தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம், 2025ஆம் ஆண்டுக்கான இரண்டாம் நிலை காவலர், இரண்டாம் நிலை சிறைக்காவலர் மற்றும் தீயணைப்பாளர்களுக்கான பொதுத் தேர்வு குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கு விண்ணப்பிப்பது எப்படி, முக்கிய தேதிகள், தேர்வு விவரம், காலி இடங்கள் உள்ளிட்ட பல விவரங்கள் குறித்துக் காணலாம்.
இரண்டாம் நிலை காவலர், இரண்டாம் நிலை சிறைக்காவலர் மற்றும் தீயணைப்பாளர்கள் பணியிடங்களுக்கு தேர்வர்கள், நாளை (ஆகஸ்ட் 22) முதல் செப்டம்பர் 21ஆம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். இதில் விண்ணப்பிக்கும் தேர்வர்களுக்கு, நவம்பர் 9ஆம் தேதி எழுத்துத் தேர்வு நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
என்னென்ன பதவிகள்?
இரண்டாம் நிலைக் காவலர்- 2833 பணி இடங்கள்
இரண்டாம் நிலை சிறைக் காவலர்- 180 பணி இடங்கள் (142 + 38)
தீயணைப்பாளர் - 631 பணி இடங்கள்
மொத்தம்- 3,665 பணியிடங்கள்
சிறப்பு ஒதுக்கீடும் உண்டு.
ஊதியம் எவ்வளவு?
ரூ.18,200 – ரூ.67,100
கல்வித் தகுதி என்ன?
குறைந்தபட்சம் 10ஆம் வகுப்பு அல்லது அதற்கு இணையான தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு முறை
தமிழ் மொழி தகுதித் தேர்வு
முதன்மை எழுத்துத் தேர்வு
சான்றிதழ் சரிபார்த்தல்
உடற்கூறு அளத்தல்
உடல்திறன் போட்டிகள்
சிறப்பு மதிப்பெண்கள்
தேர்வுக் கட்டணம்
இந்த தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க ரூ.250 கட்டணத்தை ஆன்லைன் மூலமாக செலுத்த முடியும்.
விண்ணப்பிப்பது எப்படி?
விண்ணப்பதாரர்கள், தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதள முகவரியான www.tnusrb.tn.gov.in என்ற தளத்தில் ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும்.
[email protected]
விண்ணப்பம் தொடர்பான சந்தேகங்களுக்கு: 044 – 28413658, 9499008445, 9176243899, 9789035725
[email protected]
வேலை, காலிப் பணியிடங்கள், தேர்வு முறை, இட ஒதுக்கீடு குறித்த முழு அறிவிக்கையை https://www.tnusrb.tn.gov.in/pdfs/Notification_CR_2025.pdf என்ற இணைப்பில் காணலாம்.