தவறி விழுந்து பெண் பலி:

பெங்களூரு: இன்ஸ்டா ரீல்ஸ் எடுத்தபோது தவறுதலாக 13வது மாடியில் இருந்து விழுந்ததில் 20 வயது பெண் உயிரிழப்பு!நள்ளிரவில் நண்பர்களுடன் வாக்குவாதம் ஏற்பட்டதால், சோகமான ரீல்ஸ் எடுப்பதற்காக மொட்டை மாடிக்குச் சென்றபோது துயரம். பீகாரைச் சேர்ந்த இவர் வேலைக்காக புலம்பெயர்ந்துள்ளார்.

இந்தி திணிப்புக்கு எதிராக பேரணி!

மகாராஷ்டிராவில் இந்தி திணிப்புக்கு எதிராக கூட்டாக பேரணி அறிவித்த உத்தவ் தாக்கரே மற்றும் ராஜ் தாக்கரே. வரும் ஜூலை 5ம் தேதி நடைபெற உள்ள பேரணிக்கு சரத் பவாரின் கட்சியும் ஆதரவு தெரிவித்துள்ளது. அரசுப் பள்ளிகளில் 1-5 வகுப்பு வரை 3வது மொழியாக இந்தி கற்பிக்கப்படும் என்ற மாநில அரசின் உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்து பேரணியானது நடத்தப்படுகிறது

புரி கோயில் தேரோட்டத்தில் நெரிசல்

ஒடிசா மாநில புரி ஜெகநாதர் கோயில் தேரோட்டத்தில் லட்சக்கணக்கானோர் பங்கேற்ற நிலையில் நெரிசலில் சிக்கி 500-க்கும் மேற்பட்டோர் காயம்.நெரிசலில் சிக்கி காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதி.

அவர் உயிரை காப்பாற்றியதே நான் தான் - ட்ரம்ப்

ஈரானின் உச்சபட்ச தலைவர் கமேனியை படுகொலையில் இருந்து காப்பாறியதே நான்தான்| ஆனால் அதற்கான நன்றி அவரிடம் இல்லை. இஸ்ரேல் தாக்குதலின் போது அவர் எங்கு பதுங்கியிருந்தார் என எனக்கு தெரியும், இருப்பினும் அவரை காப்பாற்றினேன், இதற்காக அவர் Thankyou Trump என கூறவேண்டிய அவசியமில்லை.-ஈரான் உச்சபட்ச தலைவர் கமேனியை விமர்சித்த அதிபர் ட்ரம்ப்

கிடு கிடு என உயரும் மேட்டூர் அணை

கர்நாடகாவில் பெய்துவரும் கனமழையால் மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு தற்போது 60,740 கன அடியில் இருந்து 73,452 கனஅடியாக அதிகரித்துள்ளது!இன்று காலை 8 மணி நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 116.89 அடியாக உயர்ந்த நிலையில், நீர் இருப்பு 88.59 டிஎம்சியாக உள்ளது. டெல்டா பாசனத்திற்காக 22500 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.

அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்

மும்பையில் இருந்து 148 பயணிகள், 6 விமான ஊழியர்களுடன் 154 பேருடன் நேற்று நள்ளிரவு, சென்னை புறப்பட்ட ஏர் இந்தியா பயணிகள் விமானம், நடு வானில் இயந்திர கோளாறு ஏற்பட்டு, மீண்டும் அவசரமாக மும்பைக்கு திரும்பி சென்று தரை இறங்கியது! அதன்பின்பு பயணிகள், வேறு விமானத்திற்கு மாற்றப்பட்டு, இன்று காலை, சென்னை வந்து சேர்ந்தது.

வாட்டர் பெல்:

மாணவர்கள் தண்ணீர் குடிப்பதற்கு ஏதுவாக 5 நிமிட இடைவெளியில் பள்ளிகளில் புதிதாக வாட்டர் பெல் அறிமுகம்; அதிகரித்து வரும் கோடை வெப்பத்திலிருந்து மாணவர்களை காக்க இந்த புதிய நடைமுறை அறிமுகம் காலை 11 மணி, மதியம் 1 மணி மற்றும் மாலை 3 மணிக்கு பள்ளிகளில் இனி வாட்டர் பெல் அடிக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு

அரக்கோணம் அருகே தடம் புரண்ட ரயில்:

அரக்கோணம் அடுத்த சித்தேரியில் தண்டவாளம் துண்டானதால் சென்னையில் இருந்து காட்பாடி வழியாக செல்லும் அனைத்து ரயில்களும் ஆங்காங்கே நிறுத்தம்

ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டுள்ளதால் பயணிகள் கடும் அவதி; அரக்கோணம் - காட்பாடி மின்சார ரயிலின் ஓட்டுநர் அளித்த தகவலில் அதிகாரிகள் ஆய்வு.

கோவையில் சுற்றுப்பயணத்தை தொடங்கும் ஈபிஎஸ்

ஜுலை 7ஆம் தேதி கோவையில் இருந்து சுற்றுப்பயணத்தை தொடங்குகிறார் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி 'மக்களைக் காப்போம்; தமிழகத்தை மீட்போம்' என்ற பெயரில் சுற்றுப்பயணத்தை ஜூலை 7-ஆம் தேதி முதல் ஜூலை 21 தேதி வரை முதற்கட்ட பயணத்தை மேற்கொள்கிறார்; கோவையில் தொடங்கும் பயணத்தை தஞ்சை மாவட்டம் பேராவூரணியில் நிறைவு செய்கிறார்.

ஆடி மாதத்தில் அம்மன் கோயில் சுற்றுலா

தமிழ்நாட்டில் உள்ள அம்மன் கோயில்களை தரிசனம் செய்யும் வகையில் கட்டண ஆன்மீக சுற்றுலாப் பயணத்திற்கு சுற்றுலாத்துறை ஏற்பாடு. சென்னை, திருச்சி, மதுரை, உள்ளிட்ட நகரங்களை சுற்றியுள்ள புகழ் பெற்ற அம்மன் கோயில்களை தரிசிக்க ஒருநாள் சுற்றுலாவுக்கு ஏற்பாடு. வரும் ஜூலை 18ம் தேதி முதல் ஆகஸ்ட் 15ம் தேதி வரை சுற்றுலா செல்ல ஏற்பாடு. மேலும் விவரங்களுக்கு: http://www.ttdconline.com புக் செய்யலாம்.