தேனி தேக்கம்பட்டி சிறை கைதிகள் சித்திரவதை ! விசாரணைக்கு உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

1 hour ago 1
ARTICLE AD

தேனி மாவட்ட சிறையில் இருந்து தப்பிய கைதிகள் துன்புறுத்தப்பட்டார்களா என விசாரணை செய்து அறிக்கை அளிக்கும்படி, தேனி மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு தலைவருக்கு, தமிழ்நாடு மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழு உத்தரவிட்டுள்ளது.

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே உள்ள மாவட்ட சிறையில் இருந்து கடந்த 26-ந்தேதி இரவு காவலர்களை தாக்கி மொத்தம் 17 கைதிகள் தப்பிச்சென்றனர். ஒரே நேரத்தில் இத்தனைகள் கைதிகள் தப்பியது பேசுபொருளாகிய நிலையில், இது சிறைத்துறையினரின் அலட்சியப்போக்கை வெளிக்காட்டியதாக கடும் கண்டனங்கள் எழுந்தன. இதனையடுத்து படிப்படியாக 17 கைதிகளும் பிடிபட்டனர்.  அவர்களை பிடிப்பதற்காக 17 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. அதன்படி, 36 மணி நேரத்தில் அனைவரையும் போலீசார் பிடித்தனர். தொடர்ந்து அவர்கள் கடலூர், மதுரை, சேலம் மற்றும் பாளையங்கோட்டை மத்திய சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர். சிறைக்கைதிகள் தப்பிய விவகாரத்தின் எதிரொலியாக சிறைத்துறை டிஜிபியாக இருந்த சந்தீப்ராய் ரத்தோர் அப்பதவியில் இருந்து மாற்றம் செய்யப்பட்டு அவர் மின்வாரிய லஞ்ச ஒழிப்புப்பிரிவு கண்காணிப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் சிறைத்துறை காவல் இயக்குநர் பதவி ஏடிஜிபி தரத்திற்கு குறைக்கப்பட்டு அப்பதவிக்கு ஏடிஜிபி சங்கர் ஐபிஎஸ் நியமிக்கப்பட்டார்.

இந்த நிலையில் , தேனி மாவட்ட சிறையில் இருந்து 17 கைதிகள் துன்புறுத்தப்பட்டார்களா என விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய தேனி மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு தலைவருக்கு, தமிழ்நாடு மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழு செயல் தலைவரும், சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியுமான எஸ்.எம் சுப்பிரமணியம் உத்தரவிட்டுள்ளார். தற்போது கடலூர், மதுரை, சேலம் மற்றும் பாளையங்கோட்டை சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள 17 கைதிகளை நேரில் சந்தித்து, தனிப்பட்ட முறையில் ஒவ்வொருவரிடமும் துன்புறுத்தல் குறித்து விசாரிக்க வேண்டும் என்றும், அவர்களின் உடலில் காயங்கள் ஏதும் உள்ளதா என்பதை சரிபார்த்து நவம்பர் 16ஆம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் அந்த உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் தமிழ்நாடு மாநில சட்டப் பணிகள் ஆணை குழுவின் உறுப்பினர் செயலர் பாலகிருஷ்ணன் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேனி மாவட்ட சிறையில் இருந்து அக்டோபர் 26ஆம் தேதி இரவு 17 கைதிகள் தப்பிச் சென்றனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பேசுபொருளான நிலையில்,  இந்நிலையில், தப்பிய கைதிகளில் ஒருவரான மீனாட்சி சுந்தரம், தங்களுக்கு சிறையில் முறையாக உணவு, குடிநீர் வசதிகள் வழங்கப்படாததாலும், காவலர்கள் மனிதாபிமானமற்ற முறையில் துன்புறுத்தியதாலும் தப்பி சென்றதாக வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார்.

அந்த வீடியோவில்,”நீதிபதி மற்றும் முதலமைச்சருக்கு இதை வேண்டுகோளாக வைக்கிறேன். நாங்கள் அனைவரும் சிறையிலிருந்து பிரச்சினை செய்வதற்கோ, வேறு எதுவும் செய்வதற்கோ தப்பிக்கவில்லை. எங்களுடைய பிரச்சினைகளை நீதிபதியிடம் கூறி, கோர்ட்டிலேயே சரண்டர் ஆகத்தான் வந்தோம். அந்த சிறையில் இருக்கவே எங்கள் யாருக்கும் பிடிக்கவில்லை. அதனால் பேசித் தான் நாங்கள் அனைவரும் வந்தோம். ஜெயிலில் எங்களை ரொம்ப சித்திரவதை செய்தார்கள். சிறை கண்காணிப்பாளரிடம் இதுகுறித்து முறையிட்டும் அவர்கள் நடவடிக்கை எடுக்கவில்லை” எனப் பேசியிருந்தார்.இந்த வீடியோ தமிழகத்தில் மீண்டும் ஒரு பரபரப்பை ஏற்படுத்தியது.

Read Entire Article