Top 10 News Headlines: களைகட்டிய ஜல்லிக்கட்டு.. ஜனநாயகன் வழக்கு இன்று விசாரணை.. 11 மணி வரை நடந்தது என்ன?

3 months ago 8
ARTICLE AD

தமிழ்நாடு முழுவதும் பொங்கல் பண்டிகை வெகுவிமரிசையாக கொண்டாடப்பட்டது. பொதுமக்கள் அதிகாலையிலேயே பொங்கலிட்டு சூரிய பகவானுக்கு நன்றி செலுத்தினர்.

விஜய் நடித்துள்ள ஜனநாயகன் படத்தின் சென்சார் தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது.
உயர்நீதிமன்ற தனி நீதிபதியின் உத்தரவுக்கு தலைமை நீதிபதி அமர்வு தடை விதித்த நிலையில் பட தயாரிப்பு நிறுவனம் மேல்முறையீடு செய்திருந்தது.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு முதலமைச்சர் ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, தவெக தலைவர் விஜய் உள்ளிட்ட பலரும் தமிழக மக்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சென்னையில் இருந்து இதுவரை பேருந்துகள் மூலமாக 9.5 லட்சம் பேர் சொந்த ஊர்களுக்கு பயணம் மேற்கொண்டுள்ளனர். சென்னை திரும்புபவர்களுக்காக நாளை முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மதுரை மாவட்டம் அவனியாபுரத்தில் உலகப்புகழ்பெற்ற ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கி நடைபெற்று வருகிறது. வாடிவாசலில் சீறி வரும் காளைகளை போட்டு போட்டு வீரர்கள் அடக்கி வருகின்றனர்.

தமிழகத்தில் முதன்முறையாக இருட்டு கடை அல்வா நிறுவனத்தில் ஜெர்மன் தொழில்நுட்ப ரோபோடிக் இயந்திரம் பயன்பாட்டுக்கு வந்துள்ளது. இது ஒரு நிமிடத்திற்கு சுமார் 70 அல்வா துண்டுகள் கட் செய்து, பேக்கிங் செய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அன்புமணி பொய்யைத் தவிர வேறு ஒன்றும் அறியாதவர். அவர் உழவர்கள் நெஞ்சத்தில் மகிழ்ச்சி பொங்குகிறதா?
என உண்மைக்கு புறம்பான அறிக்கை வெளியிடுகிறார் என்று அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் கடுமையாக விமர்சித்துள்ளார்.

கேரள காங்கிரஸ் கூட்டணியில் அதிகாரம் பகிரப்படுகிறது என காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் கூறியுள்ளார். தமிழ்நாட்டில் ஆட்சியில் பங்கு என்பதை குறிக்கும் விதமாக திமுகவிற்கு நெருக்கடி அளிக்கும் வகையில் அவர் பேசியுள்ளதாக பலரும் தெரிவித்துள்ளனர்.

ஈரானின் வான்பாதை மூடப்பட்டுள்ளதால் விமானங்கள் மாற்றுப்பாதையில் இயங்கும், மாற்றுப்பாதையில் செல்ல இயலாத விமானங்கள் ரத்து செய்யப்படும் என ஏர் இந்தியா அறிவித்துள்ளது.

ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தலாம் என்பதால் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது. எனவே ராணுவத்தினர் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க ஈரான் அரசு உத்தரவிட்டுள்ளது.

இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில்   7 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது நியூசிலாந்து. இரு அணிகளும் தலா ஒரு வெற்றியுடன் தொடரில் சமநிலை வகிக்கிறது.

Read Entire Article