தமிழ்நாட்டில் இன்று ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு அலர்ட் விடுத்துள்ளது. வரும் நவம்பர் 23ம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்புள்ளதாக கூறியுள்ளது.

சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்களின் வசதிக்காக கேரளாவின் பம்பை வரை தமிழ்நாடு அரசின் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் கோயம்பேடு, கிளாம்பாக்கத்தில் இருந்து 2 பேருந்துகள் இயக்கப்படுகிறது.

திருவண்ணாமலை அருகே சாலையை கடக்க முயன்ற மூதாட்டி மீது மோதாமல் இருக்க லாரியை திருப்பியபோது அதே லாரி மோதி மூதாட்டி பலியானார். வாகனத்தில் இருந்த டீசல் கொட்டிய நிலையில் அதனை அப்பகுதி மக்கள் கேன், குடத்தில் எடுத்துச் சென்றனர்

தமிழ்நாட்டில் இதுவரை 6 கோடி எஸ்.ஐ.ஆர் படிவங்கள் விநியோகம் செய்யப்பட்டுள்ளதாக தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார். அக்டோபர் மாத நிலவரப்படி தமிழ்நாட்டில் 6.41 கோடி வாக்காளர்கள் உள்ளனர்.

திண்டுக்கல் மாவட்டம் பழனி முருகன் கோயிலில் கடந்த நான்கரை ஆண்டுகளில் பக்தர்களுக்கான அன்னதானம், பஞ்சாமிர்தம், கட்டணமில்லா முடி காணிக்கை என 23 சேவைகளுக்கு ரூ. 117.72 கோடி செலவிடப்பட்டுள்ளது.

நவம்பர் 18ம் தேதி முதல் எஸ்.ஐ.ஆர் பணிகளை புறக்கணிப்பதாக வருவாய்துறை சங்கங்களின் கூட்டமைப்பு அறிவித்துள்ளது. பணிச்சுமை அதிகரித்து நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பீகார் சட்டமன்ற தேர்தலில் புதிய முதலமைச்சரை தேர்வு செய்யும் பொருட்டு தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் பாட்னாவில் இன்று நடைபெறுகிறது. இதில் சட்டப்பேரவை தலைவராக நிதிஷ் குமார் தேர்வு செய்யப்பட வாய்ப்பு என தெரிவிக்கப்பட்டுள்ளது.

2028 ஆம் ஆண்டு சந்திராயன் 4 ஏவப்படும் என இஸ்ரோ தலைவர் நாராயணன் தெரிவித்துள்ளார். மேலும் வருடாந்திர விண்கல தயாரிப்பை 3 மடங்காக அதிகரிக்க நோக்கமாக கொண்டு இஸ்ரோ செயல்பட்டு வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.

ஈரானில் கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கடுமையான வறட்சி நிலவுகிறது. இதனையடுத்து செயற்கை மழைப் பொழிவை ஏற்படுத்த அந்நாட்டு அரசு திட்டமிட்டுள்ளது. இதே நிலை நீடித்தால் வாழ தகுதியற்ற இடமாக ஈரான் மாறிவிடும் சூழல் ஏற்பட்டுள்ளது.

டீசல் டேங்கர் லாரியும், பேருந்தும் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் சவுதி அரேபியாவின் மெக்காவில் 43 இந்தியர்கள் பலியானதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இதில் பெரும்பாலனவர்கள் தெலங்கானா மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என தெரிய வந்துள்ளது.

காந்தாரா படத்தை தயாரித்த ஹோம்பாளே நிறுவனம் ஐபிஎல் தொடரின் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை வாங்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பல நிறுவனங்கள் போட்டியிட்டுள்ள நிலையில் மினி ஏலம் நடைபெறும் முன்பு அணி கைமாறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தென்னாப்பிரிக்கா சுழற்பந்து வீச்சாளர்களை இந்திய பேட்ஸ்மேன்கள் சரியாக எதிர்கொள்ளாததே தோல்விக்கு காரணம் என இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் கௌதம் காம்பீர் தெரிவித்துள்ளார்.