TNPSC: அரசு உதவி வழக்கறிஞர் பணிக்கான மறுதேர்வு அடுத்த ஆண்டு நடத்தப்படும் என தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.

தேர்வை ரத்து ரத்து செய்த டி.என்.பி.எஸ்.சி.,

கடந்த டிசம்பர் 14-ம் தேதி இரண்டாம் நிலை அரசு உதவி வழக்கு நடத்துநர் பதவிக்காக, நடத்தப்பட்ட தேர்வு ரத்து செய்யப்படுவதாக டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. தொழில்நுட்ப முறைகேடு காரணமாக தேர்வாளர்கள் சிரமப்பட்டதை தொடர்ந்து, மறுதேர்வு நடத்த கோரிக்கைகள் எழுந்தன. அதன்படு, அடுத்த ஆண்டு இந்த பதவிக்கான மறுதேர்வு நடைபெறும் என டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது.

டி.என்.பி.எஸ்.சி., விளக்க அறிக்கை:

டிஎன்பிஎஸ்சி தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர் ஜான் லூயிஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “குற்ற வழக்கு தொடர்வு துறையில் உள்ள அரசு உதவி வழக்கு நடத்துநர், நிலை-II பதவியின் நேரடி நியமனத்திற்கான அறிவிக்கை 13.09.2024 அன்று தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டது. இத்தெரிவிற்கான கணினிவழித் தேர்வு 14:122024 அன்று பிற்பகல் 15 மாவட்ட மையங்களில் 4186 தேர்வர்களுக்கு நடத்தப்பட்டது. சில தேர்வு மையங்களில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறுகளினால் சில தேர்வர்களால் இந்த தேர்வினை முழுமையாக முடிக்க இயலவில்லை. இதனைத் தொடர்ந்து தேர்வர்களிடமிருந்து மறுதேர்வு நடத்திட வேண்டி தேர்வாணையத்தில் கோரிக்கை பெறப்பட்டது.

தேர்வர்களின் கோரிக்கையினை தேர்வாணையம் முறையாக பரிசீலனை செய்து, அதனை ஏற்று, மேற்கண்ட பதவிக்காக 14.12.2024 பிற்பகல் நடைபெற்ற கணினிவழித் தேர்வினை தேர்வாணையம் ரத்து செய்கிறது. மேலும், ஏற்கனவே இத்தேர்விற்காக தேர்வாணையத்தால் அனுமதிக்கப்பட்ட தேர்வர்களுக்கு. மறுதேர்வு 22.02.2025 அன்று ஒளிக்குறி உணரி (OMR) முறையில் தேர்வாணையத்தால் நடத்தப்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது. மறுதேர்வுக்கான நுழைவுச்சீட்டு, ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட தேர்வர்களுக்கு மட்டும். பின்னர், தனியே தேர்வாணைய இணையத்தளத்தில் வெளியிடப்படும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.