Top 10 Headlines: உயர்ந்த பெட்ரோல், டீசல் விலை.. விரைவில் புல்லட் ரயில்.. 11 மணி வரை நடந்தது என்ன?

2 weeks ago 3
ARTICLE AD

நரம்பியல் மருத்துவர் சுப்பையா கொலை வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் மிகப்பெரிய தவறை செய்துள்ளது. கொலை குற்றவாளிகள் விடுதலை என்ற தீர்ப்பை ரத்து செய்து ஆயுள் தண்டனையை உச்சநீதிமன்றம் உறுதி செய்தது.

சென்னையில் கார்கள் வாங்கி விற்கும் பைனான்சியர்கள் வீடு உள்ளிட்ட 5க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். வங்கிக்கடன் மோசடி தொடர்பாக சோதனை நடந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை அதிமுக தலைமையகத்தில் 82  மாவட்ட செயலாளர்களுடன் எடப்பாடி பழனிசாமி நடத்தும் ஆலோசனைக் கூட்டம் தொடங்கியது.

மே 23ம் தேதி  மாலை 5 மணிக்கு சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஓட்டுநர்கள் பணியின் போது கைப்பேசி பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.  அரசு பேருந்து ஓட்டுநர்கள் சட்டைப் பையில் கைப்பேசி வைக்கக்கூடாது. ஓட்டுநர்கள் கைப்பேசி வைத்திருந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கானா பாடகர்களான பரத், சீனு ஆகியோர்   வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கில் 2 சிறுவர்கள் உட்பட 7 பேரை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.

இந்தியாவின் முதல் புல்லட் ரயில் சேவையை 2027ம் ஆண்டு ஆகஸ்ட் 15ம் தேதி தொடங்க மத்திய ரயில்வே அமைச்சகம் திட்டமிட்டுள்ளது. புல்லட் ரயிலுக்கான தோற்றமும் வெளியிடப்பட்டுள்ளது.

நீட் முறைகேடு தொடர்பாக தேசிய தேர்வு முகமை தலைவர் பிரதீப் குமார் ஜோஷிக்கு நாடாளுமன்ற நிலைக்குழு சம்மன் அனுப்பியுள்ளது. இதுதொடர்பாக விவாதிக்க திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருப்பு  திரைப்படத்தில் இளையராஜா தொடர்பான காட்சிகள் நீக்கப்பட்டுள்ளதாக சொல்ல்லப்படுகிறது. இசை அரசனை  காயப்படுத்தும் எண்ணமோ, களங்கப்படுத்தும் எண்ணமோ படக்குழுவிற்கு சிறிதளவும் இல்லை என படக்குழு வருத்தம் தெரிவித்துள்ளது.

நாம் தமிழர் கட்சியினர் தோல்வியை கண்டு துவண்டு போகிறவர்கள் அல்ல. 2029 நாடாளுமன்ற தேர்தலிலும் 40 தொகுதிகளிலும் தனித்து போட்டியிட்டு, இழந்த வாக்குகளை பெறுவோம் என அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

மதக் குறியீடுகளின் அடிப்படையில்  மேற்கு வங்கத்தில் மம்தா ஆட்சி காலத்தில், கொண்டு வரப்பட்ட அனைத்து நலத்திட்டங்களும் ஜூன் மாதம் முதல் முழுமையாக ரத்து செய்யப்படுவதாக பாஜக அரசு அறிவித்துள்ளது

மீண்டும் பெட்ரோல், டீசல் விலை உயர்வால் மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். பெட்ரோல் விலை லிட்டருக்கு 79 காசுகள், டீசல் விலை லிட்டருக்கு 86 காசுகள் உயர்வு கண்டுள்ளது. சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.104.46க்கும், ஒரு லிட்டர் டீசல் ரூ.96.11க்கும் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

கர்நாடகாவுக்கு சுற்றுலா சென்ற இடத்தில் யானைகளுக்கு இடையே நடந்த சண்டையில், சென்னையைச் சேர்ந்த பெண் பரிதாபமாக உயிரிழந்ததார். இதில் அந்த பெண் கண்கள் தானமாக வழங்கப்பட்டுள்ளது.

Read Entire Article