Top 10 News Headlines: சிபிஐ ஆபீஸில் விஜய்.. வாக்காளர் சிறப்பு முகாம்.. 11 மணி வரை நடந்த முக்கிய நிகழ்வுகள்!

2 months ago 8
ARTICLE AD

வாக்காளர் பட்டியலில் திருத்தங்களை மேற்கொள்ள ஜனவரி 30ஆம் தேதி வரை கால அவகாசம் நீட்டிப்பு - தேர்தல் ஆணையம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

பொங்கல் பண்டிகை முடிந்து வெளியூர் திரும்பும் மக்களால் சென்னை புறநகரில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. அனைத்து தேசிய நெடுஞ்சாலைகளிலும் நீண்ட வரிசையில் வாகனங்கள் நிற்பதால் மக்கள் கடும் அவதியடைந்துள்ளனர்.

கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக டெல்லியில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் இன்று 2வது முறையாக தவெக தலைவர் விஜய் நேரில் ஆஜரானார். இதனை முன்னிட்டு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

சாதி சான்றிதழ் கோரி ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை அதிகாலையிலேயே ஆயிரக்கணக்கான பொதுமக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சென்னையில் புதிய உச்சத்திற்கு சென்ற ஆபரணத் தங்கத்தின் விலையால் மக்கள் அதிர்ச்சியடைந்தனர். தங்கம் இன்று சவரனுக்கு ரூ.1,360 அதிகரித்து ரூ.1.07,600க்கு விற்பனையாகிறது. அதேசமயம்கிராமுக்கு ரூ.170 உயர்ந்து ரூ.13,450க்கு விற்பனை செய்யப்படுகிறது.

2026 சட்டமன்ற தேர்தல் நெருங்குவதையொட்டி சென்னையில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியுடன் தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை தலைவர் தனியரசு சந்தித்து ஆலோசனை நடத்தியுள்ளார்.

இந்தியாவின் பாதுகாப்பு துறையில் தனியார் பங்களிப்பை 50 சதவீதமாக அதிகரிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. பாதுகாப்பு தளவாடங்களின் உற்பத்தியில் அதிகளவில் தனியார் துறைகள் ஈடுபடுத்தப்படும் என மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தகவல் தெரிவித்துள்ளார்.

தவெகவின் தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழுவின் ஆலோசனைக் கூட்டம் நாளை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பல்வேறு தரப்பினரின் கருத்துகளையும் தேவைகளையும் அறிந்து தகவல்கள் பெறப்படும் என கூறப்பட்டுள்ளது.

கேரளா மாநிலம் எர்ணாகுளம் மாவட்டத்திற்கு உட்பட்ட கோதமங்கலம் வனப்பகுதியில் 30 ஆண்டுகள் பழமையான வானவில் மரம் காண்போரை கவரும் வகையில் அமைந்துள்ளது.

ஈரானில் மக்கள் போராட்டத்தால் வெடித்த கலவரத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 5 ஆயிரத்தை கடந்ததால் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. இதனைக் கட்டுப்படுத்த உலக நாடுகள் வலியுறுத்த வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அடுத்த 18 மாதங்களில் வந்தே பாரத் 4.0 ரயிலை பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும் என இந்திய ரயில்வே தீவிரம் காட்டியுள்ளது. எக்ஸ்பர்ட் குவாலிட்டி வடிவமைப்பில் வந்தே பாரத் ரயில் உருவாக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

Read Entire Article