Top 10 News Headlines: சுட்டெரிக்கும் வெயில்.. சுற்றுலா பயணிகளை தாக்கிய யானை.. 11 மணி வரை இன்று!
1 month ago 7
ARTICLE AD
அக்னி நட்சத்திரம் தொடங்கும் முன்னரே தமிழ்நாட்டில் வெயில் வாட்டி வதைத்து வரும் நிலையில் நண்பகல் 12 மணி முதல் 4 மணி வரை வெளியே வர வேண்டாம் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
மீன்பிடி தடைக்காலம் தொடங்கியுள்ள நிலையில் பிற இறைச்சிகளின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. முட்டையும் பண்ணை கொள்முதல் விலை உயர்ந்துள்ளது.
சட்டமன்ற தேர்தலில் தவெக தலைவர் விஜய் தாக்கல் செய்த வேட்புமனுவை ஆய்வு செய்யக்கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
கோடைகாலம் தொடங்கியுள்ள நிலையில் ஐஸ்க்ரீம் விற்பனை அதிகரித்துள்ளது. இதனைத் தொடர்ந்து அதன் தயாரிப்பு  நிறுவனங்களில் ஆய்வு செய்ய உணவுப் பாதுகாப்புத் துறை உத்தரவிட்டுள்ளது. சம்பந்தப்பட்ட மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் இது தொடர்பாக சோதனை நடத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மதுரை சித்திரை திருவிழாவின் ஒரு பகுதியாக மீனாட்சி அம்மன் பட்டாபிஷேகம் கோலாகலமாக நடைபெற்றது. பட்டாபிஷேகம் நடைபெற்ற இன்று முதல் அடுத்த 4 மாதங்களுக்கு மதுரையில் மீனாட்சி அம்மனின் ஆட்சி நடைபெறும் என்பது பொதுமக்களின் நம்பிக்கையாகும்.
மேற்கு வங்கத்தில் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு ஏப்ரல் 29ம் தேதி நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு இன்று மாலையுடன் அங்கு பரப்புரை நிறைவு பெறுவதால் தலைவர்கள் தீவிரமாக வாக்கு சேகரித்து வருகின்றனர்.
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் ஆட்டத்தில் டெல்லி - பெங்களூரு அணிகள் மோதுகின்றன. நேற்று நடைபெற்ற லக்னோவுக்கான எதிரான போட்டியில் கொல்கத்தா அணி சூப்பர் ஓவரில் வெற்றி பெற்றது.
தென்மேற்கு பருவமழை முன்கூட்டியே தொடங்கும் என கணிக்கப்பட்டுள்ளது. கேரளா, தமிழ்நாட்டில் ஜூன் 1ம் தேதி தொடங்கும் பருமழை இந்தாண்டு முன்கூட்டியே இருக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தெலங்கானாவில் நடிகை ஆஷு ரெட்டி மீது மோசடி புகார் அளிக்கப்பட்டுள்ளது. திருமணம் செய்வதாக கூறி இளைஞர் ஒருவரிடம் ரூ.9.35 கோடி மோசடி செய்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனை ஆஷூ ரெட்டி மறுத்துள்ளார்.
இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு ஹால் டிக்கெட் வெளியிடப்பட்டுள்ளது. மாணவர்கள் http://neet.nta.nic.in இணைய பக்கத்தில் ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்யலாம்.
Read Entire Article