டிரம்பு வரிக்கு எதிராக தீர்மானம்

இந்தியாவுக்கு எதிரான 50% வரியை நீக்கக் கோரி அமெரிக்க நாடாளுமன்றத்தில் தீர்மானம் அறிமுகம்! வரி விதிப்பு நடவடிக்கை சட்டவிரோதம் என்றும், அமெரிக்க நுகர்வோருக்கே இதனால் பாதிப்பு என்றும் கூறி ஜனநாயக (கட்சியின் 3 உறுப்பினர்கள் தீர்மானம் கொண்டுவந்துள்ளனர்.

உள்ளாட்சி தேர்தல் முடிவுகள்

கேரளா உள்ளாட்சி தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது. 2 கட்டங்களாக 6 மாநகராட்சிகள், 86 நகராட்சிகள், 14 மாவட்ட பஞ்சாயத்திற்கு தேர்தல் நடைபெற்றது. 38,994 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். 244 மையங்களில் வாக்கு எண்ணும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

42% பணிகள் நிறைவு

“மதுரை எய்ம்ஸ் கட்டுமானப் பணிகள் நவ.30ஆம் தேதி வரை 42% நிறைவடைந்துள்ளது” தமிழ்நாடு. 2026 அக்டோபர் மாதத்திற்குள் கட்டுமான பணிகள் முழுவதுமாக முடிவுக்கு வரும் என்று சுகாதாரத்துறை மத்திய இணை அமைச்சர் பிரதாப் ராவ் ஜாதவ் தெரிவித்துள்ளார்

தமிழக அரசு மனு

மேகதாது அணை விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு மீண்டும் மனு.மேகதாது அணை தொடர்பாக விரிவான திட்ட அறிக்கை தாக்கல் செய்ய உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்திருந்தது; மேகதாது அணை தமிழ்நாட்டை எவ்வாறு பாதிக்கும் என மத்திய நீர்வள குழுமத்திடமும் அறிக்கை தாக்கல்- அமைச்சர் துரைமுருகன்

கோயில் தரப்பு வாதம்

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம். ஏற்றுவதற்கான ஆதாரம் ஏதும் இல்லை" 175 ஆண்டுகளாக எவ்வித ஆதாரமும் இல்லை என உயர்நீதிமன்ற மதுரை கிளையில் கோயில் நிர்வாகம் வாதம்

ஓபிஎஸ் கூட்டம் ஒத்திவைப்பு

டிச.15ம் தேதி நடைபெறவிருந்த ஓ.பன்னீர்செல்வத்தின் ஆலோசனைக் கூட்டம் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிப்பு. அரசியலில் தனது அடுத்தகட்ட நடவடிக்கை, முடிவு குறித்து டிச.15இல் அறிவிப்பதாக ஓ.பன்னீர்செல்வம் கூறியிருந்தார், டிச.24ம் தேதி எம்ஜிஆர் நினைவு தினத்தன்று தனது முடிவை ஓ.பன்னீர்செல்வம் அறிவிக்க உள்ளதாக தகவல்

நயினார் நகேந்திரன் டெல்லி பயணம்

பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் டெல்லி புறப்பட்டுச் சென்றார், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்துப் பேசவுள்ளார்
அதிமுக உடனான கூட்டணி, தேர்தல் வியூகம் உள்ளிட்டவை தொடர்பாக நயினார் நாகேந்திரன் பேசுவார் என தகவல்.அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை நயினார் நாகேந்திரன் அண்மையில் சந்தித்த நிலையில் டெல்லி புறப்பட்டார்

இந்தியாவில் மெஸ்ஸி

அர்ஜென்டினா கால்பந்து அணியின் கேப்டன் லயோனல் மெஸ்ஸி 3 நாள் பயணமாக இந்தியா வந்தார்.கொல்கத்தா விமான நிலையத்திற்கு வந்த மெஸ்ஸிக்கு ஆயிரக்கணக்கான ரசிகர்கள் உற்சாக வரவேற்பு

ரஜினிகாந்த் காணிக்கை

திருப்பதியில் குடும்பத்துடன் வழிபாடு நடத்திய ரஜினிகாந்த், தனது எடைக்கு எடை வெல்லத்தை துலாபார காணிக்கையாக செலுத்தினார்.

புதிய ஆணையம்

நாட்டில் அனை நிறுவனங்களையும் கலைத்துவிட்டு, 'விக்சித் பாரத் சிக்ஷா ஆதிக்ஷன்' என்ற ஒரே ஆணையத்திற்கு கீழ் கொண்டுவர மத்திய அமைச்சரவை ஒப்புதல். இதன் மூலம் புதிய ஆணையத்தின் கீழ் UGC, AICTE, NCTE உள்ளிட்ட ஆணையங்களின் செயல்பாடுகள் செல்கிறது!