ட்ரம்ப் அறிவித்த வரி உயர்வு இன்று முதல் அமல்!

இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் மீதான 25% கூடுதல் வரி இன்று முதல் அமல்.ஜவுளி, ரத்தினங்கள், நகைகள், தோல், இயந்திரங்கள், மரச்சாமான்கள் மற்றும் கடல் உணவு பொருட்களுக்கு இந்த வரிவிதிப்பு பொருந்தும். தங்களது எதிர்ப்பை மீறி ரஷ்யாவில் இருந்து கச்சா எண்ணெய்யை இறக்குமதி செய்து வருவதால் இந்திய பொருட்களுக்கு அமெரிக்கா 50% வரி விதித்துள்ளது.

ரேவந்த் ரெட்டி கேள்வி:

இந்தியாவில் தேர்தலில் போட்டியிடுவதற்கான வயதை 25ல் இருந்து 21 ஆக குறைக்க வேண்டும் என தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி பேச்சு, மேலும்
நமது நாட்டிற்கு இளம் தலைவர்கள் அதிகம் தேவை. 21 வயதில் IAS, S ஆகும்போது அதே வயதில் பேரவைக்கு ஏன் தேர்வு செய்யக்கூடாது”

ராணுவ வீரருக்கு 5 ஆண்டு தடை:

ஸ்ரீநகர் விமான நிலையத்தில் SPICEJET ஊழியரைத் தாக்கிய ராணுவ வீரர் 5 ஆண்டுகள் விமானத்தில் பறக்கத் தடை விதித்தது சிவில் விமான போக்குவரத்து இயக்குநரகம் அறிவித்துள்ளது. நிர்ணயிக்கப்பட்ட 7 கிலோ எடையை விட கூடுதாக லக்கேஜ் வைத்திருந்த அவரிடம், ஸ்பைஸ்ஜெட் ஊழியர் கூடுதல் கட்டணம் கேட்டதால் வாக்குவாதத்தில் ஈடுபட்டு ஊழியர்கள் மீது சரமாரித் தாக்குதலில் ஈடுபட்டுள்ளார்.

ஐபிஎல்-லிருந்து அஸ்வின் ஓய்வு:

ஐபிஎல் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் அறிவிப்பு. கடைசியாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி இருந்தார் அஸ்வின்; ஒவ்வொரு முடிவிலும் புதிய அத்தியாயம் தொடங்கும். மற்ற நாடுகளில் நடைபெறும் கிரிக்கெட் தொடர்களில் விளையாடப் போவதாக X தளத்தில் பதிவு

பதுங்கு குழிகளை அமைக்கிறது துருக்கி!

மத்திய கிழக்கு நாடுகள் மீது இஸ்ரேல் அத்துமீறிய தாக்குதல்களை நடத்தி வருவதன் │எதிரொலியால், குடிமக்களின் பாதுகாப்பை உறுதி| செய்ய துருக்கி அரசு நாடு முழுவதும் பதுங்கு குழிகளை அமைக்கும் பணியை தொடங்கியது. எதிர்காலத்தில் துருக்கி உடன் போர் ஏற்பட வாய்ப்புள்ளதாக | இஸ்ரேலிய அரசு அதிகாரிகள் கூறி வருவது குறிப்பிடத்தக்கது.

வெள்ள பாதிப்பு

ஜம்மு - காஷ்மீரில் பெய்து வரும் கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு, நிலச்சரிவில் சிக்கி 30 பேர் பலி. தோடா, கிஷ்த்வார் மாவட்டங்கள் வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன..மாநிலத்தின் பல்வேறு இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ள நிலையில் மீட்பு பணியில் ராணுவம் களமிறங்கியுள்ளது.

ஸ்டார்ஷிப்பின் 10-வது சோதனை வெற்றி!

எலான் மஸ்க்கின் மீண்டும் பயன்படுத்தக்கூடிய விண்கலத்தை உருவாக்கும் கனவுத் திட்டமான ஸ்டார்ஷிப் விண்கலத் திட்டம் தனது 10-வது சோதனையில் வெற்றி.சமீபத்திய சோதனைகளில் தொடர் தோல்விகளை சந்தித்த நிலையில், 10-வது சோதனை விண்கலம் இந்தியப் பெருங்கடலில் இலக்கை நோக்கி தரையிறங்கியது.

விஜய் மீது வழக்கு

மதுரை தவெக மாநாட்டில் சரத்குமார் என்பவரை பவுன்சர்கள் தூக்கி கீழே வீசிய புகாரில், விஜய் மற்றும் அவரது பவுன்சர்கள் 10 பேர் மீது பெரம்பலூ . குன்னம் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.

புடினுடன் மறைமுக வர்த்தக டீல் பேசிய ட்ரம்ப்!

ரஷ்ய எண்ணெய் வாங்குவதாக இந்தியா மீது 50% வரை வரி விதித்துள்ள அமெரிக்க அரசு, ரஷ்யாவுடன் எரிசக்தி ஒப்பந்தங்கள் குறித்து ஆலோசனை செய்தது தெரியவந்துள்ளது. உக்ரைன் அமைதிப் பேச்சுவார்த்தைக்காக அலாஸ்காவில் புடினைச் சந்தித்தபோது, எரிசக்தி ஒப்பந்தம், ஐஸ் பிரேக்கர் கப்பல்களை வாங்குவது உள்ளிட்டவை குறித்து ட்ரம்ப் ஆலோசித்ததாக தகவல்.

ராப் பாடகர் வேடனுக்கு முன்ஜாமின்

கேரளாவில் ராப் பாடகர் வேடனுக்கு கடும் நிபந்தனைகளுடன் முன்ஜாமின் திருமணம் செய்வதாக கூறி ஏமாற்றியதாக பெண் புகார் அளித்த வழக்கில் முன்ஜாமின் வழங்கியது கேரள உயர்நீதிமன்றம்; காதலில் தோல்விடைந்தவர்கள் எப்போதும் மற்றொருவரின் எதிர்காலத்தை பாழாக்குகிறார்கள் - கேரள உயர்நீதிமன்றம்