Tomato And Onion Price : ஒரே நாளில் பாதியாக குறைந்த தக்காளி விலை.! ஒரு கிலோ இவ்வளவு தானா.? இல்லத்தரசிகள் குஷி

1 month ago 6
ARTICLE AD

சமையலும் காய்கறிகளும்

சமையல் என்றாலே அனைவருக்கும் நினைவிற்கு வருவது காய்கறிகள் தான். எனவே என்ன தான் சிக்கன், மட்டன், மீன் என அசைவ உணவுகள் தயாரித்தாலும் அதிலும் காய்கறிகளின் பங்கு முக்கியமானது. அந்த வகையில் காய்கறி சந்தையில் தக்காளி மற்றும் வெங்காயத்தை முக்கியத்துவம் கொடுத்து பொதுமக்கள் வாங்கி செல்வார்கள். எனவே சமையலில் ருசியைக்கொடுக்க கூடியது தக்காளி மற்றும் வெங்காயம். ஆனால் இந்த இரண்டு காய்கறிகளின் விலை உயர்ந்தால் மட்டும் இல்லத்தரசிகளின் நிலை அதோ கதிதான். அந்த வகையில் தக்காளி மற்றும் வெங்காயத்தின் விலையானது தங்கத்திற்கு இணையாக திடீரென புதிய உச்சத்தை தொடும். அடுத்த சில வாரங்களிலேயே அடிமாட்டு விலைக்கு தக்காளி, வெங்காயப் விலையானது விற்பனையாகும்.

உச்சத்தை தொட்ட தக்காளி விலை

இந்த நிலையில் தக்காளி விலையானது கடந்த சில தினங்களாக உயர தொடங்கியது. ஒரு கிலோ 60 முதல் 70 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. இதனால் இல்லத்தரசிகள் அதிர்ச்சி அடைந்தனர். கிலோ கணக்கில் பை நிறைய தக்காளியை வாங்கி சென்ற மக்கள் குறைவான அளவே வாங்கும் நிலை உருவானது. இந்த நிலையில் தற்போது தக்காளி வரத்து அதிகரித்ததையடுத்து விலையானது குறைந்துள்ளது. அந்த வகையில் நேற்றைய தினம் ஒரு கிலோ 50 முதல் 60 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட தக்காளி விலை இன்று ஒரு கிலோ 35 முதல் 30 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. 3 முதல் 3அரை கிலோ தக்காளி 100 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

இன்றைய காய்கறி விலை என்ன.?

கோயம்பேட்டில் இன்றைய காய்கறி விலையை பொறுத்த வரை முருங்கைக்காய் ஒரு கிலோ 50ரூபாய்க்கும், உருளைக்கிழங்கு ஒரு கிலோ 20 ரூபாய்க்கும், பீட்ரூட் ஒரு கிலோ 40, கேரட் ஒரு கிலோ  30 ரூபாய், பச்சை மிளகாய் ஒரு கிலோ 40 ரூபாய், கத்திரிக்காய் தரத்தை பொறுத்து 30 முதல் 40 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெண்டைக்காய் 50 முதல் 70 ரூபாய்க்கும், பாகற்காய் 60 ரூபாய்க்கும், சௌசௌ   40 ரூபாய்க்கும், சின்ன வெங்காயம் 55 ரூபாய்க்கும், இஞ்சி ஒரு கிலோ 120 ரூபாய்க்கும், எழுமிச்சைப்பழம் ஒரு கிலோ 250 ரூபாய்க்கும், பீன்ஸ் ஒரு கிலோ   100 ரூபாய்க்கும், அவரைக்காய் ஒரு கிலோ 70 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.

காய்கறி விலை அதிகரிப்பு

குடைமிளகாய் 60 ரூபாய்க்கும், வெள்ளரிக்காய் 30 ரூபாய்க்கும், மாங்காய் 20 ரூபாய்க்கும், காலிஃப்ளவர் ஒரு மூட்டை 180 ரூபாய்க்கும், சேப்பங்கிழங்கு 25 ரூபாயக்கும், பரங்கிக்காய் 15 ரூபாய்க்கும், வாழைக்காய் ஒன்று 10 ரூபாய்க்கும், பெரிய வெங்காயம் 25 முதல் 30 ரூபாய்க்கும், முட்டைக்கோஸ் 30 ரூபாய்க்கும், சுரைக்காய் 30 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.

Read Entire Article