தாயகம் திரும்பிய பிரதமர் மோடி

அரசு முறைப் பயணமாக அமெரிக்காவிற்குச் 2 நாள் சென்ற நரேந்திர மோடி, நள்ளிரவில் இந்தியா வந்தடைந்தார்.

அமெரிக்காவிலிருந்து அனுப்பபடும் 119 இந்தியர்கள்:

அமெரிக்காவில், சட்டவிரோதமாக குடியேறியதாக, ஏற்கனவே 104 பேர் இந்தியாவுக்கு அனுப்பப்பட்ட நிலையில், மேலும் 119 பேரை அனுப்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அவர்கள் , இன்று இரவு 10 மணியளவில் பஞ்சாப் மாநிலம் அமிர்சதசரசில் தரையிறங்குவர் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், ஏன் குஜராத்தில் தரையிறங்காமல், பஞ்சாப்பில் தரையிறங்க அனுமதிக்கபப்டுகிறது, எங்களை அவமானப்படுத்துகிறீர்களா என்று பஞ்சாப் முதல்வர் பக்வந்த் மன் கேள்வி எழுப்பியுள்ளார்.

மயிலாடுதுறையில் இளைஞர் வெட்டி படுகொலை

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை அருகே பெரம்பூர் காவல் சரகத்திற்குட்பட்ட முட்டம் கிராமத்தில், இன்ஜினியரிங் கல்லூரி மாணவன், பாலிடெக்னிக் படித்து முடித்துவிட்டு வேலை தேடும் இளைஞன் ஆகிய இரண்டு பேரை சாராய வியாபாரிகள் கத்தியால் குத்தி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பையும், பதட்டத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் முன்னதாக தலைமறைவாக இருந்த ராஜ்குமார், தங்கதுரை ஆகிய இருவரை கைது செய்த போலீசார் தப்பியோடிய மூவேந்தனை தேடி வந்த நிலையில் மூவேந்தனையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

பாஜகவின் டப்பிங் வாய்ஸ் இபிஎஸ்- ஸ்டாலின்

பாஜகவை எதிர்த்து வெற்றி பெறுவதில் இந்தியாவிற்கே எடுத்துக்காட்டாக திமுக தலைமையிலான கூட்டணி உள்ளது. கருத்து முரண்பாடுகளால் எங்கள் நட்புறவில் எந்த பாதிப்பும் இல்லை. டெல்லி தேர்தல் முடிவு குறித்து பழனிசாமி அறிக்கை பாஜகவின் அறிக்கை போன்று தான் இருக்கும். பழனிசாமியின் குரலே, பாஜகவிற்கான டப்பிங் குரல் தான். அதிமுக - பாஜக கள்ளக் கூட்டணி என திமுக சொல்வதை அவர் நிரூபிக்கிறார். எடப்பாடி பழனிசாமி தன்னுடையெ தோல்விகளைப் பற்றி சிந்தித்துப் பார்க்க வேண்டும். பெண்களுக்கு எதிரான குற்றங்களில் உடனடியாக நடவடிக்கை எடுத்து வருகிறோம்” என முதலமைச்சர் ஸ்டாலின் விரிவாக பேசியுள்ளார்.

மயிலாடுதுறை உயிரிழப்பு- அண்ணாமலை கண்டனம்:

மயிலாடுதுறை அருகே பெரம்பூர் காவல் சரகத்திற்குட்பட்ட முட்டம் கிராமத்தில், இன்ஜினியரிங் கல்லூரி மாணவன், பாலிடெக்னிக் படித்து முடித்துவிட்டு வேலை தேடும் இளைஞன் ஆகிய இரண்டு பேரை சாராய வியாபாரிகள் கத்தியால் குத்தி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சி அளிப்பதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இது, திமுகவின் முந்தைய இருண்டகால ஆட்சியை விட மோசமாக உள்ளது என விமர்சித்துள்ளார்.

பாம்பன் பாலம்:

தமிழ்நாட்டின் பாம்பன் பகுதியில் கட்டப்பட்டுள்ள புதிய ரயில்வே பாலத்தை, இந்த மாத இறுதிக்கும் திறக்க ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தமிழ்நாட்டின் பாம்பன் பகுதியில் கட்டப்பட்டுள்ள புதிய ரயில்வே பாலத்தை, பிரதமர் மோடி திறந்துவைப்பார் என கூறப்படுகிறது.

லாபம் ஈட்டிய பி.எஸ்.என்.எல்

தொலைத் தொடர்பு சேவைகளை வழங்கி வரும் பொதுத் துறை நுறுவனமான பி.எஸ்.என்.எல் 19 ஆண்டுகளுக்கு பிறகு லாபம் ஈட்டியுள்ளது. 2007 ஆம் ஆண்டிற்கு பிறகு 4ஜி சேவையால், தற்போதைய நிதி ஆண்டின் 3 ஆம் காலாண்டில் ரூ. 262 கோடி லாபம் ஈட்டியுள்ளது.

கும்பமேளாவுக்கு சென்ற வாகனம் விபத்து-10 பேர் பலி:

உத்தர பிரதேசம் பிரயாக்ராஜ்ஜில் நடைபெறும் கும்பமேளாவுக்கு சென்ற வாகனம், பிரயாக்ராஜ் -மிர்சாபூர் சாலையில் மேஜா என்றா இடத்தில் விபத்துக்குள்ளானதில்10 பேர் உயிரிழந்தனர்.

பணவீக்கம் குறைந்தது:

காய்கறிகள் உள்ளிட்டவைகளில் விலை குறைவால், இந்தியாவில் மொத்த விலை பணவீக்கம், ஜனவரியில் 2.31% ஆக குறைந்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இந்தியாவில் ஒலிம்பிக்

2036 ஆம் ஆண்டு, இந்தியாவில் ஒலிம்பிக் போட்டியை நடத்த விண்ணப்பித்து உள்ளோம் என்றும், போட்டியை நடத்த தயாராக இருப்பதாகவும் உள்துறை அமைச்சர் அமித்சா தெரிவித்தார்.