மத்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணைய ஒப்பந்தப்படி தேசிய நெடுஞ்சாலைகளில் கடந்த 1992-ம் ஆண்டு அமைக்கப்பட்ட தேசிய நெடுஞ்சாலைகளுக்கு ஏப்ரல் மாதமும், 2008 ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட சாலைகளுக்கு செப்டம்பர் மாதமும் கட்டணம் உயர்த்தப்படுகிறது. இந்நிலையில் மார்ச் 31 நள்ளிரவு 12 மணி முதல் சுங்கச்சாவடிகளில் 5 முதல் 10 விழுக்காடு வரை கட்டணத்தை உயர்த்தி வசூலிக்குமாறு தேசிய நெடுஞ்சாலை ஆணையம் சுற்றறிக்கை அனுப்பி இருந்தது. அந்தவகையில் தமிழகத்தில் உள்ள 36 சுங்கச் சாவடிகளில் கடந்த ஏப்ரல் மாதம் உயர்த்தப்பட வேண்டிய சுங்க கட்டணம் உயர்த்தப்படவில்லை.

இந்த கட்டண உயர்வு இன்று முதல் அமலுக்கு வந்தது. அதன்படி பரனூர் மற்றும் ஆத்தூர் ஆகிய சுங்கச்சாவடிகளிலும் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.

பரனூர் சுங்கச்சாவடி கட்டண உயர்வு:

கார், ஜீப், வேன் மற்றும் 3 சக்கர வாகனங்கள் ஒருமுறை பயணம் செய்ய ரூ.70, ஒரே நாளில் சென்று திரும்ப ரூ.110, மாதாந்திர கட்டணம் ரூ.2,395.

இலகுரக சரக்கு வாகனங்கள் சிற்றுந்துகளுக்கு ஒருமுறை பயணம் செய்ய ரூ.115 ஒரே நாளில் சென்று திரும்ப ரூ.175.

பேருந்து மற்றும் சரக்கு வாகனங்கள் ஒருமுறை பயணம் செய்ய ரூ.245, ஒரே நாளில் சென்று திரும்ப ரூ.365 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

3 அச்சுகள் கொண்ட வர்த்தக வாகனங்கள் ஒருமுறை பயணம் செய்ய ரூ.265, ஒரே நாளில் சென்று திரும்ப ரூ.400 கட்டணம் ஆகும்.

4 மற்றும் 6 சக்கர சரக்கு வாகனங்கள் ஒருமுறை பயணம் செய்ய ரூ.380, ஒரே நாளில் சென்று திரும்ப ரூ.570 கட்டணம்.

கனரக கட்டுமான வாகனங்கள் 7 மற்றும் கூடுதல் சக்கர வாகனங்கள் ஒருமுறை பயணம் செய்ய ரூ.465, ஒரே நாளில் சென்று திரும்ப ரூ.695 கட்டணம் ஆகும்.

உள்ளூர் கார்கள் ஒரு சுங்கச்சாவடியை கடக்க மாதம் ரூ.340 உத்தேச கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது என தேசிய நெடுஞ்சாலை ஆணையம் சுற்றறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

ஆத்தூர் சுங்கச்சாவடி கட்டண உயர்வு:

இதேபோல் ஆத்தூர் சுங்கச்சாவடியில் கார், ஜீப், வேன் மற்றும் 3 சக்கர வாகனங்கள் ஒருமுறை பயணம் செய்ய ரூ.70, ஒரே நாளில் சென்று திரும்ப ரூ.105, மாதாந்திர கட்டணம் ரூ.2,350.

இலகுரக சரக்கு வாகனங்கள் சிற்றுந்துகளுக்கு ஒருமுறை பயணம் செய்ய ரூ.115 ஒரே நாளில் சென்று திரும்ப ரூ.170. மாதாந்திர கட்டணம் ரூ. 3,795.

பேருந்து மற்றும் சரக்கு வாகனங்கள் ஒருமுறை பயணம் செய்ய ரூ.240, ஒரே நாளில் சென்று திரும்ப ரூ.360 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மாதாந்திர கட்டணம் ரூ. 7,955.

3 அச்சுகள் கொண்ட வர்த்தக வாகனங்கள் ஒருமுறை பயணம் செய்ய ரூ.265, ஒரே நாளில் சென்று திரும்ப ரூ.400 கட்டணம் ஆகும். மாதாந்திர கட்டணம் ரூ. 8,680

4 மற்றும் 6 சக்கர சரக்கு வாகனங்கள் ஒருமுறை பயணம் செய்ய ரூ.380, ஒரே நாளில் சென்று திரும்ப ரூ.570 கட்டணம், மாதாந்திர கட்டணம் ரூ. 12,475

கனரக கட்டுமான வாகனங்கள் 7 மற்றும் கூடுதல் சக்கர வாகனங்கள் ஒருமுறை பயணம் செய்ய ரூ.465, ஒரே நாளில் சென்று திரும்ப ரூ.695 கட்டணம் ஆகும். மாதாந்திர கட்டணம் ரூ. 15,190

உள்ளூர் கார்கள் ஒரு சுங்கச்சாவடியை கடக்க மாதம் ரூ.340 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.