற்றுள்ளது. ஜப்பான் தயாரிப்பு காரான டொயோட்டா ஃபார்ச்சூனர் காரில் இருவரும் பிரதமர் அலுவலகம் வரை பயணம் செய்தனர்.