உலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியது. இந்நிகழ்ச்சியைக் காண முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மதுரைக்கு வருகை.

சென்னையின் பழமை மற்றும் வரலாற்று சிறப்புமிக்க இடங்களை கண்டுகளிக்கும் வகையில் சிறப்பு சுற்று வட்ட பேருந்து சேவையான “சென்னை உலா” தொடங்கப்பட்டது. ரூ.50 கட்டணத்தில் இயக்கப்படும் 5 பேருந்துகளில் நாள் முழுவதும் 16 வழித்தடங்களில் பயணம் செல்லலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிமுகவுக்கும் - திமுகவும் இடையே தான் போட்டி உள்ளது. 3வது கட்சியை நீங்கள்தான் (ஊடகம்) பெரிதுபடுத்துகிறீர்கள். அவர்கள் இன்னும் களம் காணவே இல்லை. களம் கண்டால்தான் அவர்கள் வாக்கு சதவீதம் குறித்து தெரியும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தவெகவை மறைமுகமாக விமர்சித்துள்ளார்.

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.400 உயர்ந்துள்ளது. ஒரு கிராம் ரூ.13,280-க்கும், ஒரு சவரன் ரூ.1,06,240-க்கும் விற்பனை. இதேபோல், வெள்ளியின் விலை கிராமிற்கு ரூ.4 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.310-க்கு விற்பனை.

MGR-ன் தொலைநோக்குப் பார்வையை நனவாக்க நாங்கள் எப்போதும் பாடுபடுவோம் என, எம்ஜிஆர் பிறந்த நாளில் பிரதமர் மோடி பதிவு.

அனைவருக்கும் கல்வி திட்டத்தில் தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டிய ரூ.3,500 கோடி நிதியை உடனடியாக விடுவிக்கக் கோரிய வழக்கில், 4 வாரங்களில் மத்திய அரசு பதில் மனு தாக்கல் செய்ய உச்சநீதிமன்றம் இறுதி வாய்ப்பு வழங்கி உத்தரவு.

தமிழ்நாட்டிற்கு மேலும் 3 புதிய அம்ரித் பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் சேவையை இன்று தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி.

வரும் 20-ம் தேதி நடைபெறும் பாஜக தேசிய தலைவர் தேர்தலில், புதிய தலைவராக நிதின் நபின் தேர்வு செய்யப்பட்டு அறிவிக்கப்படுவார் என தகவல்.

க்ரீன்லாந்தை கையகப்படுத்தும் திட்டத்தை எதிர்க்கும் நாடுகள் மீது வரி விதிப்பதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மிரட்டல். ஆர்க்டிக் பிரதேசத்தில் ரஷ்யா, சீனாவின் ஆதிக்கத்தை தடுக்கவே க்ரீன்லாந்தை கைப்பற்ற விரும்புவதாக கருத்து.

ஆஸ்திரேலியாவில் 16 வயதுக்கு உட்பட்டோர் சமூக ஊடகங்களை பயன்படுத்த தடை விதிக்கப்பட்ட ஒரே மாதத்தில் 47 லட்சம் கணக்குகள் நீக்கம். இந்த தடை பல்வேறு நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளதாக பிரதமர் அந்தோணி அல்பனீஸ் தகவல்.

பஹ்ரைனில் நடைபெற்ற 17 வயதுக்குட்பட்டோருக்கான சர்வதேச இளையோர் டேபிள் டென்னிஸ் தொடரில் தமிழக வீரர் நிகில் தங்கப் பதக்கம் வென்றார்.