எம்.எல்.ஏவாக விஜய் பதவியேற்பு

முதல்வர் விஜய் சென்னை பெரம்பூர் தொகுதி எம்எல்ஏவாக சட்டமன்றத்தில் பதவியேற்றுக் கொண்டார் உளமார உறுதி கூறுகிறேன் எனக் கூறி எம்எல்ஏவாக பதவியேற்றுக் கொண்டார் முதல்வர் விஜய், முதல்வர் விஜய்யை தொடர்ந்து அமைச்சர்கள் அடுத்தடுத்து எம்எல்ஏக்களாக பதவியேற்றனர்.

சான்றிதழ் இல்லை

வெற்றிபெற்ற சான்றிதழை எடுத்துவராத அமைச்சர் கீர்த்தனா எம்எல்ஏவாக பதவியேற்கவில்லை பதவியேற்க அழைக்கப்பட்ட நிலையில் வெற்றிச் சான்றிதழ் இல்லாததால் பதவியேற்காமல் சென்றுவிட்டார்.

சட்டப்பேரவை தொடங்கியது

தமிழ்நாட்டில் 17ஆவது சட்டப்பேரவை கூட்டத்தொடரின் முதல் கூட்டம் தொடங்கியது
தற்காலிக சபாநாயகர் சோழவந்தான் கருப்பையா | தலைமையில் சட்டமன்றக் கூட்டத்தொடர் தொடங்கியது; தவெக ஆட்சி அமைந்தபிறகு முதல் முறையாக சட்டமன்றக் கூட்டத்தொடர் தொடங்கி நடந்து வருகிறது.

போர் முடியவில்லை

ஈரானில் இன்னும் சில பணிகள் செய்ய வேண்டியுள்ளன; போர் முடிந்துவிடவில்லை
இஸ்ரேலின் நடவடிக்கையால் ஈரானில் யுரேனிய இருப்புகள் பெருமளவு அழிக்கப்பட்டுவிட்டன; ஈரானின் அணு ஆயுத அமைப்பு, ஆயுதக் குழுக்கள், ஏவுகணை உற்பத்தி மையங்களை இஸ்ரேல் அழித்துள்ளன.

'தங்கம் வாங்காதீங்க

அடுத்த ஒரு வருடத்திற்கு தங்கம் வாங்குவதை நாட்டு மக்கள் தவிர்க்க வேண்டும்; சர்வதேச அளவில் நிலவிவரும் நெருக்கடி நேரத்தில் தங்கம் அதிக அளவில் இறக்குமதி செய்யப்படுவதால் அந்நிய செலாவணியில் தாக்கம் ஏற்படுகிறது என பிரதமர் மோடி பேசியுள்ளார்.

வெளியேறிய மும்பை

நேற்று நடைபெற்ற மும்பை மற்றும் பெங்களூர் அணிகளுக்கு இடையிலான போட்டியில் முதலில் ஆடிய மும்பை அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 166 ரன்களை எடுத்தது. தொடர்ந்து ஆடிய பெங்களூரு அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 167 ரன்கள் எடுத்து வெற்றி.. பெங்களூர் அணியில் அதிகபட்சமாக க்ருணால் பாண்ட்யா 73 ரன்கள் அடித்து அசத்தினார்

மீண்டும் WFH

மத்திய கிழக்கு போரினால் சர்வதேச அளவில் எண்ணெய் நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில், வீட்டிலிருந்து வேலை செய்யும் (work-from-home) பழக்கத்தை மீண்டும் தொடங்கவும், எரிபொருள் பயன்பாட்டைக் குறைக்கவும் கேட்டுக் கொள்கிறேன்; அதேபோல் எண்ணெய் நுகர்வையும் குறைத்துக் கொள்ளுங்கள் என பிரதமர் தெரிவித்துள்ளார்.

இரு வாரங்களில் 'ஜனநாயகன்

இன்னும் இரு வாரங்களில் 'ஜனநாயகன்' வெளியாகும்; CBFCயில் இறுதிகட்ட நகர்வுகள் நடந்து வருகிறது, அவர்களுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது; விரைவில் படம் வெளியாகும் KVN வெங்கட் நாராயணா தகவல்

ராமதாஸ் கண்டனம்

விஜய் முதல்வராக பதவியேற்ற நிகழ்வில் 3ஆவதா. தமிழ்த்தாய் வாழ்த்து பாடியது மரபு மீறிய செயல் இந்த தவறுக்கு காரணமானவர்கள் யார் என்பதை அரசு கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்; நிகழ்ச்சி தொடங்கும்போது தமிழ்த்தாய் வாழ்த்து, நிறைவடையும்போது தேசிய கீதம் பாட வழி செய்க ராமதாஸ் கண்டனம்.

மழைக்கு வாய்ப்பு

தூத்துக்குடி, ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களுக்கு பகல் 1 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு