Top 10 News Headlines: கொட்டித்தீர்க்கப் போகும் மழை! மெக்சிகோவில் GenZ போராட்டம்.. சபரிமலை நடை திறப்பு - 11 மணி வரை இன்று!

4 weeks ago 3
ARTICLE AD

ஜென்-z போராட்டம்

மெக்சிகோவின் நாடாளுமன்றத்தை சூறையாட முயன்ற GenZ போராட்டக்காரர்களால் நாட்டில் வன்முறை மற்றும் ஊழல் அதிகரித்து வருவதாக குற்றம்சாட்டி, அந்நாடு முழுவதும் போராட்டம் நடத்தி வரும் GenZ தலைமுறையினர், அரசு சொத்துக்களை சூறையாட முயன்றதால் பரபரப்பு.

புதுச்சேரி கனமழைக்கு வாய்ப்பு

புதுச்சேரியில் நாளை (நவ.17), நாளை மறுநாள் கன முதல் அதி கன மழை பெய்யக்கூடுமென வானிலை மையம் எச்சரிக்கை பொதுமக்கள் தேவையின்றி வெளியே வர வேண்டாம்; மழை தொடர்பான புகார்களை   1077, 1070, 112 அல்லது 9488981070 என்ற எண்ணில் வாட்சப் தகவல்  வழியாக தெரிவிக்கலாம் - புதுச்சேரி ஆட்சியர்

முதல்வர் யார்?

பீகார் மாநிலத்தின் முதலமைச்சர் தேர்வு குறித்து டெல்லியில் ஒன்றிய அமைச்சர் அமித்ஷாவுடன் பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா ஆலோசனை.தனிப்பெரும் கட்சியாக பாஜக இருந்தாலும், நிதிஷ்குமார்தான் அடுத்த முதலமைச்சராக தொடர்வார் என JDU தலைவர்கள் நம்பிக்கை

சபரிமலை நடை திறப்பு:

மண்டல பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை இன்று மாலை 5 மணிக்கு திறப்பு. அடுத்தாண்டு ஜனவரி 14ம் தேதி மகர விளக்கு பூஜை நடைபெற உள்ளது.தினமும் ஆன்லைன் மற்றும் ஸ்பாட் புக்கிங் மூலம் பதிவு செய்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்யலாம்.

கல்குவாரி விபத்து

உத்தர பிரதேசம் சோன்பத்ராவில் உள்ள கல்குவாரியில் பாறைகள் சரிந்து விழுந்த விபத்தில் 15 தொழிலாளர்கள் சிக்கி தவிப்பு. பாறைகளுக்கு இடையே சிக்கி உயிரிழந்த தொழிலாளி ஒருவரின் உடல் மீட்பு. இடிபாடுகளில் சிக்கிய தொழிலாளர்களை மீட்கும் பணியில் மீட்புக் குழுவினர் தீவிரம்.

தேர்தல் ஆணையம் விளக்கம்

தேர்தல் விதிமுறைகளின் படி வேட்புமனு தாக்கலுக்கு 10 நாட்களுக்கு முன்பு வரை புதிய வாக்காளர்களை பட்டியலில் சேர்க்க முடியும் என தேர்தல் ஆணையம் விளக்கம். பீகாரில் செப். மாதம் வெளியான வாக்காளர் பட்டியலில் 7.42 கோடியாக இருந்த வாக்காளர் எண்ணிக்கை, தேர்தலுக்கு பிறகு 7.45 கோடியாக மாறியது எப்படி? என காங்கிரஸ் கட்சி கேள்வி எழுப்பி இருந்தது.

ஆரஞ்ச் அலர்ட்:

தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் நிலவி வரும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, அடுத்த 24 மணி நேரத்தில் மேற்கு வடமேற்கு திசையில் நகரக்கூடும். இதன் காரணமாக தமிழ்நாட்டில் மிக கனமழைப் பெய்ய வாய்ப்புள்ளதால் இன்றும், நாளையும் ஆரஞ்சு அலர்ட் விடுத்தது இந்திய வானிலை ஆய்வு மையம்.

இஸ்ரேல் தான் அச்சுறுத்தல்

“ஈரானை விட பிராந்திய ஸ்திரத்தன்மைக்கு பெரும் அச்சுறுத்தலாக இருப்பது இஸ்ரேல்தான்” என அறிவித்து Oxford Union Society தீர்மானம். இங்கிலாந்தின் 202 ஆண்டுகள் பழமையான விவாத சங்கமான Oxford Union Society-யில், பல கட்ட விவாதங்களுக்குப் பிறகு நடந்த வாக்கெடுப்பில் தீர்மானம் நிறைவேறியது.

ஹேசில்வுட் விலகல்

இங்கிலாந்து அணிக்கு எதிரான | ஆஷஸ் தொடரின் முதல் போட்டியில் இருந்து தசைப்பிடிப்பு காரணமாக ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர் ஜோஷ் ஹேசில்வுட் விலகல். முன்னதாக ஆஸி. அணியின் கேப்டன் கம்மின்ஸ் காயத்தால் வரும் 21ம் தேதி தொடங்கும், முதல் டெஸ்ட்டில் இருந்து விலகி இருந்தார்.

கடன் வாங்கி செலவு

உலக வங்கியிடம் இருந்து வாங்கிய ரூ.14,000 கோடி கடனை, நிதிஷ் குமார் பீகார் தேர்தலுக்காக செலவிட்டதாக பிரசாந்த் கிஷோர் குற்றச்சாட்டு! மக்களுக்கு நன்கொடைகள், இலவசங்கள் வழங்குவதற்காக அந்த மொத்தக் கடன் தொகையும் திருப்பி விடப்பட்டதாக குற்றம் சுமத்தியுள்ளார்.

Read Entire Article