பொங்கல் பண்டிகை முடிந்து சென்னை திரும்பும் மக்களால் தேசிய நெடுஞ்சாலைகளில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. 5 கி.மீ. தூரத்துக்கு வாகனங்கள் அணிவகுத்து நிற்பதால் பயணிகள் அவதியடைந்துள்ளனர்.

100 இடங்களில் காற்றின் தரத்தை அறிவிக்கும் டிஜிட்டல் பலகைகளை வைக்க சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது. முதற்கட்டமாக சென்னை ரிப்பன் மாளிகை வளாகத்தில் சோதனை அடிப்படையில் அமைக்கப்பட்டுள்ளது.

சென்னை விமான நிலையத்தில், குடியரசு தின விழாவை முன்னிட்டு 5 அடுக்கு பாதுகாப்பு அமலுக்கு வந்துள்ளது. பயணிகள் உடமைகள் சோதனை செய்ய வேண்டி இருப்பதால் குறிப்பிட்ட நேரத்திற்கு முன்னதாகவே விமான நிலையம் வர அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஓசூர் விமான நிலையத் திட்டத்தை மீண்டும் நிராகரித்தது மத்திய அரசு - அப்பகுதியில் உள்ள வான்வெளி ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனத்திற்கு இடம் தேவைப்படுவதாக விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க இன்று கடைசி நாளாகும். இதன்பின்னர் இறுதி வாக்காளர் பட்டியல் பிப்ரவரி 17ம் தேதி வெளியிடப்படவுள்ளது.

தேர்தல் வாக்குறுதிகளை அள்ளி வீசிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி - திமுக அமைச்சர்கள் சரமாரியாக விமர்சனம் செய்துள்ளனர்.

இண்டிகோ விமான நிறுவனத்திற்கு ரூ.22.2 கோடி அபராதம் விதித்து மத்திய சிவில் விமான போக்குவரத்து இயக்குநரகம் உத்தரவிட்டுள்ளது. 2025 டிசம்பரில் ஏற்பட்ட செயல்பாடு குறைபாடு காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

வந்தே பாரத் படுக்கை வசதி கொண்ட ரயில்களுக்கு பொதுமக்களிடையே அமோக வரவேற்பு - அனைத்து மண்டலங்களிலும் ரயில்களை விரைந்து இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

குடியரசு தினத்தை முன்னிட்டு குடியரசுத் தலைவர் மாளிகைகு ஜனவரி 21ம் தேதி முதல் 29ம் தேதி வரை பார்வையாளர்கள் அனுமதி ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அருணாச்சலப் பிரதேசத்தில் பனியால் உறைந்த ஏரியில் மூழ்கி கேரளாவைச் சேர்ந்த 2 சுற்றுலாப் பயணிகள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியா - நியூசிலாந்து இடையேயான 3வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி இன்று நடைபெறுகிறது. இதுவரை நடந்த 2 போட்டிகளிலும் 2 அணிகளும் தலா ஒரு வெற்றி பெற்று சமநிலையில் உள்ளது.