Toll Fee Hikeவாகன ; ஓட்டிகளுக்கு ‘ஷாக்’: நள்ளிரவு முதல் எகிறியது சுங்க கட்டணம் - முழு பட்டியல் இதோ!

2 weeks ago 3
ARTICLE AD

விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள ஐந்து சுங்கச்சாவடிகளில் சுங்க கட்டணம் நள்ளிரவு முதல் கட்டணம் உயர்த்தபடுகிறது. அதன் படி அதிகபட்சமாக கெங்கராம்பாளையம் சுங்கச்சாவடியில் 5 ரூபாய் முதல் 315 ரூபாய் வரை கட்டணம் உயர்த்தப்படுவது நள்ளிரவு முதல் அமலுக்கு வருகிறது.

தமிழகத்தில் செயல்பட்டு வரும் 60 சுங்கச்சாவடிகளில் சுங்க கட்டணம் நள்ளிரவு முதல் உயர்விற்கு வருகிறது. விழுப்புரம் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் தென்னமாதேவி, கெங்கராம்பாளையம், சேலியமேடு, ஆத்தூர், நங்கிலி கொண்டான் ஆகிய ஐந்து சுங்கச்சாவடிகளில் நள்ளிரவு முதல் கட்டணம் உயருகிறது. அதன் படி விழுப்புரம் புதுச்சேரி செல்லும் சாலையான கெங்கராம்பாளையம் பகுதியில் இயங்கி வரும் சுங்கச்சாவடியில் நள்ளிரவு முதல் 5 ரூபாய் முதல் 315 ரூபாய் வரை கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.

கெங்கராம்பாளையம் பகுதியில் இயங்கி வரும் சுங்கச்சாவடியில் கார், ஜீப், வேன் ஒருமுறை பயணிக்க 60 ரூபாயும் இருமுறை பயணிக்க 90 ரூபாயும் மாதாந்திர கட்டணமாக 1195 லிருந்தது 50 ருபாய் உயர்த்தி 2045 உயர்த்தப்பட்டுள்ளது.இலகுரக வாகனங்கள் ஒருமுறை செல்ல 95 ரூபாயாக இருந்தது 100 ரூபாயாகவும், இருமுறை செல்ல 145 ரூபாயாக இருந்தது 150 ரூபாயாகவும் மாதாந்திர கட்டணமாக 3225 லிருந்து 80 ரூபாய் உயர்த்தி 3305 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.

டிரக் மற்றும் பேருந்துகளுக்கு ஒருமுறை செல்ல 205 ரூபாயாக இருந்தது 210 ரூபாயாகவும் இருமுறை செல்ல 305 லிருந்து 310 ரூபாயாகவும் மாதாந்திர கட்டணமாக 6755லிருந்து 170 ரூபாய் அதிகரித்து 6925 உயர்த்தி வசூலிக்கபடுகிறது. மூன்று அச்சில் கொண்ட வாகனங்கள் ஒருமுறை செல்ல 220 ரூபாயாக இருந்தது 225 ஆக உயர்த்தபட்டுள்ளது. இருமுறை செல்ல 330 லிருந்து 340 ரூபாயாகவும் மாதாந்திர கட்டணமாக 7370 ரூபாய் லிருந்து 180 அதிகரித்து 7550 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. ஆறு அச்சுகள் கொண்ட வாகனங்கள் ஒருமுறை செல்ல 320 லிருந்து 325 ரூபாயாகவும் இருமுறை செல்ல 475 லிருந்து 490 ரூபாயாகவும் மாதகட்டணம் 10595 லிருந்து 260 ரூபாய் உயர்த்தி 10855 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளனது. பல அச்சு கொண்ட வாகனங்கல் ஒரு முறை பயணிக்க 385 லிருந்து 395 ரூபாயாகவும், இருமுறை பயணிக்க 580 லிருந்து 595 ஆகவும் மாதகட்டணம் 12900 லிருந்து 315 ரூபாய் உயர்த்தி 13215 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

தென்னமாதேவி பகுதியில் இயங்கி வரும் சுங்கச்சாவடியில் நள்ளிரவு முதல் 5 ரூபாய் முதல் 195 ரூபாய் வரை கட்டணம் உயர்த்தப்படவுள்ளது. அதன்படிகார், ஜீப், வேன் ஒருமுறை பயணிக்க 35 ரூபாயும் இருமுறை பயணிக்க 50 ரூபாயிலிருந்து 55 ரூபாயாகவும், மாதாந்திர கட்டணமாக 1165 லிருந்தது 30 ருபாய் உயர்த்தி 1195 ஆக வசூலிக்கப்படுகிறது. இலகுரக வாகனங்கள் ஒருமுறை செல்ல 55 ரூபாயாக இருந்தது 60 ரூபாயாகவும், இருமுறை செல்ல 85 ரூபாயும், மாதாந்திர கட்டணமாக 1880 லிருந்து 45 ரூபாய் உயர்த்தி 1925 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. டிரக் மற்றும் பேருந்துகளுக்கு ஒருமுறை செல்ல 120 ரூபாயும், இருமுறை செல்ல 175 லிருந்து 180 ரூபாயாகவும் மாதாந்திர கட்டணமாக 3935 லிருந்து 105 அதிகரித்து 4040 உயர்த்தி வசூலிக்கபடுகிறது.

மூன்று அச்சில் கொண்ட வாகனங்கள் ஒருமுறை செல்ல 130 ரூபாயும் இருமுறை செல்ல 195 லிருந்து 200 ரூபாயாகவும் மாதாந்திர கட்டணமாக 4295 லிருந்து 110 அதிகரித்து 4405 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. ஆறு அச்சுகள் கொண்ட வாகனங்கள் ஒருமுறை செல்ல 185 லிருந்து 190 ரூபாயாகவும் இருமுறை செல்ல 280 லிருந்து 285 ரூபாயாகவும் மாதகட்டணம் 6175 லிருந்து 155 ரூபாய் உயர்த்தி 6330 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளனது. பல அச்சு கொண்ட வாகனங்கல் ஒரு முறை பயணிக்க 225 லிருந்து 230 ரூபாயாகவும், 340 லிருந்து 345 ஆகவும் மாதகட்டணம் 7515 லிருந்து 195 உயர்த்தி 7710 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.

Read Entire Article