தீவிரவாத தாக்குதல்:

காஷ்மீரில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் சுற்றுலா பயணிகள் 25 பேர் பலியானதாக தகவல் பயங்கரவாதிகள் தாக்குதலில் 2 வெளிநாட்டினர் உள்பட 25 பேர் பலி; 7 பேர் காயம் அடைந்ததாக தகவல் காஷ்மீரின் பகல்காம் பகுதியில் ராணுவ சீருடை அணிந்து வந்து தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர்

அவசரக் கூட்டம்

பஹல்காம் சம்பவத்தின் ஈரம் ஆறுவதற்குள் காஷ்மீரின் பூஞ்ச் பகுதியில் தாக்குதல் நடத்திய பாகிஸ்தான்உடனடியாக பதில் தாக்குதல் நடத்திய இந்திய ராணுவம்; காலை 11 மணிக்கு பிரதமர் இல்லத்தில் மத்திய அமைச்சரவையின் அவசரக் கூட்டம் நடைபெற உள்ளது; காலை 11 மணிக்கு பிரதமர் இல்லத்தில் மத்திய அமைச்சரவையின் அவசரக் கூட்டம் நடைபெற உள்ளது.

காஷ்மீர் தீவிரவாத தாக்குதல் - 3 தமிழர்கள் காயம்

காஷ்மீர் தீவிரவாத தாக்குதலில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 3 பேருக்கு காயம் - தமிழ்நாடு அதிகாரி தகவல், 3 பேரில் ஒருவருக்கு சிறிய அளவில் காயம்; பஹல்காம், அனட்டன் மருத்துவமனையில் இருவர் அனுமதி; மதுரை, சென்னையைச் சேர்ந்தவர்கள் காயமடைந்துள்ளதாக தமிழ்நாடு அரசு தகவல்; பஹல்காமில் நேற்று(ஏப்.22) தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 29 பேர் உயிரிழப்பு.

இருட்டுக்கடை உரிமையாளர் மருமகன் மீது புகார்

வரதட்சணை புகாருக்கு உள்ளான இருட்டுக்கடை உரிமையாளரின் மருமகன் மீது மனைவி மீண்டும் புகார். தனது கணவர் பல்ராம் சிங் வெளிநாடு தப்பிச் செல்ல திட்டமிட்டுள்ளதாக மனைவி கனிஷ்கா புகார்; வரதட்சணை புகார் அளிக்கப்பட்ட நிலையில் விசாரணைக்கு ஆஜராக 10 நாட்கள் அவகாசம் கேட்டிருந்தார் பல்ராம் சிங்; வெளிநாடு தப்பிச் செல்லக் கூடும் என்பதால் பல்ராம் சிங்கிற்கு எதிராக லுக்அவுட் நோட்டீஸ் பிறப்பிக்க கோரிக்கை; நெல்லையில் அல்வாவிற்கு பெயர் பெற்ற இருட்டுக்கடையை வரதட்சணையாக கேட்பதாக பல்ராம் சிங் மீது ஏற்கனவே புகார்.

டாஸ்மாக் சோதனையை எதிர்த்து தொடர்ந்த வழக்கு தள்ளுபடி

டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் அமலாக்கத்துறை நடத்திய சோதனையை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர்நீதிமன்றம்.அமலாக்கத்துறை தொடர்ந்து சோதனை நடத்த அனுமதி - நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், கே.ராஜசேகர்.

ஸ்ரீநகர் விமான நிலையத்தில் கடும் நெரிசல்

பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து சொந்த ஊர் திரும்பும் பயணிகளால் ஸ்ரீநகர் விமான நிலையத்தில் கடும் நெரிசல் விமானங்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்கக் கூடாது என அதிகாரிகள் அறி"றுத்தல்; ஸ்ரீநகருக்கு கூடுதல் விமான சேவைகளை இயக்க விமான போக்குவரத்து அமைச்சகம் அறிவுரை.

கிளாம்பாக்கம் மெட்ரோ:

சென்னை விமான நிலையத்தில் இருந்து கிளாம்பாக்கம் வரையான 15.46 கி.மீ தொலைவு மெட்ரோ ரயில் வழித்தட விரிவாக்கத்திற்கு தமிழ்நாடு அரசு ஒப்புதல்! நிலம் கையகப்படுத்தும் பணிகளுக்கு சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்திற்கு தமிழ்நாடு அரசு அனுமதி. ஒன்றிய அரசின் ஒப்புதலுக்காக இவை அனுப்பி வைக்கப்பட்டு, அனுமதிக்கு பிறகு இந்த வழித்தடத்திற்கான கட்டுமான பணிகள் தொடங்கும்

அமித் ஷா அஞ்சலி:

பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்களின் உடல்களுக்கு மத்திய அமைச்சர் அமித் ஷா அஞ்சலி. ஸ்ரீநகரில் இருந்து அனைவரின் உடல்களும் விமானம் மூலமாக சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

தூபே உதவி:

வளர்ந்து வரும் விளையாட்டு வீரர்கள் 10 பேருக்கு தலா ரூ 70,000 உதவித் தொகை.. பாராட்டை பெறும் சிவம் தூபேவின் அறிவிப்பு

இன்றைய போட்டி:

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் - மும்பை இந்தியன்ஸ் அணிகள் இன்று (ஏப்.23) மோதுகின்றன. ஐதராபாத் ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் இன்று இரவு 7:30 மணிக்கு போட்டி தொடங்குகிறது.