சென்னையிலிருந்து 400 கி.மீ., தொலைவில் டிட்வா புயல் நிலை கொண்டுள்ளது. தமிழ்நாட்டில் பல இடங்களில் கனமழை பெய்து வருவதால் மாவட்ட நிர்வாகம் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறது. முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

டிட்வா புயல் காரணமாக 13 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. பல்கலைக்கழகத் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில் சிறப்பு வகுப்புகள் நடத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

டிட்வா புயல் எதிரொலியாக தமிழகத்தில் ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதேபோல் சென்னையிலிருந்து மதுரை செல்லும் விமானங்கள் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

டிட்வா புயல் பெய்த கனமழையால் பெரும் பாதிப்பை சந்தித்துள்ள இலங்கையில் சிக்கியிருக்கும் தமிழர்களை மீட்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் பேரில் தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. கொழும்பில் உள்ள இந்திய தூதரகத்துடன் பொதுத்துறை செயலாளர் ஆலோசனை நடத்தியுள்ளார்.

சபரிமலை செல்லும் பக்தர்களின் வசதிக்காக தென்காசி, கோவை,மதுரை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருந்தும் கேரள அரசு சார்பில் சிறப்பு பேருந்துகள் இன்று முதல் இயக்கப்படுகிறது.