ஒருங்கிணைந்த தொழில்நுட்பப் பணிகள் துறையில், உதவி பொறியாளர் உள்ளிட்ட நேர்முகத் தேர்வு அல்லாத பதவிகளுக்கு விண்ணப்பிக்க டிஎன்பிஎஸ்சி அழைப்பு விடுத்துள்ளது. இதன்கீழ் 45 பதவிகளுக்கு 461 காலிப் பணியிடங்களை நிரப்பத் திட்டமிடப்பட்டு உள்ளது.

இதுகுறித்து டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

’’ஒருங்கிணைந்த தொழில்நுட்பப் பணிகள் தேர்வு (நேர்முகத் தேர்வு அல்லாத பதவிகள்) 2026 ஆண்டுத் திட்டத்தில் குறிப்பிட்டுள்ளபடி அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

உதவி பொறியாளர் (அமைப்பியல், மின்னியல், வேளாண் பொறியியல்) உள்ளிட்ட 45 பதவிகளுக்கான 461 காலிப் பணியிடங்களை நிரப்ப, ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகள் தேர்வு (நேர்முகத் தேர்வு அல்லாத பதவிகள்)-க்கான அறிவிக்கை தேர்வாணையத்தின் ஆண்டுத் திட்டத்தில் குறிப்பிட்டுள்ளபடி இன்று (20.05.2026) வெளியிடப்பட்டுள்ளது.

மே 27 முதல் விண்ணப்பிக்கலாம்

தேர்வர்கள் 27.05.2026 முதல் 25.06.2026 வரை இணைய வழியில் விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம். தேர்வர்கள் தேர்வுக்கட்டணத்தை UPI மூலமாகவும் செலுத்தலாம்.

தேர்வு எப்போது?

கணினி வழித் தேர்வு நடைபெறும். நாள் மற்றும் நேரம் பின்னர் அறிவிக்கப்படும் என்று டிஎன்பிஎஸ்சி செயலாளர் பனோத் ம்ருகேந்தர் லால் தெரிவித்துள்ளார்.

தேர்வர்கள் https://tnpsc.gov.in/document/tamil/CTS%20(Non%20Interview)%20Tamil%20Final_.pdf என்ற இணைய முகவரியை க்ளிக் செய்து அறிவிக்கையை க்ளிக் செய்து காணலாம்.