வைகாசி விசாகத்தை முன்னிட்டு தமிழ்நாடு முழுவது முருகன் கோயில்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதி வருகிறது. நேர்த்திக்கடன் செலுத்தியும், மணிக்கணக்கில் காத்திருந்தும் பக்தர்கள் சாமி தரிசனம் மேற்கொண்டு வருகின்றனர்.

தலைமை செயலகத்தில் உள்ள மனிதவள மேலாண்மைத் துறையின் அதிகாரிகள் மற்றும் பணியாளர்களுக்கு ஜூன் 1 முதல் கைரேகை மற்றும் முக அடையாளப் வருகைப் பதிவு கட்டாயம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தவெக அரசு தமிழ்நாட்டில் அதிகரித்துவரும் சட்டம் ஒழுங்கு பிரச்சனைகளின் தீவிரத்தை உணர்ந்து எப்போது செயல்பட போகிறது என கனிமொழி எம்.பி., கேள்வியெழுப்பியுள்ளார்.

சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 உயர்ந்து ஒரு கிராம் ரூ.14,630க்கும், ஒரு சவரன் தங்கம் ரூ.1,17,040க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

திருவண்ணாமலை மற்றும் சுற்றுவட்டாரங்களில் இன்று இரவு பலத்த இடி, மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளதால் கிரிவலம் செல்லும் பக்தர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இடி,மின்னலின்போது மரங்களுக்கு அடியில் நிற்பது, நடப்பதை தவிர்ப்பது அவசியம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நடிகர் அஜித்தின் தாயார் மோகினி வயது மூப்பு காரணமாக காலமானார். பாலவாக்கத்தில் உள்ள அஜித் இல்லத்தில் இறுதிச்சடங்குகள் நடக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்னும் 2 வாரத்தில் தமிழ்நாட்டின் நிதிநிலை தொடர்பான வெள்ளை அறிக்கை வெளியிடப்படும் என நிதியமைச்சர் மரிய வில்சன் தெரிவித்துள்ளார்.

மனைவி மற்றும் உறவினர்கள் தொடர்ந்து துன்புறுத்தல் - கருணைக்கொலை செய்ய அனுமதிக் கேட்டு சூரத்தைச் சேர்ந்த ஒருவர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளார்.

கர்நாடகாவின் புதிய முதலமைச்சராக டி.கே.ஷிவக்குமார் ஜூன் 3ம் தேதி பதவியேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஐபிஎல் தொடரில் நாளை நடைபெறும் இறுதிப்போட்டியில் பெங்களூரு - குஜராத் அணிகள் மோதுகின்றது. இரண்டாவது முறையாக பெங்களூரு கோப்பையை வெல்லுமா என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

வருவாய் துறையில் வரவு, செலவு குறித்த துல்லியமான புள்ளி விவரங்களை தர குறைந்தது ஒரு மாத காலமாவது எனக்கு அவகாசம் தர வேண்டும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

கட்டுமான நிறுவன உரிமையாளரை குண்டர் சட்டத்தில் அடைத்த உத்தரவை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது. ஐபிஎஸ் அதிகாரி அருணுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. பொது அமைதிக்கு பங்கம் ஏற்படுத்தாத வழக்கில் குண்டர் சட்டத்தை பயன்படுத்த கூடாது என தெரிந்தே பயன்படுத்தியுள்ளார் எனவும் விமர்சனம் செய்துள்ளார்.

கேரளாவில் பள்ளி மாணவிகளுக்கு மாதத்தில் 3 நாட்கள் மாதவிடாய் விடுப்பு வழங்கும் புதிய திட்டத்தை நடைமுறைபடுத்த மாநில அரசு முடிவு செய்துள்ளதாக சொல்லப்படுகிறது. அதில் விடுபட்ட பாடங்களை வாரத்தின் இறுதிநாட்கள் நடத்த ஏற்பாடு செய்யப்படும் என அம்மாநில ஆளுநர் ஆர்லேகர் உரையில் தெரிவித்துள்ளார்.