Top 10 News Headlines: 4.21 லட்சம் ரேஷன் கார்ட்கள், நயினார் சபதம், வீழ்ந்த வெள்ளி - 11 மணி வரை இன்று

3 months ago 9
ARTICLE AD

4 ஆண்டுகளில் 21 லட்சம் ரேஷன் அட்டைகள் விநியோகம்

திமுக ஆட்சி அமைந்த கடந்த 4 ஆண்டுகளில் பெறப்பட்ட விண்ணப்பங்களில், 98.23% ரேஷன் அட்டைகள் விநியோகிக்கப் பட்டுள்ளதாக உணவுப் பொருள் வழங்கல் துறை அறிவிப்பு.
2025 டிசம்பர் வரை 32,61,153 விண்ணப்பங்கள் பெறப்பட்ட நிலையில், 21,09,629 ரேஷன் அட்டைகளுக்கு ஒப்புதல் தரப்பட்டுள்ளது. மீதமுள்ள விண்ணப்பங்கள் நிலுவையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சொர்க்கவாசல் திறப்பு

வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு வைணவத் தலங்களில் கோலாகலமாக நடைபெற்ற சொர்க்கவாசல் திறப்பு. அதிகாலை முதலே காத்திருந்த பக்தர்கள் கோவிந்தா கோவிந்தா என முழங்கியபடி சாமி தரிசனம் செய்தனர்.

"நானும்.. அண்ணாமலையும் சேர்ந்து.."

"பிரதமர் மோடியும், உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் என்ன நினைத்து NDA கூட்டணியை உருவாக்கினார்களோ, அந்தக் கூட்டணி வெற்றி பெற நானும் அண்ணாமலையும் சேர்ந்து தமிழ்நாட்டில் ஆடப்போகிற ஆட்டம் இனிமேல்தான் இருக்கிறது"
-பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன்

மளமளவென சரிந்த தங்கம் விலை

ஆபரணத் தங்கத்தின் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ.3,360 சரிவு. 1 கிராம் தங்கத்தின் விலை இன்று ரூ.420 குறைந்து சவரன் ரூ.1,00,800க்கு விற்பனையாகிறது. வெள்ளி விலை கிராமுக்கு 23 ரூபாய் குறைந்து 258 ரூபாய்க்கு விற்பனை

அள்ளிக் கொடுத்த மாணவர்கள்

கான்பூர் ஐஐடியில் கடந்த 2000ம் ஆண்டு படித்த முன்னாள் மாணவர்கள் இணைந்து கல்லூரிக்கு ரூ.100 கோடி நன்கொடை அளித்து புதிய சாதனை படைத்துள்ளனர். இந்தியாவில் ஒரு கல்வியாண்டில் படித்த மாணவர்கள் இணைந்து ஒரே நேரத்தில் அதிக நன்கொடை வழங்கியது இதுவே முதல்முறை.

இரண்டாவது இடம் பிடித்த மஹிந்த்ரா

நடப்பாண்டில் ஜனவரி தொடங்கி கடந்த நவம்பர் வரையில், ஒட்டுமொத்தமாக பயணிகள் வாகன விற்பனையில், 5.74 லட்சம் யூனிட்களுடன் மஹிந்த்ரா நிறுவனம் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது. நீண்டகாலமாக அந்த இடத்தை வகித்து வந்த ஹுண்டாய் 4வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. 17.50 லட்சம் யூனிட்களுடன் மாருதி தொடர்ந்து முதலிடம் வகிக்கிறது.

பேருந்தை ரிவர்ஸ் எடுத்ததபோது நடந்த விபரீதம்!

மும்பை: பந்தூப் ரயில் நிலையம் அருகே அரசுப் பேருந்து ரிவர்ஸ் எடுத்தபோது சாலையோரம் நின்றிருந்தவர்கள் மீது மோதியதில் 4 பேர் பரிதாபமாக உயிரிழப்பு. விபத்தில் மேலும் 9 பேர் படுகாயம். ஓட்டுநரை போலீசார் கைது செய்துள்ளனர். உயிரிழந்தோர் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் நிவாரணம் அறிவித்துள்ளது மாநில அரசு.

முன்னாள் பிரதமர் காலமானார்

வங்கதேசத்தின் முதல் பெண் பிரதமர் என்ற பெருமையை பெற்ற கலிதா ஜியா (80) உடல்நலக்குறைவால் காலமானார். 1991-96 மற்றும் 2001-06 என இருமுறை பதவி வகித்து, தனது ஆட்சிக்காலத்தை பூர்த்தி செய்துள்ளார்.

”கம்பீரே பயிற்சியாளராக தொடர்வார்”

கவுதம் கம்பீரை இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளர் பொறுப்பில் இருந்து நீக்கும் எண்ணம் இல்லை என பிசிசிஐ துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா திட்டவட்டம். டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு தனி பயிற்சியாளரை நியமிக்க பிசிசிஐ திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியான நிலையில், கம்பீரின் பதவிக்காலம் (2027) முடியும் வரை அவரே தொடர்வார் என விளக்கம்

கடைசி டி20 போட்டி

இலங்கை அணிக்கு எதிரான டி20 தொடரை முழுமையாக வெல்ல இந்திய மகளிர் அணி தீவிரம்.
5 போட்டிகள் கொண்ட தொடரில் 4-0 என இந்திய அணி முன்னிலை பெற்ற நிலையில் கடைசி டி20 போட்டி திருவனந்தபுரத்தில் இன்று நடைபெற உள்ளது.

Read Entire Article