Top 10 news headlines: ஆப்ரேஷன் சிந்தூர்! கதிகலங்கிய பாகிஸ்தான்.. இன்று அவசர ஆலோசனை-டாப் 10 செய்திகள்

7 months ago 9
ARTICLE AD

பாஹல்காம் தாக்குதல் - இந்தியா பதிலடி

பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தான் | மற்றும் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் 'ஆபரேஷன் சிந்தூர்' என்ற பெயரில் இந்திய ராணுவம் அதிரடி தாக்குதல். நள்ளிரவு 1.44 மணியளவில் ஏவப்பட்ட ஏவுகணைகள் பாகிஸ்தானில் உள்ள 9 தீவிரவாத முகாம்கள் மீது தாக்கின. இதில் 3 பேர் உயிரிழப்பு, 12 பேர் படுகாயம். | எந்த சூழ்நிலையையும் எதிர்கொள்ளத் தயார் நிலையில் உள்ளதாக இந்திய ராணுவம் அறிவிப்பு.

“நீதி நிலைநாட்டப்பட்டது. ஜெய் ஹிந்த்”

பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக 'ஆப்ரேஷன் சிந்தூர்' என்ற பெயரில் தாக்குதல் நடத்திய பின்னர் இந்திய ராணுவம் X தளத்தில் பதிவு. 'இது பாகிஸ்தான் ராணுவத்தை குறிவைத்து நடந்த தாக்குதல் இல்லை' என விளக்கம். காலை 10 மணிக்கு இதுகுறித்து விளக்கம் அளிக்கிறது பாதுகாப்புத்துறை

ஏர் இந்தியா விமானங்கள் ரத்து - பள்ளிகளுக்கு விடுமுறை

இந்தியா - பாகிஸ்தான் இடையே ஏற்பட்டுள்ள போர் பதற்ற சூழலால், ஜம்மு, ஸ்ரீநகர், லே, ஜோத்பூர், அமிர்தசரஸ், ஜாம் நகர், சண்டிகர், ராஜ்கோட் உள்ளிட்ட இடங்களில் ஏர் இந்தியா விமானங்கள் பிற்பகல் வரை ரத்து செய்யப்பட்டுள்ளன. ஜம்மு. சம்பா, கத்வா, ரஜோரி, பூஞ்ச் பகுதிகளில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிப்பு.

விமான நிலையங்கள் மூடல்

ஜம்மு காஷ்மீரின் ஸ்ரீநகர் விமான நிலையம்| இந்திய ராணுவத்தின் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டது. ஜம்மு, லே, தர்மசாலா உள்பட 5 விமான நிலையங்கள் மூடல்!இந்தியா- பாக். இடையே போர் பதற்ற சூழல் நிலளிவருவதால், ஜோத்பூர், அமிர்தசரஸ், ஜாம் நகர், சண்டிகர் உள்ளிட்ட வட இந்தியாவில் 9 விமான நிலையங்களில் விமான சேவைகள் தற்காலிகமாக ரத்து.

அவசர ஆலோசனை:

இந்தியாவின் பதில் தாக்குதல் தொடர்பாக ஜம்மு காஷ்மீர் முதல்வர் ஒமர் அப்துல்லாவுடன் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆலோசனை.ஜம்மு காஷ்மீர் எல்லைப் பாதுகாப்புப் படையுடனும் உள்துறை அமைச்சர் தொடர்ந்து தொடர்பில் உள்ளதாக தகவல்.  எல்லைப் பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளையும் உறுதி செய்யுமாறு அறுவுறுத்தல்.

மோடியுடன் நிற்கிறோம்

“ஒரு போராளியின் போர் தொடங்கிவிட்டது. இலக்கை அடையும் | வரை நிறுத்தப்போவதில்லை. ஒட்டுமொத்த தேசமும் பிரதமர் மோடியுடன் நிற்கிறது”-'ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கைக்கு நடிகர் ரஜினிகாந்த் வரவேற்பு.

புதிய பேருந்துகள் துவக்க விழா:

சென்னை: தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் சார்பில் 214 புதிய பேருந்துகளின் சேவையை கொடியசைத்து தொடங்கி வைத்த பின், பேருந்தில் ஏறி ஆய்வு செய்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

'ஆபரேஷன் சிந்தூர்' - அமித்ஷா பெருமிதம்

"பஹல்காமில் நமது அப்பாவி சகோதரர்கள் கொடூரமாக கொல்லப்பட்டதற்கு பதில் நடவடிக்கையாகவே பாகிஸ்தான் பயங்கரவாத முகாம்கள் குறிவைத்து தாக்கப்பட்டுள்ளன. நமது ஆயுதப் படைகளை நினைத்து பெருமைப்படுகிறோம்.இந்தியா மீதான எந்தவொரு தாக்குதலுக்கும் பதிலடி கொடுக்கவும், பயங்கரவாதத்தை அதன் வேர்களிலிருந்து ஒழிப்பதற்கும் பிரதமர் மோடி அரசாங்கம் உறுதியாக உள்ளது” -அமித்ஷா, ஒன்றிய உள்துறை அமைச்சர்.

பதில் தாக்குதல்:

நேற்று இரவு, எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு மற்றும் சர்வதேச எல்லையில், பாகிஸ்தான் நடத்திய பீரங்கித் தாக்குதலில் பொதுமக்கள் 7 பேர் பலி, 38 பேர் படுகாயம்! பூஞ்ச் மாவட்டத்தின் கிருஷ்ணா காட்டி, ஷாபூர் மற்றும் மன்கோட் ஆகிய இடங்களிலும், ரஜௌரி மாவட்டத்தில் லாம், மஞ்சகோட் மற்றும் கம்பிர் பிரம்மணா ஆகிய இடங்களிலும் எல்லை தாண்டிய துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக தகவல்!

முதலிடத்தில் குஜராத்

மும்பை அணிக்கு எதிரான போட்டியில் த்ரில் வெற்றி பெற்ற குஜராத் அணி, மீண்டும் புள்ளிப் பட்டியலில் முதலிடத்திற்குச் சென்றது.முதலில் பேட் செய்த மும்பை அணி 156 ரன்களை இலக்காக நிர்ணயித்தது. குஜராத் அணி இலக்கை நோக்கி ஆடிவந்த நிலையில், இடையே மழை குறிக்கிட்டதால் 19 ஓவரில் 147 ரன்கள் எடுக்க வேண்டும் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இந்த இலக்கை எட்டியதால, 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் குஜராத் அணி வெற்றி பெற்றது.

Read Entire Article